Advertisment

மரகதம் அணிவதால் என்ன பயன்? - மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/what-use-emerald-worn-mahesh-verma

ரகதப் பச்சை என்ற "எமரால்ட்' புதனுக்கான ரத்தினம்.

எழுத்தாளர்கள், புத்தக வியாபாரிகள், பத்திரிகை உரிமையாளர்கள், பதிப்பகம் நடத்துபவர்கள், வழக்கறிஞர்கள், அரசாங்கத் தூதர்கள், பெரிய வர்த்தகர்கள், போக்குவரத்து வாகன உரிமையாளர்கள், விஞ்ஞானிகள், பங்குச்சந்தையில் இருப்பவர்கள், வங்கி அதிகாரிகள், மனநோய் நிபுணர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பொறியியல் வல்லுநர்கள், கதாசிரியர்கள்- இவர்களின் ஜாதகத்தில் புதன் பலமாக இருக்கும்.

Advertisment

ஒருவரின் ஜாதகத்தில் புதன் கெட்டுப்போயிருந்தால், வாதம், பித்தம், கபம், தோல் நோய், காதில் நோய் வரும்.

தொண்டையில் கரகரப்பு ஏற்படும். மூக்கடைப்பு உண்டாகும். ஆறாத காயம் இருக்கும். சிந்தனை அலைபாயும். மஞ்சள் காமாலை, தோலில் எரிச்சல், மூலநோய், வயிற்று வலி, அஜீரணம், குஷ்டம், அம்மை, நீரிழிவு நோய், திக்குவாய், படை, சொறி, பக்கவாதம் ஆகியவை உண்டாகும்.

ஜாதகத்தில், லக்னத்தில் புதன் இருந்தால் அவர் ஆழமாக சிந்திப்பார். நல்ல எழுத்தாளராக இருப்பார். அந்த புதன் லக்னாதிபதியாக இருந்து உச்சமாக இருந்தால், அவருக்கு பத்திரயோகம் உண்டாகும். அத்துடன் சூரியன் இருந்தால், புதாதித்ய யோகம் உண்டாகும்.

ரகதப் பச்சை என்ற "எமரால்ட்' புதனுக்கான ரத்தினம்.

எழுத்தாளர்கள், புத்தக வியாபாரிகள், பத்திரிகை உரிமையாளர்கள், பதிப்பகம் நடத்துபவர்கள், வழக்கறிஞர்கள், அரசாங்கத் தூதர்கள், பெரிய வர்த்தகர்கள், போக்குவரத்து வாகன உரிமையாளர்கள், விஞ்ஞானிகள், பங்குச்சந்தையில் இருப்பவர்கள், வங்கி அதிகாரிகள், மனநோய் நிபுணர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பொறியியல் வல்லுநர்கள், கதாசிரியர்கள்- இவர்களின் ஜாதகத்தில் புதன் பலமாக இருக்கும்.

Advertisment

ஒருவரின் ஜாதகத்தில் புதன் கெட்டுப்போயிருந்தால், வாதம், பித்தம், கபம், தோல் நோய், காதில் நோய் வரும்.

தொண்டையில் கரகரப்பு ஏற்படும். மூக்கடைப்பு உண்டாகும். ஆறாத காயம் இருக்கும். சிந்தனை அலைபாயும். மஞ்சள் காமாலை, தோலில் எரிச்சல், மூலநோய், வயிற்று வலி, அஜீரணம், குஷ்டம், அம்மை, நீரிழிவு நோய், திக்குவாய், படை, சொறி, பக்கவாதம் ஆகியவை உண்டாகும்.

ஜாதகத்தில், லக்னத்தில் புதன் இருந்தால் அவர் ஆழமாக சிந்திப்பார். நல்ல எழுத்தாளராக இருப்பார். அந்த புதன் லக்னாதிபதியாக இருந்து உச்சமாக இருந்தால், அவருக்கு பத்திரயோகம் உண்டாகும். அத்துடன் சூரியன் இருந்தால், புதாதித்ய யோகம் உண்டாகும். இத்தகைய அமைப் டைய ஜாதகர் முன்கூட்டியே பல விஷயங்களைத் தெரிந்து கொள்வார். நன்மைகள் செய்யக் கூடியவராக இருப்பார். அந்த லக்னத்திற்கு கேந்திரத்தில் குரு இருந்தால் அல்லது குரு, லக்னத் திலிருக்கும் புதனைப் பார்த்தால் ஜாதகர் திறமைசாலியாக இருப் பார். பல வெற்றிகளைக் காண்பார். சுயமுயற்சியால் முன்னுக்கு வருவார்.

சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள்.

Advertisment

ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் புதன் இருந்தால் ஜாதகர் நல்ல வியாபாரியாக இருப்பார். அந்த புதனை குரு பார்த்தால் ஜாதகர் தன் 23 வயதிற்குப் பிறகு பெரிய வர்த்தகராவார். அறிவாளியாக இருப்பார். 2-ல் புதன், சுக்கிரன், சூரியன் சேர்ந்திருந்தால், அவர் உயிரியல் படிப்பில் உயர் நிலையில் இருப்பார். அதுவும் விசேஷமாக 10-ல் செவ்வாய் இருந்தால் ஜாதகர் மருத்துவராக வருவார். 2-ல் புதன், சூரியன், செவ் வாய் சேர்ந்திருந்தால், ஜாதகர் தன் சுயமுயற்சியால் பெரிய ஆளாக வருவார்.

Emerald3-ஆவது வீட்டில் புதன் இருந்தால் ஜாதகர் அறிவாளியாக- தைரியசாலியாக இருப்பார். நிறைய நண்பர்கள் இருப்பார்கள். அந்த இடத்தில் சூரியனும் இருந்தால் விக்ரமாதித்ய யோகம் உண்டாகும். அதனால் சுயமுயற்சியால் பெரிய மனிதராக வருவார். 3-ஆம் பாவத்தில் புதன், சனி, ராகுவுடன் இருந்தால் அவருக்கு தோலில் நோய் வரும். சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. சிலருக்கு அலைச்சல்கள் இருக்கும்.

4-ஆவது பாவத்தில் புதன் இருந்தால் ஜாதகருக்கு பல சிக்கல்கள் உண்டாகும். ஆனால், சூரியனுடன் புதன் இருந்தால் புதாதித்ய யோகம் உண்டாகும். சுயமுயற்சியால் முன்னுக்கு வருவார். அதை குரு பார்த்தால் புகழுடன் இருப்பார். 4-ல் புதன் செவ்வா யுடன் இருந்தால், திருமணத்தில் தடை இருக்கும். புதன், சனி, செவ்வாய் இருந்தால், திருமணத்தில் பிரச்சினை ஏற்படும். தாய்க்கு உடல்நல பாதிப்பு உண்டாகும்.

5-ஆவது வீட்டில் புதன் (சுயவீட்டிலோ அல்லது உச்சமாகவோ) இருந்தால், அவர் பல கலைகள் கற்றவராக இருப்பார். அங்கு சூரியனும் இருந்து அதை குரு பார்த்தால், அவர் பல கலைகள் தெரிந்தவராக இருப்பார். ஆனால், புதன், சனி, ராகுவுடன் 5-ல் இருந்தால், பெண்ணின் கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்படும்.

6-ல் புதன் இருந்தால் நெருங்கிய நண்பர்களே பகைவர்களாவார்கள். தோலில் நோய் வரும். ஆனால், சூரியனுடன் புதன் இருந்தால் பகைவர்கள் குறைவார்கள். புதன், சுக்கிரன், சூரியன் 6-ல் இருந்தால், அவர் நன்கு பணம் சம்பாதிப்பார்.

7-ல் புதன் தனித்திருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். மனதில் சந்தோஷம் இருக்காது. ஆனால் அதை குரு பார்த்தால் நல்லது. புதன், குருவுடன் இருந்தால், மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். புதன், சனியுடன் 7-ல் இருந்தால், பிறப்புறுப்பில் சிறிய பிரச்சினை இருக்கும்.

புதன் 8-ல் இருந்தால், ஜாதகர் உடல்நலத்துடன் இருப்பார். ஆனால், நீரில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். புதன், சூரியன், சந்திரன் 8-ல் இருந்தால் சீதளம் பிடிக்கும்.

ஜாதகத்தில் 9-ல் புதன் இருந்தால், அவர் தைரியசாலியாக- அறிவாளியாக இருப்பார். புதன் சுக்கிரனுடன் இருந்தால், பெரிய பணக்காரரார். புதன், சூரியன், சனி 9-ல் இருந்தால், தந்தையுடன் பிரச் சினை இருக்கும். வாழ்வில் பல சிரமங்கள் இருக்கும்.

10-ல் புதன் இருந்தால் ஜாதகர் சந்தோஷ மாக இருப்பார். நல்ல ஆசிரியராக- எழுத் தாளராக இருப்பார். புதன், சூரியனுடன் இருந் தால் சிறந்த வியாபாரியாக இருப்பார். பணம் சம்பாதிப்பார். புதன், சூரியன், சந்திரன் 10-ல் இருந்தால் பெரிய வெற்றிகளைக் காண்பார்.

11-ல் புதன் இருந்தால், பெரிய படிப்பாளி யாக இருப்பார். புதன், சூரியனுடன் சேர்ந்து 11-ல் இருந்தால், அவரால் தந்தைக்கு நல்ல பெயர் கிடைக்கும். புதன், செவ்வாய், சனி 11-ல் இருந்தால், வயிற்றில் பிரச்சினை- பெண்ணின் கர்ப்பப்பையில் பிரச்சினை இருக்கும்.

புதன் 12-ல் இருந்தால், அவருக்கு விலைமதிப் புள்ள பொக்கிஷம் எதிர்பாராமல் கிடைக்கும். முற்பகுதியில் கஷ்டம் இருந்தாலும், பிற்பகுதி யில் நன்றாக இருப்பார். புதனுக்கு சுக்கிரன் அல்லது குருவின் பார்வை இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சியுடன் இருப்பார். நினைத்த காரி யத்தில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரங்கள்

ரிஷப லக்னக்காரர்களுக்கு புதன் 2, 5-க்கு அதிபதி. அவர்கள் மரகதப் பச்சையை அணிந்தால் புகழுடன் வாழலாம்.

மிதுன லக்னக்காரர்களுக்கு புதன் லக்னாதி பதி. அவர்கள் பச்சைக்கல் அணிந்தால் நன்மைகள் நடக்கும். உடல்நலம் கிடைக்கும். புகழுடன் வாழலாம்.

கன்னி லக்னக்காரர்கள் புதனின் ரத்தின மான பச்சைக்கல்லை அணிந்தால் சந்தோஷ மாக இருக்கலாம்.

மகர லக்னக்காரர்களுக்கு புதன் 9-க்கு அதிபதி. அவர்கள் பாக்கிய ஸ்தானாதி பதியின் ரத்தினமான மரகதப் பச்சையை அணியவேண்டும்.

கும்ப லக்னக்காரர்களுக்கு புதன் 5-க்கு அதிபதி. அவர்கள் பூர்வபுண்ணிய ஸ்தானாதி பதியான புதனின் மரகதப் பச்சையை அணியவேண்டும்.

செல்: 98401 11534

bala050419
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe