ந்திரன், குரு, சனி லக்னத்திலிருந் தால், உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் சாதுரியமான மனிதராக இருப்பார். பெரிய பதவியிலிருப்பார்.குடும்பத்தில் சந்தோஷமிருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

Advertisment

சந்திரன், குரு, சனி 2-ஆம் பாவத்திலிருந்தால், ஜாதகர் சிறந்த பேச்சாற்றல் உள்ளவராக இருப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சகோதரர்களுடன் உள்ள உறவில் சில பிரச்சினைகள் இருக்கும். பணவசதி இருக்கும். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள்.

Advertisment

அன்னையின் உடல்நலத்தில் பாதிப்பு இருக்கும். ஜாதகர் பயணங்கள் மேற்கொண்டு பணம் சம்பாதிப்பார்.

ss

சந்திரன், குரு, சனி 3-ஆம் பாவத்திலிருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். இளம்வயதில் படிப்பிற்காக வெளியூர் செல்லவேண்டியதிருக்கும்.சீதளம் பிடிக்கும். சகோதரர்களில் ஒருவரால் எப்போதும் பிரச்சினை இருக்கும்.

Advertisment

சந்திரன், குரு, சனி 4-ஆம் பாவத்திலிருந்தால், பணவசதி இருக்கும். நல்ல வீடு இருக்கும். பிள்ளை கள் நன்றாக இருப்பார் கள். சிலர் அரசியல் வாதியாக இருப்பார் கள். சிலரின் அன்னை கள் குடும்பத்தை நிர்வாகம் செய்வார் கள்.தந்தை பயனற்றவராக இருப்பார். சிலர் பண முதலீடு சம்பந்தப் பட்ட தொழிலில் இருப்பார்கள்.

சந்திரன், குரு, சனி 5-ஆம் பாவத்திலிருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பார். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். சிலருக்கு வயிற்றில் நோய் இருக்கும். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள்.

சந்திரன், குரு, சனி 6-ஆம் பாவத்திலிருந்தால், சிலருக்கு காலில் பிரச்சினை இருக்கும். பண வசதி இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். சிலருக்கு உடல்நலத்தில் பாதிப்பு இருக்கும்.

சந்திரன், குரு, சனி 7-ஆம் பாவத்திலிருந்தால், அழகான மனைவி அமைவாள். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

ஜாதகருக்கு சகோதரர்களுடன் உள்ள உறவு நன்றாக இருக்கும். சிலர் தொழிலதிபராக இருப்பார்கள்.

சந்திரன், குரு, சனி 8-ஆம் பாவத்திலிருந்தால், சிலருக்கு மனநோய் இருக்கும். சிலர் பயணங்கள்செய்து, பணத்தைச் சம்பாதிப் பார்கள். சிலருக்கு இளம்வயதில் உடல்நல பாதிப்பு இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சந்திரன், குரு, சனி 9-ஆம் பாவத்திலிருந்தால், பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். சொத்து கள் இருக்கும். ஜாதகர் புனிதப்பயணம் மேற்கொள்வார். தர்ம காரியங்களைச் செய்வார். மனைவி நல்லவளாக இருப்பாள். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சந்திரன், குரு, சனி10-ஆம் பாவத்திலிருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். சிலர் அரசியலில் நல்ல பதவியில் இருப்பார்கள். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் நீதிபதியாக இருப்பார்கள். சிலர் குருநாதராகவோலி ஞானி யாகவோ இருப்பார்கள்.உடல் நலம் நன்றாக இருக்கும். சிலர் இளம்வயதில் பல கஷ்டங் களைக் கடந்திருப்பார்கள்.

சந்திரன், குரு,சனி 11-ஆம் பாவத்திலிருந் தால், பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். வீடு, மனை, வாகனம் இருக்கும். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஜாதகர் நல்ல படிப்பாளியாக இருப்பார். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். தைரிய குணம் இருக்கும்.

சந்திரன், குரு, சனி 12-ஆம் பாவத்திலிருந்தால், சுபச்செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் அதிகமாக பேசுவார். இளமையில் சிரமங்கள் இருக்கும். ஜாதகர் நன்கு சாப்பிடுவார். தலைமுடி உதிரும். சிலர் அதிகமாக சிந்திப்பார்கள். தூக்கம் சரியாக வராது.

செல்: 98401 11534