கண்ணுக்குத் தெரியாத விரோதிகளால் பலரின் உயர்வு பாதிக்கப்படுகிறது. அதிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்யவேண்டும்?
வாழ்க்கையில் பலரின் உயர்வைப் பார்த்து பொறாமை உண்டாகி, அவருடன் பழகிய வர்களே எதிரிகளாக மாறிவிடுவார்கள். சிலர் நண்பர்களாகப் பழகிக்கொண்டே சதிச் செயலில் ஈடுபடுவார்கள். சிலருக்கு, அவரின் குடும்பத்தில் உள்ளவர்களே விரோதிகளாக இருப்பார்கள்.
கண்ணுக்குத் தெரியாத பகைவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஒருவரின் ஜாதகத்திலிருக்கும் லக்னம், லக்னாதிபதியின் பலம், 3-ஆவது பாவம், 3-ஆவது பாவத்திலுள்ள கிரகம், 3-ஆவது பாவத்தைப் பார்க்கும் கிரகம், 6-ஆம் பாவம், 6-ஆவது பாவத்தைப் பார்க்கும் கிரகம், 6-ஆம் பாவத்தின் நிலைமை, சனியின் நிலைமை, செவ்வாயின் நிலைமை ஆகியவற்றைப் பார்க்கவேண்டும்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்து, அதே ஜாதகத்தில் 3-ஆவது பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், அவருடைய உறவினர்களும், சகோதரர் களும்கூட அவருடைய வளர்ச்சியைப் பார
கண்ணுக்குத் தெரியாத விரோதிகளால் பலரின் உயர்வு பாதிக்கப்படுகிறது. அதிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்யவேண்டும்?
வாழ்க்கையில் பலரின் உயர்வைப் பார்த்து பொறாமை உண்டாகி, அவருடன் பழகிய வர்களே எதிரிகளாக மாறிவிடுவார்கள். சிலர் நண்பர்களாகப் பழகிக்கொண்டே சதிச் செயலில் ஈடுபடுவார்கள். சிலருக்கு, அவரின் குடும்பத்தில் உள்ளவர்களே விரோதிகளாக இருப்பார்கள்.
கண்ணுக்குத் தெரியாத பகைவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஒருவரின் ஜாதகத்திலிருக்கும் லக்னம், லக்னாதிபதியின் பலம், 3-ஆவது பாவம், 3-ஆவது பாவத்திலுள்ள கிரகம், 3-ஆவது பாவத்தைப் பார்க்கும் கிரகம், 6-ஆம் பாவம், 6-ஆவது பாவத்தைப் பார்க்கும் கிரகம், 6-ஆம் பாவத்தின் நிலைமை, சனியின் நிலைமை, செவ்வாயின் நிலைமை ஆகியவற்றைப் பார்க்கவேண்டும்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்து, அதே ஜாதகத்தில் 3-ஆவது பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், அவருடைய உறவினர்களும், சகோதரர் களும்கூட அவருடைய வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமை உண்டாகி, மறைமுக விரோதிகளாக மாறுவார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் 3-ஆவது பாவத்தில் கேது இருந்து, அந்தக் கேதுவை 12-ஆவது வீட்டிலுள்ள செவ்வாய் பார்த்தால், அருகில் இருப்பவர்களே பகைவர்களாக மாறுவார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் 3-ஆவது பாவத்தில் கேதுவும் செவ்வாயும் இருந்து, அதை சனி 6-ல் இருந்து பார்த்தால், அவருக்கு அளவற்ற தைரியம் இருக்கும். ஆனால் அவருடைய பல நண்பர்களும், உறவினர்களும் மறைமுக விரோதிகளாக இருப்பார்கள்.
