சந்திரன், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப் பார். ஊருக்குத் தலைவராக இருப்பார். பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல வாரிசு அமையும். பேச்சாற்றல் இருக்கும். பல வாகனங்கள் இருக்கும்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பேச்சாற்றல் இருக்கும். தைரிய குணம் இருக்கும். இளமையிலேயே பெண் தொடர்பு இருக்கும்.
சிலர் ஓவியர்களாக இருப் பார்கள். சிலர் எழுத்தாளர் களாக இருப்பார்கள். சந்தோஷ மான வாழ்க்கை இருக்கும். பல வாரிசுகள் இருப்பார்கள்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகரின் உடன்பிறப்புகள் நன்றாக இருப்பார்கள். ஜாதகர் தன் நிலையைவிட தாழ்ந்த நிலையில் இருக்கும் பெண்கள
சந்திரன், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப் பார். ஊருக்குத் தலைவராக இருப்பார். பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல வாரிசு அமையும். பேச்சாற்றல் இருக்கும். பல வாகனங்கள் இருக்கும்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பேச்சாற்றல் இருக்கும். தைரிய குணம் இருக்கும். இளமையிலேயே பெண் தொடர்பு இருக்கும்.
சிலர் ஓவியர்களாக இருப் பார்கள். சிலர் எழுத்தாளர் களாக இருப்பார்கள். சந்தோஷ மான வாழ்க்கை இருக்கும். பல வாரிசுகள் இருப்பார்கள்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகரின் உடன்பிறப்புகள் நன்றாக இருப்பார்கள். ஜாதகர் தன் நிலையைவிட தாழ்ந்த நிலையில் இருக்கும் பெண்களுடன் பழகுவார். நிறைய படித்தவராக இருப்பார். சிலர் ஆராய்ச்சியாளராக இருப்பார்கள். சிலர் மன அறிவியல் படித்தவர்களாக இருப்பார்கள். சிலர் மந்திரவாதியாக இருப்பார்கள்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். சொந்தத்தில் வீடு, வாகனங்கள் இருக்கும். ஜாதகர் பழைய வீட்டைப் புதுப்பித்து கட்டுவார். நல்ல வாரிசு அமையும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
ஜாதகருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கும்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், வயிற்றில் நோய் இருக்கும். தைரிய குணம் இருக்கும். பயணம் இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். கடவுள் நம்பிக்கை இருக்கும். கடுமையாக உழைப்பார். வாழ்க்கை ஆனந்தம் நிறைந்த தாக இருக்கும்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அதிகமாக சாப்பிடுவார். நன்கு தூங்குவார். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். தோலில் நோய் அல்லது நமைச்சல் இருக்கும்.
ஜாதகருக்கு தன்னுடன் பணியாற்றும் பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருக்கும். சொந்த உறவிலுள்ள பெண்களுடனும் தொடர்பு இருக்கும்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கற்பனை உலகில் வாழ்வார். அதிகமாக சிந்திப்பார். அழகான மனைவி இருப்பாள். தைரிய குணம் இருக்கும். பேச்சுத் திறமை இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். ஜாதகர் பல வியாபாரங்களைச் செய்வார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். சுவாச நோய் இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். 38 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். பெயர், புகழ் இருக்கும். ராஜ யோகம் இருக்கும். நல்ல மனைவி அமைவாள்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ராஜயோகம் இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும். சிலர் கலைத் துறையில் இருப்பார்கள். சிலர் அழகு சாதனங்கள் விற்பார்கள். பெண் மோகம் இருக்கும். ஜாதகர் உறவினர்களுடன் பழகமாட்டார். அவர்களிடம் விரோதத்தை உண்டாக்கிக்கொள்வார். பண ஆசை அதிகமாக இருக்கும்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும். எனினும், பின்னர் ராஜயோகம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.
நல்ல மனைவி இருப்பாள். பல வாகனங்கள் இருக்கும். சிலர் மனநல மருத்துவர்களாக இருப்பார்கள். சிலர் ஓவியர்களாக இருப் பார்கள். சிலர் கொடுக்கல்- வாங்கல் வர்த்தகத்தில் இருப்பார்கள்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். எனினும், அதிலிருந்து மீண்டு வந்து ஜாதகர் பணம் சம்பாதிப்பார். பல தொழில்களைச் செய்வார். 32 வயதிற்குப்பிறகு, சொந்தத்தில் வீடு, வாகனம் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் செலவுகள் இருக்கும். வீண் பயணங்கள் இருக்கும். சிலர் போதைக்கு அடிமையாக இருப்பார்கள். சிலருக்கு மன நோய் இருக்கும். பெண் மோகம் இருக்கும்.
செல்: 98401 11534