திருமணம் என்பது புனிதமானது. ஆயிரம் காலத்துப் பயிர் என்பதுபோல உயர்வாகநம்நாட்டில் முன்னோர்கள் காலங்காலமாகச் சொல்லிவருகிறார்கள். திருமணம் என்னும் பந்தத்திற்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் நம்நாட்டில் மட்டும் ஏன் தருகிறார்கள்? இதே பூமியில் இதேபோன்ற மனிதர்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்துகொண்டா வாழ்கிறார் கள்? பலரைத் திருமணம் செய்து, பலரோடு வாழ்ந்து, பலருக்கு குழந்தைகள் பெற்று, அவர்களை வளர்த்து, பல அறிவியல் கண்டுபிடிப்புகள் படைத்து, உலகை அனுபவித்து, சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள்?
ஒழுக்கக்கேடாக வாழ்ந்தால், மேலோகத் திலும், நம்நாட்டிலும் நமக்கு தண்டனை, அவமானம், கேவலம். ஆனால் வேற்றுநாட்டு மக்களுக்கு இங்கும் தண்டனை இல்லை; மேலோகத்திலும் தண்டனை இல்லையா? நம்நாட்டில் சொல்லப்படும் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் திருமண பந்தத்தால் என்ன பயன்?
பெற்றோர்கள், சொந்தம், பந்தம் என ஊருக்காக, உலகத்துக்காக, திருமணத்தால் ஏற்படும் துன்பத்தை ஏற்றுக்கொண்டு ஏன் சகித்துக்கொண்டு வாழவேண்டும்? பிடிக்காத நபருடன் வாழ்வதைவிட பிடித்த நபர்களுடன் ஏன் வாழக்கூடாது என்பதே இன்றைய தலைமுறையின் கேள்வியாக உள்ளது. வெளிநாடுகளில் பிடிக்கவில்லைலி ஒத்துவரவில்லையென்றால் விலகிக்கொள்ள எந்தத் தடையுமில்லை. திருமண விஷயத்தில் அங்கு ஏற்பட்ட மாற்றம்போல் இங்கு நடக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? வாழ் நாளில்ஒருமுறை மட்டுமே திருமணம் செய்யவேண்டும்; அதுதான் எதிர்காலத்திற்கு நல்லதென சில பழைமைவாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று சொல்லி, எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள்.
திருமணம் செய்த நபருடன் வாழ்க்கை நல்லமுறையில் அமைந்தால், ஆண்லி பெண் யாரும் அடுத்தநபரைப் பற்றி யோசிக்கக்கூட மாட்டார்கள். பொருந்தா திருமணத்தால் பலர் நொந்துவாழ்கிறார் கள். சிலர் விவாகரத்து செய்து விலகிக்கொள்கி றார்கள். சிலர் ஏதாவது காரணத்தால் விலக முடியாததால், விரும்பிய வர்களுடன் மறைமுகத் தொடர்பு கொள்கிறார்கள். அகப்பட்டுக் கொள்ளாதவரை யோக்கியர்களாகவும், அகப்பட்டுக்கொண்டால் கொடியவர் களாகவும் இங்கே அவமானப்படுத்தப் படுகின்றனர். ஆனாலும் நடப்பது நடந்து கொண்டேதான் இருக்கிறது. எல்லாருக்கும் உலக சிற்றின்பங்களை அனுபவிக்க ஆசை இருந்துகொண்டுதான் இருக்கும். வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்களை உத்தமர்கள்போல சொல்லிக்கொண்டு, மற்றவர்களைத் தவறாகப் புரளிபேசிக்கொண்டு அலைவார்கள். 'நாம யோக்கியமா இருக்கோம் ;அயோக்கிய பயலுகளுக்குதான் நல்ல வாழ்க்கை கிடைக்குது' என்றெல்லாம் பேசுவதைக் கேட்கிறோம். உண்மையில் நல்லதுணை அமையாத பலர் அடுத்த துணை தேடிக்கொள்கின்றனர்.
