டிச்சு முடிச்சுட்டு வேலை கிடைக்கல..

படிச்சதுக்கேற்ற வேலையுமில்ல

கிடைச்ச வேலையும் பிடிக்கல

பிடிச்ச வேலையும் நிலைக்கல..

என்னதான் பண்ண போறேன்

எப்படித்தான் வாழ போறேன்..

பணம் இல்லாம வீட்டுக்கு

வெளியே அசிங்கப்படறதவிட..

வீட்டுக்குள்ள அசிங்கப்படுறது

ரொம்ப கஷ்டமா இருக்கு..

இங்கே எல்லாமே பணமாகிப்போச்சு

பணம் இருந்தாதான்

பந்த பாசம் நிலைக்குது..

பணம் சம்பாதிக்க, பணம் பெருக்க

ஒரு வழியை சொல்லுங்க!...

தனம், குடும்பத்தை குறிக்கிறது

இரண்டாம் இடம்..

பணம் இருந்தாதானே

குடும்பம் நடத்த முடியும்?!..

பணம் இல்லாம பாசத்தை மட்டும்

வச்சிருந்தா உன் பசி தீருமா?!..

ஒருநாள் பசி அடக்கலாம்

ஒவ்வொரு நாளும் அடக்க முடியுமா?!..

பணக்காரனா இருந்தாதான்

மதிப்பாங்கன்னு யார் சொன்னது?!..

கொடுக்கிற பணக்காரனா இருந்தாதான்டா

உலகமே மதிக்கும்..

வீடா இருந்தாலும், நாடா இருந்தாலும்

நாலு பேருக்கு நீ செஞ்சாதான்

உனக்கு மரியாதை கிடைக்கும்...

Advertisment

ss

இரண்டாம் இடத்தில

சுப கிரகங்கள் நின்றாலோ..

இரண்டாம் இடத்தை

சுப கிரகங்களால் பார்த்தாலோ

இரண்டாம் அதிபதியுடன்

லக்ன சுபர்கள் சேர்ந்தாலோ..

இரண்டாம் அதிபதி தசை நடந்தாலோ

சுப தசைகள் நடந்தாலோ

நல்ல பண வரவு உனக்கு கிடைக்கும்..

இரண்டாம் அதிபதி சுபத் தன்மையுடன் இருந்தால்

பணமும் கிடைக்கும்..

குடும்பமும் நல்ல முறையில் அமையும்..

இரண்டாம் இடம்

ஆறு, எட்டு, பன்னிரண்டு தொடர்பு

பாவ கிரக தொடர்பு ஏற்பட்டால்..

ஆரம்பக் கல்வியும் போச்சு

அன்பான வாழ்க்கையும் போச்சு

பணம் சம்பாதிக்கிற

பாதையும் தெரியாமல் போகும்...

தொழில் ஸ்தானம்

நல்லா இருந்துச்சுன்னா..

படிச்சதும் உனக்கு வேலை கிடைக்குமப்பா..

எந்தத் தொழில் நீ செஞ்சாலும்

அதுல நீ முதலாளி ஆகிடுவப்பா..

ரெண்டு, பத்துக்குடையவர்கள்

இணைந்தாலும் பார்த்துக்கொண்டாலும்

இருவரையும் சுப கிரகங்கள் பார்த்தால்

எந்தத் தொழில் செய்தாலும்

ஏற்றத்தின்மேல் ஏற்றம் பெறுவார்கள்..

10, 11 வலுத்தாலும்

பாவத் தொடர்பின்றி இருந்தாலும்

தொழில் லாபம் உண்டாகுமப்பா...

அடிமைத் தொழில்

அரசாங்க வேலை கிடைக்க

ஆதித்யன் வலுப்பெற வேண்டும்..

சிம்ம வீட்டில் சுப கிரகங்கள்

சிம்ம வீட்டை சுப கிரகங்கள்

சூரியனை சுப கிரகங்கள் பார்த்தால்

பாவ கிரகங்கள் தொடர்பின்றி இருந்தால்

படித்து முடித்ததும் வேலை கிடைக்குமப்பா..

