செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் லக்னத் தில் இருந்தால், மனைவியுடன் வீண் சண்டை இருக்கும். ஜாதகர் உஷாரான மனிதராக இருப்பார். பணக்காரராக இருப்பார். இரக்க குணம் இருக்கும். பெண் மோகம் இருக்கும்.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். சூழலுக் கேற்றபடி பேசுவார். பெண் மோகம் இருக்கும். கோப குணம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் சகோதரர்களுக்காக செலவு செய்வார். அதிக பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலர் எஞ்சினீயர்களாக இருப்பார்கள். சிலர் ஓவியர்களாக இருப்பார்கள். கலையின்மீது ஈடுபாடு இருக்கும்.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். பூமி, மனை, வாகனம் இருக்கும். படிப்பு நன்றாக இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். நல்ல பதவியில் இருப்பார். பெயர், புகழ் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை இருக்கும். ஜாதகர் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு வாழ்பவராக இருப்பார். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், காலில் பிரச்சினை இருக்கும். கோப குணம் இருக்கும். திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரிய குணம் கொண்டவராக இருப்பார். சூழலுக்கேற்றபடி வாழக்கூடியவராக இருப்பார். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். முன்னோரின் சொத்து இருக்கும். நல்ல மனைவி அமைவாள். கோப குணம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு கள்ள உறவு இருக்கும்.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளவேண்டும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். விபத்து நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சுவாச நோய் இருக்கும். மூக்கு அடைப்பு இருக்கும். ஆழ்ந்த சிந்தனை இருக்கும்.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் பணக் காரராக இருப்பார். சிலர் அரசரைப் போல வாழ்வார்கள். வீண் செலவுகள் இருக்கும். தந்தையுடன் விவாதம் இருக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார் கள். அங்கு பெயர், புகழ் கிடைக்கும்.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். வீண் பேச்சு இருக்கும். ஆணவ குணம் இருக்கும். சிலர் அறிவாளியைப்போல பேசுவார்கள். சிலர் நல்ல வைத்தியர் களாக இருப்பார்கள். நல்ல பண வசதி இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பிறரை மதிக்கமாட்டார்.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். சிலர் மெட்டல் வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர் நகை வியாபாரியாக இருப்பார்கள். சிலர் தொழிற்சாலை வைத்திருப்பார்கள். சிலர் எஞ்சினீயர்களாக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். நல்ல மனைவி இருப்பாள். நல்ல பேச்சாற்றல் இருக்கும். அதன்மூலமாக பணம் வரும்.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும்.
ஜாதகர் தர்மம், அதர்மம் அறியாதவராக இருப்பார். தான் நினைத்தவை நடக்க வேண்டும் என்று நினைப்பார். திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். வீண் செலவுகள் செய்வார்கள்.
செல்: 98401 11534