ஏழாமிடம்
ஏழாமிடத்தில் பாவகிரகங்கள், பாதாகாதிபதி, மாரகாதிபதி, 6, 8, 12லிஆம் அதிபதிகள் நின்றால் திருமண வாழ்க்கை பாதிக்கும். ஏழாமதிபதி 6, 8, 12லில் மறைந் தாலும், பாவகிரகச் சேர்க்கை, பார்வை பெற்றா லும் களத்திரத்தால் வேதனை, சோதனைதான். ஏழாம் பாவகம் கெட்டு தசாபுக்திகளும் கெட்டால் துணைவரால் தொல்லைதான். பொதுவாக ஏழில் பாவகிரகங்கள் இருந்தால் லக்னத்தைப் பார்க்கும். லக்னம் குணத்தைக் கெடுக்கும். துணைவர்தரும் தொல்லையால் திருமணத்திற்குப்பிறகு நற்குணம் கெடும். ஏழாமிடத்தில் நிற்கும் பாவகிரகம் எந்த இடத்தைப் பார்க்கிறதோ, அந்த ஸ்தானம் திருமணத்திற்குப்பிறகு பாதித்துவிடும். இங்கு நிரந்தர யோக்கியருமில்லை; நிரந்தர அயோக் கியருமில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏழாமிடமே உருவாக்கித் தரும். சிலருக்கு மறைமுக சந்தோஷத்தையும், சிலருக்கு அவமானத்தையும் தந்துவிடுகிறது. முழுக்க நனைந்தபின்பு முக்காடு எதற்கு என, சிலர் நான் அப்படிதான் என பிரிந்துவிடுகிறார்கள்.
பெண்கள்
பெண்களுக்கான அடக்குமுறை நம் நாட்டில்தான் அதிகம். ஆண்கள் செய்யும் பலவற்றையும் பெண்கள் சகித்து வாழ வேண்டியுள்ளது. பிடித்த பெண்களுடன் வாழ ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இல்லை. ஆண் பல பெண் களுடன் தொடர்புவைத்தால் ஆண்மை நிறைந் தவனாகவும், பெண் சில ஆண்களுடன் தொடர்புகொண்டால் ஒழுக்கங்கெட்ட வளாகவும் பேசப்படுகிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், பெண்களைக் கேவலமாகப் பேசுவது அவர்கள் அருகில் இருக்கும் பெண்களாகவே இருக்கிறார்கள்.
நம்நாட்டில் எந்தவொரு திருமணமான பெண்ணும் கணவனைவிட்டு கண்டவனுடன் செல்ல விரும்புவதில்லை. கணவன்லி கணவனாக நடந்து கொள்ளாதபோதும் சகித்துக்கொண்டு வாழ்பவர்கள்தான் அதிகம். அன்றாடம் ஊடகங்களில் கேள்விப்படுவதுபோல் கள்ளக்காதலுக்கு பெண்கள் அலைவதில்லை. எங்கோ எந்த காரணத்திற்காகவோ நடக்கும் சில முறையற்ற உறவுகள் பெரிதாக்கப்பட்டு, நம் பெண்களை நாமே அசிங்கப்படுத்திக் கொள்கிறோம். ஒரு பெண் ஒழுக்கம்தவறி நடக்கிறாள் என்றால், ஒரே நாளில் ஒரே காரணத்தால் நடக்காது. அந்த முடிவை யெடுக்க திருமணமான பெண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை யாரும் உணர்வதில்லை.
பெண்ணுக்கு 2, 4, 7-ஆமிடம் சிறப் பாக அமைந்துவிட்டால், அந்த பெண் அனைத்து சுகங்களையும் பெற்று சுகமாக வாழ்வாள். என்னதான் மனிதனுக்கு பணம், புகழ் கிடைத்தாலும் தாம்பத்திய சுகமின்றி வாழமுடியாது. 2, 4, 7-ஆமிடங்கள் கெட்டு சுகத்தை இழந்தால், 9-ஆமிடமும் கெட்டால், சமூகக் கட்டுப்பாடுகளைமீறி சுகம்பெறுவாள். கலாச்சாரத்தை மீறும் அமைப்பை, தைரியத்தை ஒன்பதாமிடமே தருகிறது. ஒன்பதாமிடத்தில் செவ்வாய், சனி இணைவு, பார்வை, செவ்வாய், சுக்கிரன் வலுத்து பாவகிரக வலிமை பெறுதல், குரு பார்வை இல்லாமல் இருத்தல் போன்ற ஜாதக அமைப்புகள் தடம்மாறத் தூண்டுகின்றன. 2லிஆமிடம் கெட்டால் குடும்பத்தை மீறுவர். 5-ஆமிடம் வலுத்தால் குழந்தைகள் பிறந்த பின் எல்லை மீறும் தைரியம் உண்டாகும். 7லிஆமிடம் பலமிழந்தால் இஷ்டப்படி சுகம் அனுபவிப்பர்.
பொதுவாகவே ஒரு ஜாதகர் வாழும் சமூகத்திற்கு முரணான செயல்களில் தைரியமாக ஈடுபடுகிறார் என்றால், அவருக்கு ராகுலி கேது தசை, அவமானப்பட 6, 8-ஆம் அதிபதி தசை, நஷ்டப்பட 12-ஆம் அதிபதி தசை மற்றும் சனி பாதிப்புள்ள பெயர்ச்சிகள் அமைகின்றன. பொதுவாக ஏழரைச்சனியில் பெரும்பாலானவர்கள் சபலத்தில் விழுந்தே எழுகிறார்கள். பெண்களின் சிறிய சபலம்கூட வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதை மறக் கக்கூடாது. என்ன கஷ்ட காலம் வந்து, தசை சரியில்லாமல் போனாலும், பெண்தான் கவனமாக இருக்கவேண்டும். பிறரை நம்பி குடும்பத்தை இழந்த பெண்கள் ஏராளம். ஏழாமிடம் கெட்டவர்கள் ஆஞ்சனேயரை வணங்கி ஒழுக்கம் தவறால் நடந்தால், உடலும் மனமும் கெடாமல் உள்ளத்தால் இல்லறம் நன்றாகும்.
ஆண்கள்
பொதுவாகவே இன்று திருமணத்திற்குப் பெண்கள் குறைவாக இருப்பதால், பல ஆண்களுக்குப் பெண் கிடைப்பதில்லை. இன்று அவரவர் ஜாதியில் அவர்களின் எதிர் பார்ப்புக்கேற்றபடி வரன் அமைவது சிரம மாக உள்ளது. இன்றைய தலைமுறையினர் அழகான, அமைதியான, கோடீஸ்வரரான, பெற்றோர் இல்லாத, உடன்பிறந்தவர் தொல் லையில்லாத வரனை எதிர்பார்க்கிறார்கள்.
பெண் கிடைத்தால் போதுமெனக் கூறிவிட்டு, பெண்வீட்டில் கொடுக்கும் வரதட்சிணை, சம்பாதிக்கும் அழகான பெண் என பார்த்துப் பார்த்துத் திருமணம் செய்துவிட்டு, திருமணம் முடிந்ததும், 'எனக் கான ஜோடி இவளில்லை; என்னைப் புரிந்துகொள்ளவில்லை; பெற்றோர் கட்டாயத்திற்காகத் திருமணம் செய்ததாகச் சொன்னதால் மனம் ஒன்ற மறுக்கிறது. கடமைக்காக திருமணம் செய்துவாழ்வதால் அன்யோன்யமில்லா வாழ்க்கையாய் இருக்கிறது. சம்பாதித்துக் கொடுக்கும் இயந்திரமாகவே பார்க்கிறாள்' என்று மனைவி யைப் பற்றி அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசுகிறார்கள்.
வெகு சிலர், ஆண்மைக் குறைவிருந்தும் திருமணம் செய்து பெண்களைச் சித்தரவதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும் பல இடங்களில் திருமணமான அடுத்தநாளே பெண்ணின் நகையைப் பறித்து அடகுவைப்பதில் ஆரம்பித்து, பெண்களை ஆண்கள் படாதபாடு படுத்துகிறார்கள். சம்பாதிக்காமல் ஊர்சுற்றித் திரிந்துவிட்டு, 'குடும்பத்தை எப்படியோ பார்' என்பதும், சந்தேகபுத்தி கொண்டு வார்த்தைகளால் காயப்படுத்தி, குடிப்பழக்கத்திற்கு அடிமை யாகி, அதற்கு மனைவியே காரணமென அசிங்கப்படுத்தி,நோயாளியாக மாறி, அதற்கும் செலவுகளை உண்டாக்கி, குடும்பத் தையே மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிர்மூலப்படுத்தி விடுகிறார்கள்.
இந்த பெற்றோர்களின் சண்டையில் பிள்ளைகள் வாழ்க்கை பல குடும்பங்களில் கேள்விக்குறியாகிவிடுகிறது. திருமண வாழ்க்கையில் ஏமாற்றம் அடையும்போது, இயலாமை கோபமாகி தம்பதிகள் ஒருவருக் கொருவர் மனப்பிரிவை அடைகிறார்கள்.
ஆண்களுக்கு, சுக்கிரன் பாவகிரகங்க ளுடன் இணைவு, பார்வைபெற்றுக் கெட்டு போதல், களத்திரகாரகனான சுக்கிரன் பலவீனப்படுதல் போன்றவை இந்திரியத்தைக் கெடுத்து தாம்பத்திய நாட்டம் இல்லாமல் செய்யும். கேது பார்வை, சேர்க்கை ஏழமிடத்திற்கு ஏற்பட்டாலும் ஜாதகரின் மனதையும், உடலையும் கெடுத்து இல்லற வாழ்க்கையைக் கெடுக்கிறது. சுக்கின் நீசம், 4, 6, 7, 12லிஆமிட தொடர்பு, சேர்க்கையானது விலைமாதர் தொடர்பைத் தந்துவிடுகிறது. சுக்கிரன், ஏழாம் அதிபதியுடன் கேது சேர்ந்து கெட்டால், ரகசிய காதல் செய்வர். சுக்கிரன் உச்சம், சனியின் சேர்க்கை, ராகு இணைவு, செவ்வாய், சனி பார்வை, ராகுலி கேது சம்பந்தம் போன்ற அமைப்புகொண்டவர்கள் சமூகக் கட்டுப்பாடுகளை நினைக்காமல், தன் சுகத்தைப் பூர்த்திசெய்துகொள்வர். உலகம்கெட்டுப்போய்விட்டது என பேசுபவர்கள் வாய்ப்பு கிடைக்காதவர் களாகவே இருக்கிறார்கள். ஏழாமிடம் பாவ கிரக பாதிப்படைந்து குரு பார்வை பெற்றுவிட்டால், தடுமாறும் யோசனை வந்தாலும் நடக்காது. ஆதலால் யோக்கியத் தனத்தைப் பற்றிப் பேசும் சபலம்கொண்ட அயோக்கியர்களாக இருப்பர்.
இல்லறத்தைக் கெடுக்கும் செவ்வாய், சனி செவ்வாய், சனி இணைவு, பார்வை, ஏதாவதொரு விதத்தில் தொடர்பு ஆண்லி பெண் குடும்ப வாழ்க்கையை பாதிக்கிறது. குறிப்பாக பெண்களின் களத்திர காரகன் செவ்வாய், சனியால் பாதிக்கப்படும்போது நல்ல கணவர் அமைவதில்லை. செவ்வாய் பாதித்தால் ஈடு கொடுக்கமுடியா துணையே அமையும். சனி பார்வை இருந்தால் சரியான துணையைத் தேடிக்கொள்ளும். சுக்கிரன், சூரியன், ராகுலி கேதுக்கள் செவ்வாயைப் பார்த்தாலோ இணைந்தாலோ இல்லற வாழ்க்கை இல்லைதான்.
களத்திர காரகன் சுக்கிரன் பாதித்து, ஆண்களுக்கு ஏழாமிடத்தில் செவ்வாய், சனி, ராகுலி கேது பார்வை, சேர்க்கை, தொடர்பு ஏற்பட்டால், ஏகபத்தினி விரதனையும் இல்லற வாழ்க்கையைக் கெடுத்து வேறு பெண்ணை மணக்கச் செய்துவிடும். அல்லது தொடர்பை ஏற்படுத்திவிடும். ஏழாமிடம் கெட்டவர்க்கு எத்தனை திருமணம் நடந்தாலும் எதிர்பார்த்த துணைவர் அமையமாட்டார்.
இன்று பெண்கள் குடும்பத்திற் காகசம்பாதிக்க பணிக்குச் செல்கிறார்கள்.
அங்கே தங்கள் குடும்பக் கஷ்டங்களை சக ஆண் பணியாளர்களிடம் தெரிவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது. தன் கஷ்டங்களைக் காதுகொடுத்துக் கேட்கும் நபர்களிடம் இயற்கையாகவே நல்ல அபிப்பிராயம் வந்து விடுகிறது. அங்குதான் பிரச்சினை தொடங்கு கிறது. அவர்களும் தங்கள் மனைவிபடுத்தும் கொடுமைகளை விவரிக்கிறார்கள். 'உங்களைப் போன்ற அன்பான நல்லவரைத் திருமணம் செய்திருந்தால் நான் பாக்கியவான்' என ஒருவரையொருவர் புகழ்ந்துபேசி தவறான உறவுக்குள் நுழைகிறார்கள். அதன்பிறகு கணவர்லி மனைவியிடமிருந்து பிரிய ஆசைப் படுவார்கள். அங்கே பிள்ளைகள் தடையாய் இருப்பார்கள். தங்களுடைய தகாதலி முறையற்ற உறவுக்காகமுடிவெடுக்க நினைத்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவுகளை எடுத்து அசிங்கப்பட்டு கடைசியில் வாழ்க் கையை நரகமாக்கிக் கொள்கிறார்கள். முன்யோசனையின்றி இருப்பவர்கள் தண்டனை அடைந்தேயாக நேரும். அதற்கு காரணம் நான்காமிட கெடுதல்தான்.
நான்காமிடம்
நான்காமிடம் கெட்டுவிட்டால் வாழ்க்கை யில் இல்லற சுகம் கெட்டுவிடும். நான்காமிடத் தில் பாவகிரகங்கள் இருந்தால் ஏழாம் பார்வையால் பத்தாமிடத்தைப் பார்க்கும். சுகத்தைக் கெடுக்குமிடம் தொழில் செய்யு மிடம். செய்யும் தொழிலால் சரிவர குடும்பம் நடத்தமுடியாது. அல்லது சுகத்திற்காக தொழிலை சரிவர நடத்தமுடியாது. ஆக மொத்தத்தில் சுகத்தை தொழில் செய்யுமிடத் தில் கொடுத்துக் கெடுக்கவும் செய்வார். நான்காமிட பாவகிரகப் பார்வைகள் தொழில் செய்யுமிடத்தில் தவறானலி முறையற்ற உறவு களைத் தந்து சுகத்தை இழக்கச்செய்யும்.
ஆண்களைப் பொருத்தவரை, இன்னொரு பெண்ணோடு சென்றுவிட்டு மனைவியிடம் திரும்பவந்தால் திருந்தியதாய்ச் சொல்லி, சமாளித்து குடும்பத்தில் ஒன்றுசேர்ந்து விடுவார்கள். அதற்குக் காரணம் பெரும்பாலான மனைவிகள் மன்னித்துவிடுகிறார்கள்.
