Advertisment

செவ்வாய், புதன் சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும் !

/idhalgal/balajothidam/what-will-happen-if-mars-wednesday-and-saturn-are-there-0

செவ்வாய், குரு, சனி லக்னத் தில் இருந்தால், ஜாதகருக்கு கோப குணம் இருக்கும். அவர் கெட்ட செயல்களில் ஈடுபடுவார். சிலருக்கு பண பிரச்சினை இருக்கும்.

Advertisment

ஜாதகர் தேவையற்ற காரியங்களைச் செய்வார். பிறரைக் குறை கூறிக் கொண்டேயிருப்பார்.

செவ்வாய், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். அதனால் சந்தோஷம் இருக்காது. வாழ்க்கையின் முற்பகுதியில் பல சிரமங்கள் இருக்கும். சிலருக்கு படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். பிற்பகுதி வாழ்க்கை நன்றாக இருக்கும்.

செவ்வாய், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், சகோதரர்களுக்கு இடையே உள்ள உறவில் சிக்கல்கள் இருக்கும்.

Advertisment

ss

ஜாதகர் கோப குணம் கொண்டவராக இருப்பார் வீண்

செவ்வாய், குரு, சனி லக்னத் தில் இருந்தால், ஜாதகருக்கு கோப குணம் இருக்கும். அவர் கெட்ட செயல்களில் ஈடுபடுவார். சிலருக்கு பண பிரச்சினை இருக்கும்.

Advertisment

ஜாதகர் தேவையற்ற காரியங்களைச் செய்வார். பிறரைக் குறை கூறிக் கொண்டேயிருப்பார்.

செவ்வாய், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். அதனால் சந்தோஷம் இருக்காது. வாழ்க்கையின் முற்பகுதியில் பல சிரமங்கள் இருக்கும். சிலருக்கு படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். பிற்பகுதி வாழ்க்கை நன்றாக இருக்கும்.

செவ்வாய், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், சகோதரர்களுக்கு இடையே உள்ள உறவில் சிக்கல்கள் இருக்கும்.

Advertisment

ss

ஜாதகர் கோப குணம் கொண்டவராக இருப்பார் வீண் வேலைகளில் ஈடுபடுவார். அதிகமாக செலவுகள் செய்வார். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். நோய் இருக்கும்.

செவ்வாய், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும். ஜாதகர் அதிகமாக கோபப்படுவார். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, மனை வாங்குவதில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் பூர்வீக சொத்தை அழிப்பார். தேவையற்ற காரியங்களைச் செய்வார்.

செவ்வாய், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். ஆனால், பெரிய பதவிகளில் அமர்வதில் பிரச்சினை இருக்கும். பெண்களுக்கு வயிற்றில் நோய் இருக்கும். சிலருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். வியாபாரத்தில் பல மாற்றங்களை ஜாதகர் செய்து கொண்டேயிருப்பார். ஆனால், அவ்வப்போது நஷ்டம் ஏற்படும்.

செவ்வாய், குரு, சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு ரத்த சம்பந்தமான நோய் இருக்கும். முதுகுத்‌ தண்டில் பாதிப்பு இருக்கும். ஜாதகர் வெளியூர் செல்ல விருப்பமின்றி, சொந்த ஊரிலேயே வியாபாரத்தைச் செய்வார். அதில் நஷ்டம் உண்டாகும்.

செவ்வாய், குரு, சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் அவசியமற்றதைப் பேசி, வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வார். நல்ல மனைவி அமைவாள். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். அதன்மூலம் நிறைய பேருக்கு வேலை தருவார்கள். அதில் நல்ல பண வரவு இரூக்கும். எனினும் சந்தோஷம் இருக்காது.

செவ்வாய், குரு, சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், உடல்நலம் கெடும். கோபம் அதிகமாக வரும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் குறைவாக இருக்கும். சிலருக்கு உடலில் ஆப்ரேஷன் நடக்கும். சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்காது.

செவ்வாய், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். சகோதரர்களுடன் சரியான உறவு இருக்காது. வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். தந்தை- மகன் உறவு சரியாக இருக்காது. நல்ல பண வசதி இருக்கும். ஜாதகர் யாரையும் மதிக்கமாட்டார். ஆணவத்துடன் நடப்பார். சிலருக்கு வர்த்தகத்தில் நஷ்டம் உண்டாகும். ஜாதகர் நிறைய கடன் வாங்குவார்.

செவ்வாய், குரு, சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தர்ம காரியங்களில் ஈடுபடுவார். சிலர் துறவியைப்போல வாழ்வார்கள். வாழ்க்கை மேடு, பள்ளம் நிறைந்ததாக இருக்கும். சிலர் தர்ம உபதேசங்கள் செய்வார்கள். சிலர் விஞ்ஞானிகளாக இருப்பார்கள். சிலர் பொறியியல் நிபுணர்களாக இருப்பார்கள்.

செவ்வாய், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். வசதியான வாழ்க்கையை வாழ்வார். வயிற்றில் நோய் இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். வர்த்தகம் செய்வதற்காக ஜாதகர் பயணம் செய்வார்.

செவ்வாய், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். கண்ணில் நோய் இருக்கும். ஜாதகர் அனைவரிடமும் கோபமாக பேசுவார். சண்டை போடுவார். கணவன்- மனைவி உறவு நன்றாக இருக்காது.

ஜாதகர் போட்டி, பொறாமையுடன் எப்போதும் இருப்பார். அவருக்கு யாருடனும் நல்ல உறவு இருக்காது.

செல்: 98401 11534

bala240524
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe