சில பெண்கள் காம உணர்வின் காரணமாக, தங்கள் கணவர்களுக்கு துரோகம் செய்து வாழ்க்கையை வீணாக்கிவிடுகிறார்கள். கெட்ட ஆண்களுடன் பழகி, குடும்பத்திற்கு அவப்பெயரை உண்டாக்கிவிடுகிறார்கள். அப்படி நடப்பதற்குக் காரணங்கள் என்னென்ன? அவர்கள் திருந்துவதற்கு என்ன பரிகாரம்?

Advertisment

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் பாவ கிரகத்துடன் சேர்ந்தாலும், பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டாலும், நீசமடைந்து பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டாலும் அந்தப் பெண்ணுக்கு காமவேட்கை அதிகமாக இருக்கும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 4-ஆவது வீட்டில் நீச சந்திரன் இருந்தாலும், 7-ல் சூரியன், செவ்வாய் அல்லது சுக்கிரன், செவ்வாய் இருந்தாலும் தசாபுக்தி சரியில்லாத காலங்களில் அவள் வேறு ஆணுடனும் பழகுவாள். அதன்மூலம் குடும்பத்திற்கு அவப்பெயரை உண்டாக்குவாள்.

kaliஒரு ஜாதகத்தில் நீச சந்திரன் 3-ல் இருந்து, 4-ல் செவ்வாய்- சூரியன், 12-ல் ராகு- சனி இருந்தால், அந்தப் பெண் புகுந்த வீட்டில் சந்தோஷமாக இருக்க மாட்டாள். அவளுக்கு புத்தி சரியாக வேலைசெய்யாது. அதனால் வேறு ஆண்களுடன் பழகி, தன் குடும்பத்திறகு அவப்பெயரை உண்டாக்குவாள்.

Advertisment

சிம்ம லக்னத்தில் ராகு, சனி, 4-ல் நீச சந்திரன், 7-ல் செவ்வாய், புதன் இருந்தால், அந்தப் பெண் தன் கணவர் தவிர, வேறு ஆண்களுடனும் பழகி தனக்கும், தன் குடும்பத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்துவாள்.

லக்னத்தில் செவ்வாய், புதன், சூரியன், 7-ல் சனி, ராகு, 5-ல் சுக்கிரன் இருந்தால், அந்தப் பெண் ஆண் நண்பர்களுடன் தேவையில்லாமல் சுற்றி பிறர் பழிக்கும்படி நடந்துகொள்வாள்.

9-ல் நீசச் செவ்வாய், 10-ல் சுக்கிரன், புதன், சூரியன், 11-ல் சந்திரன், கேது இருந்தாலும், 5-க்கும் 7-க்கும் அதிபதியான கிரகங்கள் 11-ஆம் அதிபதியுடன் 10-ல் இருந்தாலும் அந்தப் பெண் திருமணத்திற்கு முன்பும், பின்பும் பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பாள். அதனால் வீட்டில் எப்போதும் சண்டை நடக்கும். சந்தோஷமற்ற சூழல் நிலவும்.

Advertisment

6-ல் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் இருந்தால், அந்தப் பெண் பல ஆண்களுடன் தவறாகப் பழகி தனக்கு கெட்ட பெயரை உண்டாக்கிக் கொள்வாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2-ல் புதன், சுக்கிரன், செவ்வாய் இருந்து சூரியன் நீசமடைந்தால், அந்தப் பெண் படிக்கும் காலத்திலேயே வீணான ஆண்களுடன் பழகி தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவாள்.

12-ஆம் வீட்டில் சுக்கிரன், சூரியன், சந்திரன் இருந்து, 2-ஆவது வீட்டு அதிபதி நீசமடைந்தால், அந்தப் பெண் கெட்ட ஆண்களுடன் பழகி தன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4-ல் ராகு, 7-ல் சூரியன், புதன், சுக்கிரன், 9-ல் சனி இருந்தால், அவளுடைய திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. அவள் தன் கணவனை மதிக்கமாட்டாள். அவளுடைய நடவடிக்கைகள் சரியாக இருக்காது.

ஒரு ஜாதகத்தில் 7-ல் சுக்கிரன், சனி, புதன், சந்திரன் இருந்து 12-ல் செவ்வாய் இருந்தால், அந்தப் பெண் திருமணத்திற்கு முன்பே பல ஆண்களுடன் பழகி தன் குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துவாள்.

இவை பொதுவிதிகள். சுபகிரகங்களின் பார்வை, தசாபுக்தியைப் பொருத்து பலன் மாறுபடும்.

ஒரு வீட்டிற்குத் தென்மேற்கு வாசல் இருந்து, அங்கு வடகிழக்கில் படுக்கையறை இருந்து, அந்த அறைக்குத் தென்மேற்கு வாசல் இருந்தால், அந்த வீட்டிலிருக்கும் பெண் வேறு ஆணுடன் பழக நேரும்.

பரிகாரங்கள்

மேலே கண்ட வகையில் ஒரு பெண் இருந்தால், அவள் கறுப்புநிற ஆடை அணியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வீட்டின் வடக்கு அல்லது தெற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது.

வெள்ளிக்கிழமையன்று பெண்ணின் தாயார், தன் மகளின் வயதுக்கேற்ப எலுமிச்சம்பழங்களை வாங்கி நூலில் கோர்த்து இரவு வேளையில் துர்க்கைக்கு அணிவிக்க வேண்டும்.

பெண்ணின் தந்தை தினமும் நாய்க்கு பிஸ்கட் அல்லது உணவு அல்லது இனிப்பு ரொட்டி அளிக்கவேண்டும்.

குலதெய்வத்தின் ஆலயத்திற்குச்சென்று அங்கு கடுகெண்ணெய்யால் தீபமேற்ற வேண்டும். கொப்பரைத் தேங்காயை இரண்டாக உடைத்து அதில் கற்பூரத்தை ஏற்றவேண்டும்.

மனைவியின் நடவடிக்கை சரியில்லாத கணவர், தினமும் சிவன் ஆலயத்திற்குச் சென்று, சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டும். சிவப்பு மலர்களை வைத்து வழிபடவேண்டும். லக்னாதிபதியின் ரத்தினத்தை பெண்ணுக்கு அணிவிக்கவேண்டும்.

மேற்கண்ட பரிகாரங்களைச் செய்தால், தவறான வழியில் சென்று குடும்பத்திற்கு அவப்பெயரை உண்டாக்கித் தந்த பெண்ணைத் திருத்தி, நல்வழிப்படுத்த முடியும்.

செல்: 98401 11534