அப்படி இல்லையென்றாலும் சம்பாதித்த சொத்துகளைக் கையில் வைத்துக்கொண்டு, பிள்ளைகளுடன், அதிக அவமானமின்றி கடைசிக் காலங்களைக் கடத்திவிடுகிறார்கள்.
ஆனால் கணவரைவிட்டு விலகிவரும் பெண்களுக்கு 'ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்' முடிந்ததும், நம்பி வந்த ஆண்களால் கேட்கப்படும் கேள்விலி 'இப்படி எத்தனை ஆண்களுடன் இருந்தாய்', 'உன் கணவனைவிட்டு வந்த நீ, என்னைவிட்டு இன்னொருவருடன் செல்ல மாட்டாய் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா', 'நீ ஒரு விபச்சாரி'என்பது போன்றவையாகும். இவ்வாறு காயப்படுத்தப்பட்டு, பெற்ற பிள்ளைகளாலும் அவமானப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டு, 'ஏன் இந்த தவறைச் செய்தோம்' என்று நொந்து இறப்பதே அதிகம் நடந்துவிடுகிறது. இதனைத் தீர்மானிப்பது இரண்டாமிடம்.
இரண்டாமிடம்
இரண்டாமிடம் கெட்டவர்களின் இல்லற வாழ்க்கை இனிக்காது. குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பொருளாதார சிக்கலால் அவதிப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். இரண்டாமிடம், இரண்டாமதிபதி, ஏழாமிடம், ஏழாமதிபதி ஏதாவதொருவிதத்தில் இணைந்து, பார்த்துக் கெட்டிருந்தால் திருமணத்திற்குப்பிறகு சொல்ல முடியா கஷ்டத்தை அனுபவிப்பர். பாவகிரக வலுப்பெற்று இரண்டா மிடத்தையும் பார்த்தால், அடுத்தவரை நம்பிலி அதாவது நண்பர்கள், தொழில் கூட்டாளியால் குடும்ப வாழ்க்கையை இழப்பர். வாய்ப்பேச்சால் வம்பிழுப்பர். துணைவரைவிட்டு விலகநினைத்து, கிடைத்த வாழ்க்கையையும் இழப்பர்.
பரிகாரம்
பெண்களை தெய்வமாய் மதிக்கும் ஆண்மகன்கள் இங்கே அதிகம் இருப்பதால்தான், பெண்களின் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத் துவம் தருகிறார்கள். நம்நாட்டில் மட்டுமே இறந்த பெற்றோர்களை மதித்து, தெய்வமாய் வழிபடும் பழக்கம் உள்ளது. மற்ற நாடுகளில் நடைமுறையிலுள்ள கலாச்சாரத்தை நம்மால் பின்பற்ற முடியாத தற்குக் காரணம், பல ஆண்களுடன் இருக்கும் பாட்டியின் படத்தை வைத்து 'குல சாமி' என நம்மால் கும்பிட முடியாது என்பதால்தான். பொதுவாக இரண்டு, நான்கு, ஐந்து, ஏழு, பத்தாமிடங்கள் கெட்டாலே குடும்ப தோஷம்தான். குடும்ப வாழ்க்கைக்கு முக்கியமான ஏழாமிடம் என்பது களத்திரத்தால் உண்டாகும் மாற்றத்தை அறியக்கூடிய இடம். ஏழாமிடத்தைக் கெடுக்கும் ஸ்தானம், ஏழாமிடத்தால் கெடும் ஸ்தானத் தைப் பொருத்து திருமணத்திற்கு இடர்ப்பாடுகள் வருகிறது. ஆதலால் எப்பேற்பட்ட களத்திர தோஷமாக இருந்தாலும், பொறுமையான, நிதானமான, தாமதமான திருமணமே, களத்திர தோஷம் உள்ளவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும்.
செல்:96003 53748