ந்திரன், செவ்வாய், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். நன்கு படித்தவராக இருப்பார். இரக்க குணம் உள்ளவராக இருப்பார். தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுடன் பழகுபவராக இருப்பார். அதனால், சில நேரங்களில் பெயர் கெடும். பெண் மோகம் அதிகமாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும். குடும்பத்தில் விவாதம் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.

Advertisment

ss

சந்திரன், செவ்வாய், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். ஜாதகர் நல்லவராக இருப்பார். பயணம் இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். சகோதரர்களுடன் உள்ள உறவில் பிரச்சினை இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். பூமி, வாகனம் இருக்கும். இளமையில் உடல்நலம் பாதிக்கப்படும்.

Advertisment

சந்திரன், செவ்வாய், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடங்கல் கள் இருக்கும். பண வசதி இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். பயணம் இருக்கும். பூமி, வாகனம் இருக்கும். கோபம் வரும். நல்ல வாரிசு அமையும்.

சந்திரன், செவ்வாய், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். நல்ல பதவியில் இருப்பார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். ராஜயோகம் இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும்.

Advertisment

சந்திரன், செவ்வாய், குரு, சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் மெட்டல் வியாபாரம் செய்வார்கள். சிலர் நகை வியாபாரம் செய்வார்கள். காலில் அடிப்படும். சொந்தவீடு இருக்கும். வாகனம் இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு, சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியமானவராக இருப்பார். திருமண வாழ்க்கையில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு கள்ளத்தொடர்பு இருக்கும். பணவரவு இருக்கும். சிலர் ஞானியைப்போல பேசுவார்கள்.

சந்திரன், செவ்வாய், குரு, சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல்நலம் கெடும். ஆழமான சிந்தனை இருக்கும். சிலருக்கு தூக்கத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும்.

ஜாதகர் பணக்காரராக இருப்பார். வசதியாக வாழ்வார்.

சந்திரன், செவ்வாய், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். தைரியமாக பேசுவார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். பூர்வீக சொத்து கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு, சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல் வாதியாக இருப்பார்கள். வாழ்க்கையின் முற்பகுதியில் பிரச்சினைகள் இருக்கும். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். சிலர் வைத்தியர்களாக இருப்பார்கள். சிலர் வக்கீலாக இருப்பார்கள். சிலர் நீதிபதியாக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். நல்ல மனைவி அமைவாள். ஜாதகர் மற்றவர்களை மதிக்கமாட்டார்.

சந்திரன், செவ்வாய், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். பல தொழில்களைச் செய்து, வெற்றிபெறுவார். நல்ல வாரிசு அமையும். பயணம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். கோபம் அதிகமாக வரும். 36 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். ஜாதகர் பிறரை மதிக்க மாட்டார். எப்போதும் பணம் சம்பாதிக்கும் சிந்தனையிலேயே இருப்பார்.

செல்: 98401 11534