சந்திரன், புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். குணம் சரியாக இருக்காது. கெட்ட காரியங் களைச் செய்வார். அதன்மூலம் தன் வாழ்க்கையை நடத்துவார். உடன்பிறப்புகளுடன் நல்ல உறவு இருக்காது. சோம்பேறியாக இருப்பார். அதிகமாக தூங்குவார்.
சந்திரன், புதன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், காதல் திருமணத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. ஜாதகர் சாந்தமாக இருந்து, தன் காரியங்களை முடித்துக்கொள்வார். கண்ணில் நோய் இருக்கும். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள். சிலருக்கு வயிற்றில் நோய் இருக்கும். கல்லீரலில் நோய் இருக்கும். இளம் வயதிலேயே பணம் சம்பாதிக்கும் எண்ணம் இருக்கும். இளம் வயதிலேயே காதல் அரும்பும்.
சந்திரன், புதன், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக கடுமையாக உழைப்பார். வயிற்றில் பிரச்சினை இருக்கும். பெண் மோகம் இருக்கும். பெண்ணாக இருந்தால் ஆணின்மீதும், ஆணாக இருந்தால் பெண்ணின்மீதும் திருமணத் திற்கு முன்பும் பின்பும் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். பண வரவு இருக்கும். வசதியான வாழ்க்கை இருக்கும்.
சந்திரன், புதன், சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந் தால், தாய் பாசம் அதிகமாக இருக்கும். ஜாதகர் அதிகமாக செலவு செய்வார். சீதளம் இருக்கும். படிப்பு நன்றாக வரும். சொந்தத்தில் வீடு, வாகனம் இருக்கும். செல்வாக்கு இருக்கும்.
சந்திரன், புதன், சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல படிப்பாளியாக இருப்பார். நன்கு உழைப்பவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் தர்மச்செயல்களில் ஈடுபடுவார். படிப்பிற்கேற்ற வேலை இருக்காது. சிலர் ஆசிரியராக, கல்லூரி பேராசிரியராக இருப்பார்கள். சிலர் ஓவியராக இருப்பார்கள். சிலர் நடனக் கலைஞர்களாக இருப்பார்கள். நன்கு பணம் சம்பாதிப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும்.
சந்திரன், புதன், சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் தந்தையின் சொத்தை அழிப்பார். அதிகமாக பொய் பேசுவார். வாய் ஜாலத்தால் பிழைப்பார். அதிக பெண் மோகம் இருக்கும். எந்தத் தொழிலையும் நிரந்தரமாக செய்யமாட்டார்.
சந்திரன், புதன், சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், மறுமணத்திற்கான வாய்ப்பு இருக்கிறது. மனைவியுடன் ஜாதகர் வாதம் செய்வார். பெண் மோகம் இருக்கும். போதைப் பழக்கத்திற்கு ஜாதகர் அடிமையாக இருப்பார். கலை வித்தகராக இருப்பார். சிலர் நகை செய்பவராக இருப்பார்கள். சிலர் மர வேலைகள் செய்பவராக இருப்பார்கள். சிலர் ஓவியர்களாக இருப்பார்கள். சிலர் கலை வேலைப்பாடுகள் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
சந்திரன், புதன், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல்நலம் கெடும். எட்டு வயதிற்கு முன்பு ஜுரம் இருக்கும். தந்தைக்கு அந்தச் சமயத்தில் பண பிரச்சினை இருக்கும். ஜாதகர் குறைவாக சாப்பிடுவார். 14 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். இல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் ஆழமாக சிந்திப்பார். சிலர் பின்னர் வரப்போவதை முன்கூட்டியே கணிப்பவர்களாக இருப்பார்கள்.
சந்திரன், புதன், சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். ஆடம்பரமாகச் செலவு செய்வார். பகட்டாக ஆடைகள் அணிவார். மற்றவர்களை மதிக்க மாட்டார். வீண் பேச்சு இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.
சந்திரன், புதன், சுக்கிரன் 10-ஆம் பாவத்திலிருந்தால், நல்ல பணவசதி இருக்கும். வெளிநாட்டில் வியாபாரம் இருக்கும். சிலர் அரசியல் பதவியில் இருப்பார்கள். சிலர் துணி வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர் பயண ஏஜென்ஸி நடத்துவார்கள். சிலர் கமிஷன் ஏஜெண்டாக இருப்பார்கள். ஆதாயம் அடைவதற்காக, பிறரிடம் சிரித்து பேசுவார்கள்.
சந்திரன், புதன், சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், தூக்கம் சரியாக வராது. செலவுகள் அதிகமாக இருக்கும். பேச்சுத் திறமை இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். 42 வயதிற்குப்பிறகு, நல்ல பண வரவு இருக்கும்.
சந்திரன், புதன், சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் மற்றவர்களை மதிக்கமாட்டார். 14 வயதிலேயே பெண் மோகம் இருக்கும். சிலர் படிக்கும்போது, மதிப்பெண்கள் குறைவாக வாங்குவார்கள். சிலர் படிப்பையே இளம் வயதில் நிறுத்தி விடுவார்கள். சிலர் மிகவும் ஆடம்பரமாக வாழ்வார்கள்.
செல்: 98401 11534