பவர்ஃபுல்லான வேலை கிடைக்க

பத்தாம் இடம் வலுத்திருக்க வேண்டும்..

லக்னாதிபதி வலுத்து நின்றால்

அரசாங்கத்தை ஆளும் யோகம் வருமப்பா...

சிம்மமும் சூரியனும் சுபத் தன்மை பெற்று

லக்னம் கெடாமல் இருந்தால்

குடிசைவாசியையும் கோடீஸ்வரனாக்கும்...

ஐந்தில் சுப கிரகங்கள் இருந்தால்

ஐந்தாம் இடத்தை சுப கிரகங்கள் பார்த்தால்

ஐந்தாம் அதிபதியுடன் சுப கிரகங்கள் தொடர்பு

அத்தனையும் அம்சமான பலன்களைத் தரும்..

ஒன்பதாம் இடத்தில் சுப கிரகங்கள்

ஒன்பதாம் இடத்தை சுப கிரகங்கள் பார்த்தால்

ஒன்பதாம் அதிபதியுடன் சுப கிரகங்கள் தொடர்பு

கூடுதலாக லக்னமும் சுபம் பெற்றால்

உலகம் போற்றும் உத்தமனாய்

மனைவி போற்றும் மகேஸ்வரனாய்

மக்கள் போற்றும் வள்ளலாய்

மகத்தான பேரும் புகழும் பெற்று

பார் போற்ற வாழ்வானப்பா...

ஐந்து ஒன்பது பலம் பெற்றாலும்

ஐந்து ஒன்பது லக்னத்தை பார்த்தாலும்

நல் குடியில் பிறந்து

நாடு போற்றும் நல்லோன் ஆவான்...

விபரீத ராஜயோகம்

கெட்ட கிரகம் கெட்டுப் போயிருந்தால்

ராஜயோகம் பெற்று வாழ்வானப்பா..

6, 8, 12-ஆம் அதிபதிகள்

ஆறு, எட்டு, பன்னிரண்டில் மறைந்தால்

சுப கிரகத்துடன் தொடர்புகொண்டு

சூட்சமமாய் பலம் பெற்றால்

பாதகாதிபதியும் மாரகாதிபதியும்

கெடுதல் செய்ய பயப்படுமப்பா..

கெட்ட தசை கெட்டுப் போய் நடந்தால்

கெட்ட தொழிலால்

கோடி கோடியாய் சம்பாதிப்பான்..

எட்டு பன்னிரண்டாம் இடங்கள்

பல சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால்

நாடு விட்டு நாடு போய்

வீடும் நாடும் போற்ற வாழ்வான்..

கெட்ட தசையில் சொந்த ஊரைவிட்டு

பரதேசி வாசம் போனவன்..

நல்ல தசை வந்ததும் நார்மலான வாழ்க்கை

நம்ம ஊரிலே வந்து வாழ்வான்..

இரண்டாம் இடம் கெட்டுப் போனதால

ரெண்டு பொண்டாட்டி

கட்டி வாழ்ந்தவனும் இருக்கான்..

கல்யாணம் ஆகாமல்

காவி கட்டி போனவனும் இருக்கான்..

பரிகாரம் பலவிதம் இருக்குப்பா..

முதல் பரிகாரம் யார்கிட்டயும்

பாசத்தை எதிர்பார்க்காத..

வாய்ப்பேச்சால் வருமானம் தேடுற வேலைய பாரு..

மார்க்கெட்டிங் நீ போனாதான்

மார்க்கெட்டுலநீ நிலைச்சிருப்ப..

புரோக்கர் வேலையோ

முதல் போடாத வேலையிலோதான்

நீ முதல் இடத்துக்கு வரமுடியும்..

இரண்டாம் இடம் வலுத்து இருந்தால்

வக்கீலாகி முன்னேறுவ..

இரண்டாம் இடம் கெட்டுப் போனால்

வாய்தா வாய்தாவுக்கு நீ அலைவ..

இரண்டாம் இடத்து அதிபதி

இரண்டில் இருக்கும் கிரகங்களை

முறையாக வழிபட்டால்

பணம் கோடி கோடியாய் கொட்டுமப்பா...

செல்: 96003 53748

Advertisment