ஒரு ஜாதகத்தில் 4-ல் சூரியன் இருந்து, அந்த சூரியன் 7-ல் உள்ள சனியால் பார்க்கப்பட்டால், அவருடைய தாத்தாவின் குடும்பத்தில் மறைமுகமாக எதிரிகள் இருப்பார்கள். குடும்பத்தின் சொத்து அவருக்குக் கிடைக்கக்கூடாது என்பதற்காக சூனியம் செய்வார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் 11-ல் சந்திரன் இருந்து, அதே ஜாதகத்தில் 6-ஆவது பாவத்தில் செவ்வாய் இருந்து, 7-ஆவது பாவத்தில் ராகு அல்லது சனி இருந்தால், அவருடைய உறவினர் கள் மறைமுக பகைவர்களாக இருப்பார்கள். அவர் நன்றாக வரக்கூடாது என்பதற்காக சூனியம் செய்வார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் 12-ஆவது பாவத்தில் செவ்வாய், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அவருடைய வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்போது, அவருடைய மறைமுக விரோதிகள் எதிராக செயல்படுவார்கள்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகர் கடுமையாகப் பேசுவார். அதனால் அவருடைய உறவினர்களும், நண்பர்களும்கூட அவருக்கு மறைமுக எதிரிகளாக மாறுவார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், 6-ல் சனி, 9-ல் ராகு இருந்தால், அவர் பெயர், புகழுடன் இருப்பார். ஆனால், அவருடைய நெருங்கிய நண்பர்களும், தொழிலில் உடனிருப்பவர்களும் அவருக்கு எதிராக செயல்பட்டு, பிரச்சினைகளை உண்டாக்குவார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் 6-ல் சனி, 9-ல் ராகு, 11-ல் சந்திரன் இருந்தால், அவருடைய குடும் பத்தில் உள்ளவர்களும், நண்பர்களும் அவரு டைய வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப் பட்டு கெடுதல் செய்ய நினைப்பார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் புதன், சூரியன், 2-ஆம் பாவத்தில் சுக்கிரன், செவ்வாய், 3-ல் கேது அல்லது ராகு இருந்தால், அவரின் நண்பர்களும் தம்பிகளும்கூட பல நேரங்களில் மறைமுக எதிரிகளாக செயல்படுவார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், சுக்கிரன், ராகு இருந்து, அதே ஜாதகத்தில் 8-ல் சந்திரன் இருந்தால், ஆரம்ப காலத் திலிருந்தே அவருடைய தந்தையின் நண்பர் களும், குடும்பத்தில் உள்ளவர்களும் மறை முகப் பகைவர்களாக செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் நீசச் செவ்வாய், 4-ல் சூரியன், 7-ல் சனி இருந்தால், அந்த ஜாத கர் எங்கு பணியாற்றினாலும் அல்லது தொழில் செய்தாலும், அங்கு மறைமுக எதிரிகள் இருப்பார்கள்.
ஒரு வீட்டின் மத்திய பகுதியில் நீர்த் தொட்டி அல்லது கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு இருந்தால், அவரை அழிப்பதில் அவருடைய நெருங்கிய உறவினர் களே மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள்.
ஒரு வீட்டின் தென்மேற்கு தசையில் கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு இருந்தால், அந்த ஜாதகர் நன்கு வாழக்கூடாது என்று அவருடைய நண்பர்களும், உறவினர்களும் மறைமுகமாக செயல்படுவார்கள்.
ஒரு வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு இருந்தால், அங்கிருக்கும் மனிதரின்மீது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படு வார்கள்.
பரிகாரங்கள்
வீட்டின் வடகிழக்குப் பகுதி சுத்தமாக இருக்கவேண்டும். தேவையற்ற பொருட்களை அங்கு தேக்கி வைக்கக்கூடாது.v வீட்டின் தென்மேற்கு திசையில் சாளரம் அல்லது வாசல் இருக்கக்கூடாது.
வீட்டின் வடகிழக்கு அல்லது வடமேற்கில் படுக்கையறை இருக்கக்கூடாது.
கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது.
தினமும் ஆஞ்சனேயரை வழிபடவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை பைரவர் ஆலயத்திற்குச் சென்று, அவரைச் சுற்றிவர வேண்டும். அங்கு ஒரு தீபத்தை ஏற்றிவைக்கவேண்டும்.
செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் அரச மரத்திற்கு ஒரு தீபம் ஏற்றவேண்டும். அரச மரம் இல்லையென்றால், ஆலமரத்திற்கு அடியில் ஒரு தீபத்தை ஏற்றிவைக்கவேண்டும்.
தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணிய வேண்டும்.
செல்: 98401 11534