ந்திரன், சுக்கிரன், சனி லக்னத்திலிருந்தால், ஜாதகர் எழுத்தாளராக இருப்பார். அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பணக்காரராக இருப்பார். சிலர் புரோகிதர்களாக இருப்பார்கள். சிலர் கள்ள உறவுடன் இருப்பார்கள். தைரியசாலியாக இருப்பார்கள். கடுமையான உழைப்பாளியாக இருப்பார்கள்.

சந்திரன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்திலிருந்தால், சிறந்த பேச்சாற்றல் இருக்கும். ஜாதகர் திறமை சாலியாக இருப்பார். சூழ்நிலைக்கேற்றபடி பேசுவார். இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். குடும்பத்தி னர் ஏதாவது பிரச்சினையைத் தருவார்கள். ஜாதகர் எப்போதும் இளமையாக இருக்க விரும்புவார்.

சந்திரன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்திலிருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். நல்ல பணவசதி இருக்கும். காம சிந்தனைகள் இருக்கும். சீதளம் பிடிக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். சிலருக்கு தோல் நோய் இருக்கும். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும்.

சந்திரன், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்திலிருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பல வகைகளான வாகனங்கள் இருக்கும். வீட்டில் பல விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும். வாரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்க்கு உடல்நல பாதிப்பு ஏற்படும்.

Advertisment

சந்திரன், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்திலிருந்தால், ஜாதகர் படிப்பாளியாக இருப்பார். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஜாதகருக்கு அதிகமான பெண் குழந்தைகள் இருப்பார்கள். சிலர் பலகலைகள் தெரிந்தவர்களாக இருப்பார்கள். சிலர் இசைக் கலைஞர்களாகவோ, பாடகராகவோ இருப்பார்கள். சிலர் நடிப்பாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.

ss

சந்திரன், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்திலிருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். சிறுநீரகத்தில் பிரச்சினை இருக்கும். நல்ல பணவசதி இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். சிலர் மிகவும் சிக்கனமாக வாழ்வார்கள். துணிச்சல் குணம் இருக்கும். சிலர் பேச்சாற்றலை வைத்து, பணம் சம்பாதிப்பார்கள்.

சந்திரன், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்திலிருந்தால், அழகான மனைவி இருப்பாள். சிலருக்கு திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். சிலர் சிறந்த கலைஞர்களாக இருப்பார்கள். சிலருக்கு வாய்வு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும்.

சந்திரன், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்திலிருந்தால், சிலருக்கு மனநோய் இருக்கும். இளமையில் சீதளம் பிடிக்கும். சிலருக்கு தூக்கம் சரியாக வராது.வீட்டின் ஒருபகுதியில் பள்ளமிருக்கும். தெற்கு திசையில் தண்ணீர் இருக்கும். அதனால், அதிகமான சிந்தனைகள் இருக்கும். சிலர் மந்திர, தந்திர விஷயங்கள் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

சந்திரன், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்திலிருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பகட்டான ஆடைகளை அணிவார்கள். தைரியமாக பேசுவார்கள். தனக்கு ஆதாயம் கிடைக்கும் விஷயத்தை மட்டுமே பேசுவார்கள்.

தாயை ஏமாற்றி, பணம் பறிப்பார்கள்.

சந்திரன், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்திலிருந் தால், இளம்வயதில் கஷ்டங் கள் இருக்கும். ஜாதகர் பலவிதமான தொழில்களை யும் செய்வார். பின்னர் நல்ல பணவரவு இருக்கும். பெயர், புகழ் இருக்கும். சிலருக்கு மனநோய் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். வாரிசுகள் நன்றாக இருப்பார் கள். நல்ல மனைவி அமைவாள்.

சந்திரன், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். மனதில் நினைப் பதைச் செயல்படுத்துவதில் பிரச்சினைகள் இருக்கும். தூக்கம் சரியாக வராது. வயிற்றில் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் ஆடம்பர மாக வாழ்வார்.

சந்திரன், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் பேச்சு இருக்கும். ஆடம்பர வாழ்க்கை இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் வெளியே அதிகமாக சுற்றுவார். வீண்செலவுகள் இருக்கும். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். பிற்பகுதி நன்றாக இருக்கும். நல்ல பண வரவு இருக்கும். அன்னையின் ஆசீர்வாதம் இருக்கும்.

செல்: 98401 11534