Advertisment

சந்திரன், செவ்வாய், புதன், குரு எங்கு இருந்தால் என்ன நடக்கும்....(29.11.24)

/idhalgal/balajothidam/what-will-happen-if-moon-mars-mercury-and-jupiter-are-same-position291124

ந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களுடன் எப்போதும் சண்டை போடுவார். பிறரைத் தாழ்த்தி பேசுவார். சகோதரர்களுடன் சரியான உறவு இருக்காது. தன் சகோதரர்களுக்கும் ஜாதகர் துரோகம் செய்வார்.

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் அனைவருடனும் சண்டை போடுவார். வீண் செலவுகள் செய்வார். பணம் சம்பாதிப்பார். பெண் மோகம் இருக்கும்.

பணத்திற்காக எதையும் செய்வார். மனைவி யுடன் சண்டை போடுவார்.

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வெளியூர் சென்று, பணம் சம்பாதிப்பார். பலரிடமும் விவாதம் செய்து, வெற்றிபெறுவார். பல சட்ட விரோத செயல்களையும்

ந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களுடன் எப்போதும் சண்டை போடுவார். பிறரைத் தாழ்த்தி பேசுவார். சகோதரர்களுடன் சரியான உறவு இருக்காது. தன் சகோதரர்களுக்கும் ஜாதகர் துரோகம் செய்வார்.

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் அனைவருடனும் சண்டை போடுவார். வீண் செலவுகள் செய்வார். பணம் சம்பாதிப்பார். பெண் மோகம் இருக்கும்.

பணத்திற்காக எதையும் செய்வார். மனைவி யுடன் சண்டை போடுவார்.

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வெளியூர் சென்று, பணம் சம்பாதிப்பார். பலரிடமும் விவாதம் செய்து, வெற்றிபெறுவார். பல சட்ட விரோத செயல்களையும் செய்வார். நல்ல வாரிசு அமையும்.

தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும்.

Advertisment

ss

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு கள்ள தொடர்பு இருக்கும். சிலர் அனைவரிடமும் சண்டை போடுவார்கள். அப்போது தரமற்ற வார்த்தை களை உச்சரிப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். வெளியூர் அல்லது வெளிநாட்டிற்குச் சென்று பணம் சம்பாதிப்பார். சிலர் கமிஷன் ஏஜென்டாக இருப்பார்கள். சிலர் ஓவியர்களாக இருப்பார்கள். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், பெண் மோகம் அதிகமாக இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். பெண்ணாக இருந்தால், படிப்பு குறைவாக இருக்கும். சில பெண்கள் தவறான உறவில் இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் அனைவரிடமும் விவாதம் செய்வார்.

பெண் மோகம் இருக்கும். நல்ல வாரிசு அமையும்.

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், திருமணத்திற்கு முன்பே கள்ள உறவு இருக்கும். மன நோய் இருக்கும். திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் அனைவரிடமும் விவாதம் செய்வார். வீட்டில் வேப்ப மரம் அல்லது தெற்கு திசை காலி அல்லது நீர் தொட்டி, கிணறு இருந்தால், பிரச்சினைகள் உண்டாகும்.

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் யாரையும் மதிக்கமாட்டார். துணிச்சல் இருக்கும். பலசாலியாக இருப்பார். சிலருக்கு தோலில் நோய் இருக்கும். சகோதரர்களுடன் சரியான உறவு இருக்காது. பலரின் ரகசிய விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கும் ஜாதகர், அதை வைத்து மிரட்டி பணம் சம்பாதிப்பார்.

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியமானவராக இருப்பார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள்.

ஜாதகர் பணக்காரராக இருப்பார். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். சிலர் வைத்தியர்களாக இருப்பார்கள். கோபம் அதிகமாக வரும். காம வெறி அதிகமாக இருக்கும். ஜாதகருக்கு பெற்றோருடன் சுமாரான உறவு இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் படைத்தவராக இருப்பார். பல தொழில்களைச் செய்வார். அரசரைப்போல வாழ்வார். நல்ல வாரிசு அமையும். சிலருக்கு மன நோய் இருக்கும். தூக்கம் சரியாக வராது. ஜாதகர் பயணம் செய்து, பணம் சம்பாதிப்பார். பெண் மோகம் இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு கம்பீரமான தோற்றம் இருக்கும்.

வீண் பேச்சு இருக்கும். பண வரவு இருக்கும். தலைவலி இருக்கும். திருமண விஷயத்தில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். ஜாதகர் நன்கு சாப்பிடுவார்.

செல்: 98401 11534

Advertisment
bala291124
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe