சந்திரன், புதன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சாந்தமாக பேசுவார். அறிவாளியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். அனைவரிடமும் நன்கு பழகுபவராக ஜாதகர் இருப்பார்.
சந்திரன், புதன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் இருக்கும்போது, குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும். பின்னர் நன்கு பணம் சம்பாதிப்பார். பேச்சுத் திறமை இருக்கும். கண்ணில் சிறிய பிரச்சினை இருக்கும். சிலர் தொழிலுக்காக வெளியூர் செல்வார்கள். சிலர் எலும்பு சம்பந்தப்பட்ட டாக்டராக இருப்பார்கள்.
சந்திரன், புதன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், சீதளம் இருக்கும். கண்ணில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் உயரமாக இருப்பார். பேச்சாற்றல் இருக்கும். பல பட்டங
சந்திரன், புதன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சாந்தமாக பேசுவார். அறிவாளியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். அனைவரிடமும் நன்கு பழகுபவராக ஜாதகர் இருப்பார்.
சந்திரன், புதன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் இருக்கும்போது, குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும். பின்னர் நன்கு பணம் சம்பாதிப்பார். பேச்சுத் திறமை இருக்கும். கண்ணில் சிறிய பிரச்சினை இருக்கும். சிலர் தொழிலுக்காக வெளியூர் செல்வார்கள். சிலர் எலும்பு சம்பந்தப்பட்ட டாக்டராக இருப்பார்கள்.
சந்திரன், புதன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், சீதளம் இருக்கும். கண்ணில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் உயரமாக இருப்பார். பேச்சாற்றல் இருக்கும். பல பட்டங்களை வாங்குபவராக இருப்பார். படித்து, பெரிய ஆளாக வருவார்.
சந்திரன், புதன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு பெற்றோருடன் உள்ள உறவில் பிரச்சினை இருக்கும். எனினும், படித்து பல பட்டங்களை வாங்குவார். பணக்காரராக இருப்பார். சில கலைகளில் சிறந்தவராக இருப்பார். தாயின் உடல்நலம் பாதிக்கப்படும். வீட்டின் மேற்கு திசையில் பிரச்சினை இருக்கும்.
சந்திரன், புதன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் படிப்பாளியாக இருப்பார். பட்டதாரியாக இருப்பார். சிலர் வருமான வரி துறையில் அதிகாரியாக இருப்பார்கள். சிலர் வங்கி அதிகாரியாக இருப்பார்கள். சிலருக்கு அடி வயிற்றில் பிரச்சினை இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். படித்தவர்களாக இருப்பார்கள். ஜாதகருடன் அவர்களுக்கு நல்ல உறவு இருக்கும்.
சந்திரன், புதன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், வயிற்றில் நோய் இருக்கும். சிலருக்கு மனநோய் இருக்கும். அதிக சிந்தனைகள் இருக்கும். தூக்கம் சரியாக வராது. இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். சுயமுயற்சியால் ஜாதகர் பணத்தைச் சம்பாதிப்பார். கடுமையான உழைப்பாளியாக இருப்பார். சிலருக்கு வயிற்றில் பித்த நோய் இருக்கும்.
சந்திரன், புதன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். நல்ல பண வசதியுடன் இருப்பார். பல பெண்களுடன் அவருக்கு உறவு இருக்கும். அதிகமாக செலவுகள் செய்வார். சிலர் நிறைய படித்தவர்களாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும்.
சந்திரன், புதன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், தூக்கம் அதிகமாக வரும் அல்லது தூக்கம் குறைவாக இருக்கும். சிந்தனைகள் அதிகமாக இருக்கும். அதன்காரணமாக மூளையில் பாதிப்பு உண்டாகும். சிலர் தோல் வியாபாரம் செய்வார்கள். சிலருக்கு பின்னால் நடக்கப்போவதை முன்கூட்டியே உணரக்கூடிய ஆற்றல் இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும்.
சந்திரன், புதன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையாக உழைக்கும் மனிதராக இருப்பார். 36 வயதிற்குப் பிறகு, நிறைய பணம் சம்பாதிப்பார். இளம்வயதில் கஷ்டங்கள் இருக்கும். சிலர் எழுத்தாளராகவோ, கவிஞர்களாகவோ இருப்பார் கள். சிலர் ஆராய்ச்சி செய்பவர் களாக இருப்பார்கள்.
சந்திரன், புதன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையில் பல போராட்டங்கள் இருக்கும். 48 வயதிற்குப்பிறகு, பல விஷயங்களில் வெற்றி கிடைக்கும். தாயின் ஆதரவு இருக்கும். சிலர் வர்த்தகர்களாக இருப்பார்கள். வியாபாரத்திற்காக பயணம் செய்ய வேண்டியதிருக்கும்.
சந்திரன், புதன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையாக உழைப்பார். பெயர், புகழ் இருக்கும். பண வசதி இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். மனைவி நல்லவளாக இருப்பாள். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். வெளிநாட்டு தொடர்புகளின்மூலம் பணம் வரும்.
சந்திரன், புதன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் போதைக்கு அடிமையாக இருப்பார்கள். சிலர் ஆராய்ச்சியாளராக இருப்பார்கள். சிலர் பெரிய வியாபாரிகளாக இருப்பார்கள். அதிக செலவுகள் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை இருக்கும். தூக்கம் சரியாக இருக்காது.
செல்: 98401 11534