Advertisment

செவ்வாய், புதன் சனி எங்கு இருந்தால் என்ன நடக்கு.ம்

/idhalgal/balajothidam/what-will-happen-if-mars-wednesday-and-saturn-are-there-1

செவ்வாய், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் சந்தோஷம் குறைவாக இருக்கும். பலருக்கு திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். திருமணமானாலும், மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் வெளிநாட்டில் வாழ்வார்கள். கோப குணம் இருக்கும். சிலருக்கு தலைவலி இருக்கும்.

Advertisment

செவ்வாய், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். படிப்பு விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். திடீர்விபத்துகள் நடக்கும். உயிரணுக்களில் தோஷம் இருக்கும். கணவனுக்கும் மனைவிக்குமிடையை வார்த்தைப்போர் நடக்கும். கடன்தொல்லைகள் இருக்கும். பிள்ளைகள் தந்தையின் பேச்சைக் கேட்கமாட்டார்கள்.

Advertisment

ss

செவ்வாய், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். சகோதரர்களுக்கு இடையே சுமாரான உறவு இ

செவ்வாய், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் சந்தோஷம் குறைவாக இருக்கும். பலருக்கு திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். திருமணமானாலும், மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் வெளிநாட்டில் வாழ்வார்கள். கோப குணம் இருக்கும். சிலருக்கு தலைவலி இருக்கும்.

Advertisment

செவ்வாய், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். படிப்பு விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். திடீர்விபத்துகள் நடக்கும். உயிரணுக்களில் தோஷம் இருக்கும். கணவனுக்கும் மனைவிக்குமிடையை வார்த்தைப்போர் நடக்கும். கடன்தொல்லைகள் இருக்கும். பிள்ளைகள் தந்தையின் பேச்சைக் கேட்கமாட்டார்கள்.

Advertisment

ss

செவ்வாய், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். சகோதரர்களுக்கு இடையே சுமாரான உறவு இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். சிலருக்கு பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். முதுகுத்தண்டில் வலி இருக்கும். சிலர் குடும்பத்திலிருந்து பிரிந்து வெளியே வாழ்வார்கள். ஜாதகர் சுயமுயற்சியால் பணம் சம்பாதிப்பார்.

செவ்வாய், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் திருமணம் நடந்த பிறகு, மனைவியுடன் வாதம் செய்துகொண்டே இருப்பார்கள். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சொந்தமாக வீடு, மனை வாங்கும்போது, சில பிரச்சினைகள் உண்டாகும். சிலர் கட்டிடம் கட்டும் துறையில் இருப்பார்கள்.

செவ்வாய், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு வாரிசு இருக்காது. சில பெண்களுக்குக் கர்ப்பப்பையில் பிரச்சினை இருக்கும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் திரைப்படத் துறைக்குள் நுழைந்து, பணத்தை இழப்பார்கள். சில கணவர்களுக்கு மனைவியுடன் உறவு சரியாக இருக்காது.

செவ்வாய், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், அதிக கோபம் வரும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.நோய்கள் இருக்கும். உடல்பருமனாக இருக்கும். சிலருக்கு வாரிசுகள் இருக்காது. சிலர் வெளியூரில் வாழ்வார்கள்.

செவ்வாய், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். நல்ல மனைவி அமைவாள். எனினும், ஜாதகர் அவளுடன் வாதம் செய்வார். தொழிலில் அவ்வப்போது பிரச்சினைகள் எழும். உடல்நலத்தில் பாதிப்பு இருக்கும்.

செவ்வாய், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் சில சிக்கல்கள் உண்டாகும். உடல் நலம் பாதிக்கப்படும். விபத்து நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் வெளியூருக்குச் சென்று வியாபாரம் செய்வார்கள். கோப குணம் இருக்கும். வீட்டில் வாஸ்து தோஷங்கள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதில் சில பிரச்சினைகள் இருக்கும்.

செவ்வாய், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பலசாலியாக இருப்பார். கோப குணம் இருக்கும். கணவன்- மனைவிக்கிடையே வாதம் நடக்கும். தந்தை- மகன் உறவு சீராக இருக்காது. சிலர் வெளியே சென்று, கடுமையான பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள்.

செவ்வாய், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் பல கஷ்டங்கள் இருக்கும். அன்னையுடன் உள்ள உறவில் சில பிரச்சினைகள் இருக்கும். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஜாதகர் வெளியே சென்று பல தொழில்களைச்செய்வார். கடுமையான உழைப்பாளியாக இருப்பார்.

செவ்வாய், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், வயிறு சம்பந்தமான நோய் இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை இருக்கும். வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும். தந்தைக்கும் மகனுக்குமிடையே உறவில் பாதிப்பு இருக்கும். ஜாதகர் நேர்மையாக வாழமாட்டார். ஆனால், கடுமையான உழைப்பாளியாக இருப்பார்.

செவ்வாய், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். மனைவிக்கு கோப குணம் இருக்கும். கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கும். மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருக்கும்.கோபம் காரணமாக கணவனும் மனைவி யும் பிரிந்துவாழ வேண்டிய நிலை உண்டாகும். சிலருக்கு மறு மணம் நடக்கும்.

செல்: 98401 11534

bala310524
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe