ஒருவர் தனது சிந்தனையை சரியான வகையில் பயன்படுத் தினால் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிகளைக் காண்பார். மகிழ்ச்சியாக இருப்பார். அந்த உணர்வு அல்லது சிந்தனை சரியாக இல்லாமல் போவதற்கு கிரகங்கள் காரணமாக இருக்கின்றன.
ஒரு ஜாதகத்தில் சந்திரனின் நிலை யைப் பார்த்து, அந்த ஜாதகரின் நிலை யைத் தெரிந்துகொள்ளலாம். சந்திரன் பலவீனமாக அல்லது அஸ்தமனமாக அல்லது நீசமாக இருந்தால், அவருடைய சிந்தனை மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட நிலையில் இருக்கும். அவர்கள் எப்போதும் பிறரைக் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். தாங்கள் எப்படி உயர்வது என்பதைப் பற்றிய சிந்தனையில் ஈடுபடவே மாட்டார்கள்.
சிந்தனையைச் செயல்பாட்டிற் குக் கொண்டுவரும் கிரகம் புதன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thinking.jpg)
ஒருவரின் ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்தால், அவர் தன் சிந்தனையைச் செயல்வடிவத்திற்குக் கொண்டுவருவதற்குமுன்பு, அதிக மான கற்பனையிலேயே இருப்பார். அதை செயல்படுத்துவதற்கு அவருக்கு பயம் இருக்கும். அதனால், அவருக்கு பெரிய வெற்றி கிடைக் காது. முயற்சியே செய்யாவிட்டால் எப்படி வெற்றி கிடைக்கும்? இன்னும் சொல்லப்போனால்- தன் திறமையை அவரே உணராமலிலிருப்பார்.
ஒரு ஜாதகத்தில் சந்திரன் விரய ஸ்தானத்தில் இருந்தால், அவர் பிறரைக் குறைகூறுவதில் மன்ன ராக இருப்பார். 5-ஆம் பாவாதி பதியும் நீசமடைந்தால், அவர் தன் திறமையைப் பயன் படுத்தி உயராமலேயே இருப்பார். தன்னைப் பிறர் செயல் படவிடவில்லையென்று மற்றவர்களைக் குறைசொல்வார்.
ஒரு ஜாதகத்தில் 7-ஆம் பாவத்தில் உச்ச செவ்வாய், 9-ல் சனி, 12-ல் சந்திரன் இருந்தால், அவர் தன் வேலைகளை பிறர் செய்யவேண்டுமென்றும், அவர்களை ஏமாற்றவேண்டு மென்றும், அவர்களிடமிருந்து பணத்தை அபகரிக்க வேண்டுமென்றும் எப்போதும் நினைத்துக்கொண்டிருப் பார். தன் திறமையைப் பயன்படுத்தி பெரிய மனிதனாக வரவேண்டுமென்ற எண்ணமே இருக்காது. வெளிப்படையாகச் சொன் னால், தன் சுயமரியாதையையே இழந்து வாழ்வார்.
ஒரு ஜாதகத்தில் சந்திரன், சனி சேர்ந் திருந்தால், அவர் தன் வாழ்க்கையின் முற்பகுதியில் பல கஷ்டங்களை அனுபவிப்பார்.
அதுவும் சந்திரன், சனி விரய ஸ்தானத்திலோ எட்டிலோ இருந்தால், அவர் அதிகமாக சிந்திப்பார். வாழ்க்கையின் இரண்டாம் பகுதியில் அவரது முயற்சிகள் வெற்றிபெறும். அப்போது அவரின் திறமை பயன்படுத்தப்படும். அவர் மகிழ்ச்சியாக இருப்பார்.
ஜாதகத்தில் லக்னாதிபதியான புதன் அஸ்த மனமாக இருந்து, 9-ஆவது பாவத்தில் ராகு இருந்தால், அவர் எதைச் செய்தாலும் பயத்துடனே இருப்பார். ஏனென்றால், தன் வாழ்க்கையின் முதல் பகுதியில் நிறைய கஷ்டங் களை அனுபவித்திருப்பார். தனக்கு புகழ் கிடைக்கும்போதெல்லாம் ஒருவித பயத்துடன் இருப்பார். "நாம் செய்யும் செயலில் வெற்றி கிடைக் குமா? பாராட்டு கிடைக்குமா' என்ற சந்தேகத்துடனே எதையும் அவர் செய்வார். அதன்காரணமாக பல வாய்ப்புகளை இழந்து விடுவார்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், 3-ல் நீச சந்திரன், 7-ல் சனி இருந்தால், அவர் திறமைசாலிலியாக இருந்தாலும், அதிகமாகப் பேசிக்கொண்டும், பிறரைக் குறைகூறிக் கொண்டும் இருப்பார். அதனால், பகைவர்கள் உண்டாவார்கள். அவர்களைப் பற்றி எண்ணி அவர் பயப்படுவார்.
லக்னத்தில் செவ்வாய், 8-ல் ராகு, 9-ல் சூரியன், புதன் இருந்தால், அவர் வீட்டிலும், வெளியிலும் பிறரைக் குறைகூறிக்கொண்டிருப்பார். சுயமுயற்சியில் சிறிதும் ஈடுபடமாட்டார். மற்றவர்களைப்போல வரவேண்டுமென்று நினைப் பார். ஆனால், சோம்பேறித்தனம் காரணமாக சிறிதும் அவர் செயலிலில் ஈடுபடமாட்டார்.
லக்னத்தில் சனி, ராகு, 2-ல் செவ்வாய், 5-ல் நீச புதன் இருந்தால், அவர் பல கலைகளைக் கற்றவராக இருந்தாலும், உரிய நேரத்தில் தன் செயல்களைச் செய்யமாட்டார். அதனால், அவருடைய திறமை யாருக்குமே தெரியாமல் போய்விடும்.
12-ல் சந்திரன், லக்னத்தில் செவ்வாய், 4-ல் சூரியன் இருந்தால், எதையாவது பேசி அவர் தன் வேலையை விட்டுவிடுவார். தன் திறமையை வெளிக்காட்டாமல் இருப்பார். அதிக மான யோசனை இருக்கும். எந்தச் செயலையும் செய்யமாட்டார். அதனால் அவரின் திறமைகள் வீணாகிவிடும்.
பரிகாரங்கள்
தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணிவது நல்லது.
தெற்கு அல்லது கிழக்கு திசையில் தலை வைத்துப் படுக்கவேண்டும்.
வீட்டின் வடக்கு திசையில் தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வைக்கக்கூடாது.
தினமும் சூரியனையும், அரசமரத்தையும் வழிபடவேண்டும்.
ஆஞ்சனேயரை வணங்கி அனுமன் சாலீசா படிப்பது நன்று.
கறுப்புநிற ஆடையைத் தவிர்க்கவேண்டும்.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-11/thinking-t.jpg)