"சுகந்தியும்' என்னும் கல்லை ஆங்கிலத்தில் "அமிதிஸ்ட்' (methyst) என்பர்.

இந்தக் கல்லுக்கு நோயைக் குறைக்கும் சக்தியுண்டு. மன அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, ஞாபகக் குறைவு இருப்பவர்கள் இதை அணியலாம். இதை பிப்ரவரி மாதத்தில் பிறப்பவர்கள் அணியவேண்டுமென்று வெளிநாட்டவர் கூறுவர். சிலர் இதை நீலக்கல்லுக்கு, (ப்ளு சஃபயர்) மாற்றாக அணிகிறார்கள்.

"க்ரிஸ்டல் ஹீலிங்' செய்பவர்கள் இதை அணியும்படி சிபாரிசு செய்கிறார்கள்.

தூக்கம் சரியாக வராதவர்கள், படபடப்புடன் இருப் பவர்கள் இந்தக் கல்லை அணிந்தால் நிலைமை சரியாகும். 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இதை அணிய வேண்டுமென்பது எண்கணித நிபுணர்களின் கருத்து.

Advertisment

ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்க்கை 12 அல்லது 2-ஆம் பாவத்தில் இருந்தால், அவர்கள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவார்கள். அதனால் இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. கோப குணம் கொண்டவர்கள். மனதில் பயம் இருக்கும். அவர்கள் இந்த ரத்தினத்தை அணியலாம்.

ஒரு ஜாதகத்தில் ராகு, சனி, சுக்கிரன் 6, 8, 12-ல் இருந்தால், அதிக பயத்துடன் இருப்பார்கள். ஏராளமாக சிந்திப்பார்கள். வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. வெற்றி பெறுவதில் தடைகள் ஏற்படும். சளித் தொல்லை, தலைவலி உண்டாகும். இந்தக் கல்லை (5 காரட்) வாங்கி, வலது கை மத்திய விரலில் அணியவேண்டும்.

a

Advertisment

சூரியன், சனி, செவ்வாய் 4, 9-ல் இருந்தால் தந்தையுடன் உறவு; கணவன்- மனைவி உறவு நன்றாக இருக்காது. சிலர் அவசியமற்றதைப் பேசி பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அவர்கள் டாலராகவோ அல்லது வெள்ளியில் மோதிரமாகவோ செய்து, அதில் இந்தக் கல்லைப் பதித்து இடது கை மத்திய விரலில் அணிய வேண்டும்.

சிலரின் ஜாதகத்தில் குரு பகவான் சரியில்லையென் றால், அதை ஈடுசெய்ய இந்தக் கல்லை சுட்டுவிரலில் அணிய வேண்டுமென்று ஜோதிடர் கள் சிலர் கூறுவார்கள்.

ஆனால் சுட்டுவிரலில் இதை அணிந்தால், பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்காது. சிலருக்கு திருமணம் நடக் காது. சிலர் ஆணவத்தால் தேவையற்ற சண்டைகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் சுட்டுவிரலில் இருக்கும் கல்லை மாற்றி நடுவிரலில் அணியவேண்டும்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சனி சரியில்லை யென்றால் அல்லது செவ்வாய், சனி பார்த்தால் அல்லது சனியை செவ்வாய் பார்த்தால் ஜாதகர் கோபக்காரராக இருப்பார். வாழ்க்கை யில் சந்தோஷம் இருக்காது. சிலருக்கு நரம்புத் தளர்ச்சி இருக்கும். அவர்கள் இந்தக் கல்லை அணிந்தால் நிலைமை சீராகும்.

ஒரு ஜாதகத்தில் 9-க்கு அதிபதி 8-ல் இருந்தால், அந்த ஜாதகரின் வாழ்வில் பலவித சிக்கல்கள் இருக்கும். அதே ஜாதகத்தில் செவ்வாய், சனியின் பார்வை 8-ஆம் பாவத் திற்கு இருந்தால் அல்லது 8-ஆம் பாவத்தில் பாவகிரகத்துடன் 9-க்கு அதிபதி இருந்தால், இந்தக் கல்லை அணிவதன்மூலம் தோஷ நிவர்த்தி பெறலாம்.

செவ்வாய், சனி 5-ல் இருந்தாலும், 5-ஆவது பாவாதிபதி 6 அல்லது 12-ல் இருந்தாலும் அவர்கள் இந்த ரத்தினத்தை அணியவேண்டும். அதன்மூலம் உடல்நலம் சீராகும். பணவரவு உண்டாகும். சந்தோஷச்சூழல் ஏற்படும். பிள்ளைகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறையும். சிலரின் ஜாதகத்தில் 5, 12-ஆம் பாவாதிபதிகள் கெட்டுப்போயிருந்தால், அவர்கள் எப்போதும் மதுவின் ஆக்கிரமிப் பிலேயே இருப்பார்கள். அதனால் அவர்களின் புகழ் குறையும். வாழ்வில் சந்தோஷம் இருக்காது. அவர்கள் இந்த ரத்தினத்தை அணிந்தால் குறைகள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

6-ஆம் பாவத்தில் சனி, செவ்வாய் இருந்தால் அதிக கோபம் வரும். மனநோயால் பாதிக்கப்படுவார். பித்தம் அதிகமாக இருக்கும். ஞாபக மறதி உண்டாகும். அவர்கள் இந்த ரத்தினத்தை (7 காரட்டுக்கும்மேல்) அணிந்தால் உடல்நலம் சரியாகும்.

4-ல் செவ்வாய், 7-ல் சனி இருந்தால் சனி, செவ்வாயைப் பார்க்கும். அதனால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை உண்டாகும். வீட்டில் அவ்வப்போது சண்டை நடக்கும். அவர்கள் "சுகந்தியும்' கல்லை அணிந்தால் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

8-ல் சனி, சூரியன், செவ்வாய் இருந்தால் விபத்து நடக்க வாய்ப்பிருக்கிறது. இல்வாழ்க்கை யில் சந்தோஷம் இருக்காது. அவர்கள் இந்த ரத்தினத்தை வலது கை மத்திய விரலில் அணிந்தால் நிலைமை சீராகும்.

9, 10, 12-ஆம் பாவங்களில் செவ்வாய், சனி அல்லது சனி, செவ்வாய், ராகு இருந்தால், அந்த ஜாதகருக்கு வெற்றிகள் கிடைக்கும் நேரத்தில் பல சிக்கல்கள் உண்டாகும். நண்பர்கள் ஏமாற்றிவிடுவார்கள். வாழ்க்கை யில் சந்தோஷம் இருக்காது. அவர்கள் இந்த ரத்தினத்தை டாலராகவோ மோதிர மாகவோ அணிந்தால் துன்பங்கள் விலகும்.

செல்: 98401 11534