ந்திரன், செவ்வாய், புதன், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் அறிவாளியாக இருப்பார். நேர்மையானவராக இருப்பார். நன்கு சாப்பிடுவார்.

சந்தோஷமாக வாழ்வார். நல்ல வாரிசு இருக்கும். தைரியமானவராக இருப்பார். வீடு, வாகனம் இருக்கும்.

guru

சந்திரன், செவ்வாய், புதன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் துணிச்சல் நிறைந்தவராக இருப்பார். அனைவரிடமும் கோபமாக பேசுவார். பணக்காரராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். சிலர் நல்ல அரசியல்வாதியாக இருப்பார்கள். 28 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தைரிய குணம் இருக்கும். சகோதரர்களுடன் உறவு நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். சிலர் கதாசிரியர்களாக இருப்பார்கள். சிலர் தொழிற்சாலை நடத்துவார்கள். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள்.

Advertisment

சந்திரன், செவ்வாய், புதன், குரு 4-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் கோபக்காரராக இருப்பார். பணக்காரராக இருப்பார். நல்ல வியாபாரியாக இருப்பார். பூமி, வாகனம் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு, வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். சிலர் ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பார்கள். சிலர் கட்டுமானத் துறையில் இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு 5-ஆம் பாவத்தில் இருந்தால், பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நன்கு படித்தவராக இருப்பார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் ஆராய்ச்சியாளராக இருப்பார்கள். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து பாராட்டு கிடைக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு 6-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். சிலர் தங்க வர்த்தகத்தில் இருப்பார்கள்.

Advertisment

சிலர் மெட்டல் வியாபாரம் செய்வார்கள். சிலருக்கு காலில் நோய் இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு 7-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் கவிஞர்களாக இருப்பார்கள். சிலர் ஓவியர்களாக இருப்பார்கள். சிலர் கைவினைப் பொருட்கள் செய்பவர்களாக இருப்பார்கள். சிலர் பெரிய விவசாயியாக இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கோப குணம் இருக்கும். திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். பலசாலியாக இருப்பார். நன்கு தூங்குவார். அனைவரும் தன் பேச்சைக் கேட்க வேண்டுமென நினைப்பார்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலானவராக இருப்பார். நல்ல பண வசதி இருக்கும். உடல்பலம் இருக்கும். கோப குணம் இருக்கும். ஜாதகருக்கு தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. பூர்வீக சொத்து கிடைக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் நீதிபதிகளாக இருப்பார்கள். சிலர் சிறந்த குருநாதர்களாக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் பலருக்கும் நன்மைகள் செய்வார்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். பல தொழில்களை அறிந்தவராக இருப்பார். சிலர் நல்ல எழுத்தாளர்களாக இருப்பார்கள். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள். அதிக சிந்தனை இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், குரு 12-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும். சிலர் வெளியூரில் பணம் சம்பாதித்து, அரசரைப்போல வாழ்வார்கள். ஜாதகர் கம்பீரமாக பேசுவார். நன்கு பணம் சம்பாதிப்பார். பல தொழில்களைச் செய்வார்.

செல்: 98401 11534