சந்திரன், செவ்வாய், புதன், குரு எங்கு இருந்தால் என்ன நடக்கும்....(06.12.24)

/idhalgal/balajothidam/what-will-happen-if-moon-mars-mercury-and-jupiter-are-same-position061224

ந்திரன், செவ்வாய், புதன், சனி லக்னத்தில் இருந்தால், திருமணம் தாமதமாக நடக்கும். தைரிய குணம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல மனைவி அமைவாள். நல்ல வாரிசு அமையும். சாகசங்கள் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். எனினும், மனதில் ஏதாவது பிரச்சினை இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அனைவரிடமும் வாதம் செய்வார். தைரியசாலியாக இருப்பார். கோபக்காரராக இருப்பார். சிலர் ஓவியர்களாக இருப் பார்கள். சிலர் கமிஷன் ஏஜென்டாக இருப்பார்கள். சிலர் நன்கு பேசி, பணம் சம்பாதிப்பார்கள். திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் தன் மனைவியுடன் விவாதம் செய்வார். 42 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சந்திரன

சந்திரன், செவ்வாய், புதன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். பலருக்கு தம்பிகள் இருக்க மாட்டார்கள். அப்படியிருந்தால், அவர்களுடன் உறவு சரியாக இருக்காது. கோபம் அதிகமாக வரும். ஜாதகர் பிறரை மதிக்க மாட்டார்.

gg

சந்திரன், செவ்வாய், புதன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். மனைவியுடன் விவாதம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். தோல் நோய் இருக்கும். நல்ல பணவரவு இருக்கும். ஜாதகர் தன் மனதில் நினைத்ததைச் செய்வார். யாருக்கும் அடங்கி நடக்கமாட்டார்.

சந்திரன், செவ்வாய், புதன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார்.

நல்ல தொழிலதிபராக இருப்பார். சிலர் சிறந்த கலைஞர்களாக இருப்பார்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். தைரிய குணம் இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். துணிச்சல் குணம் இருக்கும். கோபம் அதிகமாக வரும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். கண்ணில் நோய் இருக்கும். தோல் நோய் இருக்கும். 38 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். கோபம் அதிகமாக வரும். மனைவி யுடன் சண்டை இருக்கும். வியாபாரத்தில் பார்ட்னருடன் வாதம் நடக்கும். சிலருக்கு பெண்களுடன் தொடர்பு இருக்கும். வீண் செலவு இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோபக்காரராக இருப்பார். சந்தோஷமாக பேசமாட் டார். பலபெண்களுடன் பழக்கம் இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். சிலர் போதைக்கு அடிமையாக இருப்பார்கள். சிலருக்கு ஜாதகம் சரியில்லையெனில், ஆயுளில் பிரச்சினை இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் பலசாலி யாக இருப்பார். பணம் சம்பாதிப்பார். நல்ல வாரிசு இருக்கும். சீதள நோய் இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். முதுகுத் தண்டில் பிரச்சினை இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசி யல்வாதியாக இருப்பார் கள். சிலர் தொழிலதிபர் களாக இருப்பார்கள். நல்ல பண வசதி இருக்கும். இளம் வயதில் பல சிக்கல்கள் இருக் கும். பூமி, வாகனம் சொந்தத்தில் இருக்கும். அரசியலில் பெயர், புகழ் இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், சனி 11-ஆம் பாவத் தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். பண வரவு இருக்கும். ஜாதகர் பல தொழில்கள் தெரிந்த வராக இருப்பார். தூக்கம் சரியாக வராது. கோபம் அதிகமாக வரும். நல்ல வாரிசு இருக்கும். பெண் களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும்.

சந்திரன், செவ்வாய், புதன், சனி 12-ஆம் பாவத் தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். காமவெறி அதிக மாக இருக்கும். ஜாதகர் அனைவரிடமும் சண்டை போடுவார். வீண் செலவுகள் இருக்கும். ஆடம்பரமான வாழ்க்கை இருக்கும். ஜாதகர் பல தொழில்கள் அறிந்தவ ராக இருப் பார். அலை ச்சல்கள் அதிகமாக இருக்கும்.

செல்: 98401 11534

bala061224
இதையும் படியுங்கள்
Subscribe