சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் சூதாடியாக இருப்பார். சோம்பேறியாக இருப்பார். அனைவரிடமும் வீணாக சண்டை போடுவார். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். தரித்திர வாழ்க்கை வாழுவார்.
கோப குணம் இருக்கும். மனைவியுடன் சண்டை போடுவார்.
சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். மாமனாரின் குடும்பத்திடம் பகை இருக்கும். ஜாதகர் அனைவரிடமும் வீண் சண்டை போடுவார். பிறரிடம் அறிவாளியைப்போல பேசுவார். சகோதரர்களுடன் வாதம் செய்வார். சிலருக்கு தந்தை இருக்கமாட்டார். பூமி, மனை வாங்குவதில் பிரச்சினை இருக்கும்.
சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சாகசங்கள் செய்வார். பல இடங்களுக்கும் பயணம் செய்து பணம் சம்பாதிப்பார். குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். இளம் வயதில் படிப்பு விஷயத்தில் பல சிக்கல்கள் இருக்கும். சிலர் அரசு பணியில் இருப்பார்கள்.
சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். சிலர் கல் குவாரி வர்த்தகம் செய்வார்கள். சிலர் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு கள்ளத்தொடர்பு இருக்கும். கோபம் வரும். தொழில் நிமித்தமாக பயணம் இருக்கும். சிலர் அதிகமாக பேசுவார்கள்.
சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் இராணுவத்தில் இருப்பார்கள். சிலர் காவல் துறையில் இருப்பார்கள். காலில் அடிப்படும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும்.
சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். பெண் மோகம் அதிகமாக இருக்கும். அதன்காரணமாக பெயர் கெடும். சிலருக்குக் காலில் அடிப்படும். ஏதாவது விபத்து உண்டாக வாய்ப்பிருக்கிறது. மனைவியுடன் விவாதம் இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும்.
சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். ஜாதகர் தேவையற்றதைப் பேசுவார். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு கள்ளத் தொடர்பு இருக்கும். சிலர் பணத்திற்காக பொய் பேசுவார்கள். தந்தையுடன் விவாதம் இருக்கும்.
சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு மனைவியுடன் பிரச்சினை இருக்கும். மனதில் சந்தோஷம் இருக்காது. வீண் பேச்சு இருக்கும். வீணான சிந்தனைகள் இருக்கும். மன நோய் இருக்கும்.
சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. பெண் மோகம் இருக்கும். ஜாதகர் தேவையற்ற காரியங்களைச் செய்வார். சிலருக்கு முதுகுத் தண்டில் பிரச்சினை இருக்கும். வாரிசுகளுடன் விவாதம் இருக்கும்.
பணம் சம்பாதிப்பதற்காக வெளியூருக்கோ, வெளிநாட்டிற்கோ பயணிப்பார்கள்.
சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு பண வசதி நன்றாக இருக்கும். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. வாழ்க்கை ஏறு முகமாகவும் இறங்கு முகமாகவும் இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும். கடுமையாக முயற்சி செய்து, அரசியலில் சிலர் பெயர், புகழ் பெறுவார்கள்.
சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சிறிய அளவில் மன நோய் இருக்கும். பெற்றோரால் குறைவான சந்தோஷம் இருக்கும். பிள்ளைகளால் பிரச்சினை இருக்கும்.
சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் செலவுகள் இருக்கும். அடிக்கடி தேவையற்ற பயணங்கள் இருக்கும். திருமணமாகியும், சந்தோஷம் இருக்காது. அடிக்கடி விபத்து நடக்கும். கோபம் அதிகமாக வரும். சம்பாதித்த பணத்தைப் பிறர் ஏமாற்றிவிடுவார்கள்.
செல்: 98401 11534