வ்வொரு யுகத்திலும் மனிதர்களாய்ப் பிறப்பவர்கள் பல லட்சம் கோடியாய் இருந்தாலும், அதில் அவதாரமாய்ப் படைக்கப்படும் வெகுசிலர், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித ஆத்மா வாகத்தான் இருப்பர். எத்தனையோ துறைகளில் நல்லவர்களாகவும், கொடூரமானவர்களாகவும் இருந்து மக்களால் அறியப்பட்டவர்கள், சிலகாலம் பிரபலமாக இருந்து மறைந்து விடுவார்கள். இன்று கடவுளுக்கு அடுத்து மன்னருக்கு ஒப்பான, மக்களுக்கு உழைத்து, மக்களுக்காக வாழ்ந்து, பெருவாரியான மக்களால் போற்றப்பட்ட பெரிய அரசியல்வாதிகளையும், ஒவ்வொரு மதத்திலும் இறைத் தூதர்களா மக்களால் வழிபடப்பட்ட வர்களையும்கூட அறியாத மனிதர்கள் இன்னும் உலகில் உண்டு. மதம், ஜாதி, இனம், மொழி என பல்வேறாய்ப் பிரிந்திருக் கும் மனித இனத்தில், விருப்பு வெறுப்பின்றி எல்லா மனிதர்களாலும் விரும்பப்படுபவர்கள் அபூர்வப் பிறவிகள். அப்படிப்பட்ட அதிய மனிதர்களில் ஒருவர்தான் எஸ். பி. பாலசுப்ரமணியம். அவர் பாடிய பாடல்கள் பூமி உள்ளவரை பலரின் துக்கங்களைத் துடைத்து, பலர் வாழ சுவாசக்காற்றாய் உலவும். அவர் 25-9-2020 அன்று இறந்ததாய்ச் சொல்லப்பட்டாலும், இறவா புகழடைந்ததன் காரணத்தை அவர் பிறந்த ஜாதகத் தின்மூலம் அறிவோம்.

சிம்ம லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி.

Advertisment

spb

குணம்

சிம்ம லக்னமாகி, லக்னாதிபதி சூரியன் கேந்திரத்தில் அமைந்தது- எதிலும் தனித்தன்மையுடன்; முதன்மை பெறவேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்கிறது. லக்னம் சுக்கிரன் சாரம் பெற்றிருப் பது- கலை உயிரிலேயே கலந்தது- பிறவிக் கலைஞர். ராசியுடன் இணைந்த செவ்வாய் புதன் சாரம் பெற்றதால், பிறர் மனதில் இருப்பதை உணரும் ஆற்றலும், கேள்விஞானமும், பின்னால் நடக்கப்போவதை முன்னரே உணரும் ஆற்றலும் கொண்ட ஞான பிறவி. ராகு 3, 11-க்குடைய சுக்கிரன் வீட்டில் அமர்ந்தது- முன்னோர்களின் மரபணுப்படி நற்குணங்களும், இசை, ஞானமும் பிறப் பிலேயே வந்துவிட்டது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற உண்மையைப் பிறப் பிலேயே கேது வழங்கியதால், எவ்விதப் பாகுபாடுமின்றிப் பழகும் குணத்தைப் பெற்றார். பூர்வ புண்ணியாதிபதி குருவின் பார்வை லக்னாதிபதியின்மீது படுவதால் முன்னோர்கள் ஆசிர்வாதம், தெய்வ அருளால் அனைவருக்கும் பிடிக்கும் தெய்வீகப் பிறவியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறார்.

சங்கீத ஞானம்

dd2, 11-க்குடைய புதன் சூரியனுடன் இணைந்து, நினைத்ததை முடிக்கும் எண்ணத்தையும், வெற்றிக்கான அனைத்துவகையான அறிவுத் திறனையும் கொடுத்திருக்கிறார்.

Advertisment

2-க்குடைய புதன் 10-ல், 4-க்குடைய வன் 11-ல் இருப்பது நல்ல கல்வி யைக் கொடுத்தது. 4-ல் கேது இருந்து, அதன் தசையில் பள்ளிப் பருவத்திலேயே சகல ஞானத் தையும் வழங்கியது. பன்முகத் திறமை கொண்டவரை இசைத் துறைப் பாடகராக மாற்றியதற்கு மூன்றுக்குடைய சுக்கிரன் பதினொன்றில் அமர்ந்ததே காரணம். மூன்றாம் அதிபதி சுக்கிரன், இரண்டாமிடத்து அதிபர் புதன் பரிவர்த்தனை, சந்திரன் ஆட்சி, மூன்றாமிடம் வலிமைபெற்றதால்தான் சங்கீத உலகில் பேரும் புகழும் பெற்றார்.

தசாபுக்தி

லக்னாதிபதி சூரியன் பத்தாமிட மாகிய தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் தனது இறுதிக்காலம் வரை உழைத்துக் கொண்டிருந்தார். அதற்கான வழியை அமைத்துக் கொடுத்தன தசாபுக்திகள். இரண் டாம் அதிபதி புதன் சுக்கிரன் வீட்டில் அமர்ந்து, கேது சமசப்தப் பார்வை பெற்றதால், ஆரம்பக் கல்விக் காலத்திலேயே திறமை மூலம் வருமானம் பெறுவதற்குத் தேவையான ஞானம் வெளிப்பட்டு, புதன் தசை, கேது தசையிலேயே ஆரம்பமாகிவிட்டது. தொழிலதி பதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் அமைந்து, 3, 10-க்குடைய சுக்கிர தசையானது அவரது இருபதாவது வயதுக் காலத்திலேயே தொடங்கி யதால் திரைத்துறையில் கால் பதிக்க வைத்தது. ஆரம்ப காலத்தில் சில தடுமாற்றங்களும், சோதனைகளும் ஏற்பட்டாலும், சுக்கிர தசை, குரு புக்திக்குமேல் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து, வெற்றிப் படப்பாடல்கள் அமைந்து, பட்டி தொட்டியெல்லாம் புகழ் பெறத் தொடங்கினார். இசையமைப் பாளராகவும் அறிமுகமானார்.

என்றென்றும் வாழ்வார் எஸ்.பி.பி.

செல்: 96003 53748