Advertisment

சூரியன், குரு, சுக்கிரன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்?

/idhalgal/balajothidam/what-will-happen-if-sun-guru-and-venus-are-placed-there

சூரியன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். பலருக்கும் நன்மைகள் செய்வார். குறைவாக பேசுவார். பலரின் வேலைகளையும் தானே ஏற்றுக்கொண்டு செய்வார். பணத்தைச் சேமிப்பார். நல்ல குணங்கள் உள்ளவராக இருப்பார். பலரும் அவரைப் பாராட்டுவார்கள்.

Advertisment

சூரியன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள். கண் ணில் பிரச்சினை இருக்கும். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார்.பணம் சம்பாதிப்பார்.

Advertisment

gg

சூரியன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாத

சூரியன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். பலருக்கும் நன்மைகள் செய்வார். குறைவாக பேசுவார். பலரின் வேலைகளையும் தானே ஏற்றுக்கொண்டு செய்வார். பணத்தைச் சேமிப்பார். நல்ல குணங்கள் உள்ளவராக இருப்பார். பலரும் அவரைப் பாராட்டுவார்கள்.

Advertisment

சூரியன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள். கண் ணில் பிரச்சினை இருக்கும். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார்.பணம் சம்பாதிப்பார்.

Advertisment

gg

சூரியன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகர் படிப் பிற்காக வெளியூர் செல்வார். கஷ்டப்பட்டு படிப்பார். தாத்தா, தந்தையின் பெயரைக் காப்பாற்றுவார். சிலர் இசைக் கலைஞர்களாக இருப்பார்கள். சிலர் இசை நுணுக்கங்கள் நன்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள். சிலர் பல சாஸ்திரங்களையும் கற்றவர் களாக இருப்பார்கள்.

சூரியன், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். தாத்தா, தந்தைக்கு மரியாதை தருவார். மனதில் சந்தோஷம் இருக்கும். பணம் சம்பாதிப்பார். வாகனம் இருக்கும். பல வாகனங்களையும் ஓட்டத் தெரிந்தவராக இருப்பார். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள்.

சூரியன், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் அரசாங்கத்தில் பெரிய பதவி களில் இருப்பார்கள். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலரின் வாரிசு கள் பெயர், புகழுடன் இருப்பார்கள். ஜாதகர் நன்கு பணம் சம்பாதிப்பார். மனைவியால் சந்தோஷம் இருக்கும்.

சூரியன், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பயணம் செய்து பணம் சம்பாதிப்பார். சிலருக்கு காலில் காயம் ஏற்படும். பகைவர்கள் குறைவாக இருப்பார்கள். சிலருக்கு பெண் மோகம் அதிகமாக இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார்.

சூரியன், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், அழகான மனைவி இருப் பாள். ஜாதகர் நிறைய படித்த வராக இருப்பார். நல்ல பண வரவு இருக்கும். படிப்பிற்காக வும், பணிக்காகவும் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வாகனம், வீடு இருக்கும்.

சூரியன், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் விவசாயிகளாக இருப்பார்கள். சிலர் நிலச்சுவான்தாராக இருப்பார்கள். சிலர் பண்டிதர்களாக இருப்பார்கள். சிலர் புரோகிதர்களாக இருப் பார்கள். சிலருக்கு சுக்கிரன் சரியில்லையெனில் வயிற்றில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் தாத்தா, தந்தை சம்பாதித்த சொத்துகளை அனுபவிப்பார். நன்கு படித்தவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். தர்ம காரியங்களில் ஈடுபடு வார். பல நல்ல செயல்களைச் செய்வார். அதற்காக பணத் தைச் செலவழிப்பார்.

சூரியன், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். அரசியலில் பெரிய பதவியில் இருப்பார். நேர்மையான நீதிபதி யாக இருப்பார். நல்ல அரசியல்வாதியாக இருப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வாரிசுகளால் சந்தோஷம் உண்டாகும்.

சூரியன், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். நல்ல பணவசதி இருக்கும். வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். பெயர், புகழ் இருக்கும். பலரும் ஜாதகரைப் பாராட்டுவார்கள்.

சூரியன், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், சுப செலவுகள் அதிகமாக இருக்கும். கண்ணில் பிரச்சினை இருக்கும். மனைவி நல்லவளாக இருப்பாள். பயணம் செய்யவேண்டிய நிலை இருக்கும். சிலர் சுயநலவாதிகளாக இருப் பார்கள்.

செல்: 98401 11534

bala260124
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe