மாமியார் கொடுமை தீர என்ன வழி?

/idhalgal/balajothidam/what-way-which-mother-law-horrible

மாமியாரால் பல மருமகள்கள் தொல்லைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த கொடுமையிலிருந்து விடுபடுவதற்கு அவர்கள் என்ன செய்யவேண்டும்?

ஒரு பெண் திருமணமாகும்போது, இதுவரை தான் வாழ்ந்த வீட்டிலிருந்து புதிய வீட்டிற்குச் செல்கிறாள். மாமியார், தன் தாயைப்போல தன்மீது அன்பு செலுத்த வேண்டுமென்று அவள் நினைப்பாள். ஆனால், பல பெண்களுக்கு அப்படிப்பட்ட மாமியார்கள் கிடைப்பதில்லை. தொல்லை தரும் மாமியார்களாக வந்து சேர்வார்கள். அதற்குக் காரணம்- அந்தப் பெண்களின் ஜாதகத்திலிருக்கும் சில கிரக தோஷங்கள்தான்.

ammanஒரு பெண்ணுக்கு நல்ல மாமனார், மாமியார் அமையவேண்டுமென்றால், அவளுடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும் 10-க்குரிய கிரகமும் சரியாக அமையவேண்டும்.

9-ஆவது பாவமும், பாவத்திற்கு அதிபதியும் நல்ல நிலையிலிருந்தால், அவளுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

ஒரு ஜாதகத்தில், லக்னத்தில் செவ்

ஒரு ஜாதகத்தில், லக்னத்தில் செவ்வாய், ராகு இருந்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் உண்டாகும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய், ராகு; செவ்வாய், சனி; செவ்வாய், சூரியன் சேர்க்கை லக்னம், 4, 7, 8, 12-ல் இருக்கக்கூடாது.

அப்படி இருந்தால் இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது.

சுக்கிரன், ராகுவுடன் சேர்ந்து 3, 6, 8, 12-ல் இருந்தால், அந்தப் பெண்ணுக்கு புகுந்த வீட்டில் மகிழ்ச்சி இருக்காது.

லக்னத்தில் சனி, சுய வீட்டிலோ அல்லது உச்சமாகவோ இருந்தால், அந்த சனியின் 10-ஆவது பார்வை 10-ஆவது வீட்டில் இருக்கும். அந்த 10-ஆம் வீடானது ஏழாம் வீட்டுக்கு நான்காவது வீடு. ஏழாவது வீடு என்றால் கணவர். அதிலிருந்து 4-ஆவது வீடு கணவரின் தாய். அந்த வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தால், அந்த கிரகங்கள் லக்னத்திலுள்ள சனியால் பார்க்கப்பட்டால், அந்தப் பெண்ணை மந்தமானவள், சோம்பேறி என்று புகுந்த வீட்டில் குற்றம் சுமத்துவார்கள்.

ஒரு ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் ராகு, செவ்வாயோ, செவ்வாய், சூரியனோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், "வந்திருக்கும் மருமகள் நிறைய பேசுகிறாள்' என்று குறை கூறுவார்கள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4-ஆவது பாவத்தில் நீச சந்திரன் இருந்தால் அல்லது பலவீனமாக இருந்தால், அந்தப் பெண் "குத்திக் குத்திப் பேசுகிறாள்' என்ற பெயரை புகுந்த வீட்டில் பெறுவாள்.

ஜாதகத்தில் 4-க்குரிய கிரகம் விரய ஸ்தானத்தில் இருந்து, சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அந்தப் பெண் கடுமையாக உழைத்தாலும் புகுந்த வீட்டில் நல்ல பெயர் கிடைக்காது.

லக்னத்தில் சுக்கிரன், சூரியன், ராகு இருந்து, 9-ல் குரு இருந்தால், திருமணம் நடந்து எட்டு வருடங்களுக்குப் பிறகுதான் புகுந்த வீட்டில் அவள் "நல்லவள்' என்ற பெயரைப் பெறுவாள். அதுவரை அவளுக்குப் பிரச்சினைதான்.

லக்னாதிபதியும் 7-க்கு அதிபதியும் விரய ஸ்தானத்தில் இருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் சந்தோஷமும் கவலையும் மாறிமாறி வரும். அதே ஜாதகத்தில் 10-ல் சனி இருந்தால், அந்தப் பெண்ணை மாமியார் பல நேரங்களில் துன்புறுத்துவாள். கடுமையான வார்த்தைகளால் திட்டுவாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 10-ல் செவ்வாய், சனி, ராகு இருந்தால், புகுந்த வீட்டில் அவள் செய்யும் சமையலில் ஏதாவது குறை கூறிக்கொண்டிருப்பார்கள்.

ஒரு வீட்டின் மத்திய பகுதியில் சமையலறை இருந்தால், அந்த வீட்டில் மாமியாருக்கும் மருமகளுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு உண்டாகும். அதனால் மருமகளுக்கு மனக்கஷ்டம் உண்டாகும். வீட்டின் தென்மேற்கு திசையில், தெற்கு திசையை நோக்கி சமையலறை இருந்தால், அந்த வீட்டிலுள்ள மாமியாருக்கு உடல்நலம் சரியாக இருக்காது. அதனால் மருமகளே அனைத்து வேலைகளையும் செய்யவேண்டியதிருக்கும். அனைத்தும் செய்தும் அவளுக்கு பாராட்டு கிடைக்காது.

பரிகாரங்கள்

மருமகள் சந்தோஷமாக இருப்பதற்கு... தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் செப்புப் பாத்திரத்தில் நீரெடுத்து சூரியனுக்கு வார்க்கவேண்டும்.

வீட்டின் வடகிழக்கு திசையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். படுக்கையறையில் வடக்கு, தெற்கு திசைகளில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது.

தினமும் சமையல் செய்யும்போது, அடுப்பின்மீது சிறிது பால் தெளிக்க வேண்டும். அதனால் செவ்வாய், சனியின் தோஷம் நீங்கும்.

இரவில் சாப்பிட்ட பிறகு பாத்திரங்களைக் கழுவி வைக்கவேண்டும். அதனால் ராகு, செவ்வாயின் தோஷம் நீங்கும்.v இரவில் துணி துவைக்கக்கூடாது. வெள்ளிக்கிழமை விரதமிருக்கவேண்டும். துர்க்கைக்கு தீபமேற்ற வேண்டும்.

ஆலயத்திலிருந்து எலுமிச்சம்பழத்தை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. பெண் தன் லக்னத்திற்கும், 9-க்கும் உரிய ரத்தினத்தை அணியலாம். கறுப்பு நிற ஆடையைத் தவிர்ப்பது நன்று.

செல்: 98401 11534

bala170818
இதையும் படியுங்கள்
Subscribe