Advertisment

சந்திரன், செவ்வாய், புதன், குரு எங்கு இருந்தால் என்ன நடக்கும்....(03.01.25)

/idhalgal/balajothidam/what-will-happen-if-moon-mars-mercury-and-jupiter-are-same-position030125

ந்திரன், புதன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். இரக்க குணம் இருக்கும். சாதுர்யம் இருக்கும். தானங்கள் செய்யும் பழக்கம் இருக்கும்.

சாஸ்திரங்களைக் கற்றவராக இருப் பார். நன்கு படித்தவராக இருப்பார். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டா கும்.

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், சீதளம் பிடிக்கும். பண வசதி இருக்கும். பேச்சுத் திறமை இருக்கும். அழகான மனைவி இருப்பாள். சிலருக்கு திருமணத்திற்கு முன்பும், பின்பும் கள்ளத் தொடர்பு இருக்கும். தொண்டையில் பிரச்சினை இருக்கும்.

Advertisment

ss

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வெளியூர் சென்று பணம் சம்பாதிப்பார். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் இன்சூரன்ஸ் ஏஜன்ட

ந்திரன், புதன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். இரக்க குணம் இருக்கும். சாதுர்யம் இருக்கும். தானங்கள் செய்யும் பழக்கம் இருக்கும்.

சாஸ்திரங்களைக் கற்றவராக இருப் பார். நன்கு படித்தவராக இருப்பார். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டா கும்.

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், சீதளம் பிடிக்கும். பண வசதி இருக்கும். பேச்சுத் திறமை இருக்கும். அழகான மனைவி இருப்பாள். சிலருக்கு திருமணத்திற்கு முன்பும், பின்பும் கள்ளத் தொடர்பு இருக்கும். தொண்டையில் பிரச்சினை இருக்கும்.

Advertisment

ss

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வெளியூர் சென்று பணம் சம்பாதிப்பார். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் இன்சூரன்ஸ் ஏஜன்டாக இருப்பார்கள். சிலர் ஆடிட்டராக இருப்பார்கள். சிலர் கணக்காளராக இருப்பார்கள். சிலர் மொழி பெயர்ப்பு செய்பவர்களாக இருப்பார்கள். பெண் வாரிசுகள் அதிகமாக இருக்கும்.

அழகான மனைவி இருப்பாள்.

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். அன்னையின் ஆதரவு இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். பேச்சாற்றல் இருக்கும். மனை, வாகனம் இருக்கும். பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பார்கள்.

Advertisment

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பெரிய பதவியில் இருப்பார். பெரிய எழுத்தாளராக இருப்பார். ஆழமான சிந்தனையாளராக இருப்பார். சாஸ்திரங்களைக் கற்றவராக இருப்பார். பெண் மோகம் இருக்கும். ஆணவ குணம் இருக்கும்.

‌‌சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், காலில் அடிபடும். பேச்சாற்றல் இருக்கும். தைரிய குணம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்காக அடிக்கடி பயணம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். அழகான மனைவி இருப்பாள். சிலர் ஆடிட்டராக இருப்பார்கள். சிலர் வருமானவரி துறையில் இருப்பார்கள். சிலர் துணி வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர் அழகு சாதனப் பொருட்களின் வியாபாரியாக இருப்பார்கள்.

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், அழகான தோற்றம் இருக்கும். அழகான மனைவி அமைவாள். நல்ல வாரிசு அமையும். மனதில் பல சிந்தனைகள் இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். சிலர் கதாசிரியராக இருப்பார்கள்.

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் நன்கு படித்த வராக இருப்பார். வெளியூரில் சென்று வாழுவார். சீதளம் இருக்கும். சுவாச நோய் இருக்கும். தூக்கம் சரியாக வராது. ஜாதகர் முன்னோர்களை மதிப்பார்.

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். நல்ல பேச்சுத் திறமை இருக்கும். பூர்வீக சொத்து இருக்கும். பண வசதி இருக்கும். ஆடம்பர வாழ்க்கை இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். பூர்வீக சொத்து இருக்கும்.

சிலர் நீதிபதிகளாக இருப்பார்கள். சிலர் கல்லூரி பேராசிரியராக இருப்பார்கள். சிலர் தர்மங்களை உபதேசிக்கும் குருவாக இருப்பார் கள். நல்ல பண வசதி இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும்.

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், பிடிவாத குணம் இருக்கும். பண வசதி இருக் கும். பேச்சாற்றல் இருக்கும். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் தரமங்களைப் பற்றி உரையாற்றும் நபர்களாக இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். நல்ல வாரிசு அமையும். ஜாதகர் பணத்தைச் சேமிப்பார். சிலர் தந்தையையோ சகோதரர்களையோ நம்பி வாழ்வார்கள்.

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஆடம்பர வாழ்க்கை இருக்கும். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். பயணம் இருக்கும். ஜாதகர் பிறரை மதிக்க மாட்டார். ஆணவ குணம் இருக்கும். எதையும் ருசித்து சாப்பிடுவார். பலவிதமான உணவுகளையும் விரும்பி சாப்பிடுவார். பிள்ளைகள் தூர இடங்களில் வாழ்வார்கள்.

செல்: 98401 11534

bala030125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe