ல வருடங்களாக பலவிதமான தவறுகளையும் ஊழல்களையும் செய்து, மக்களை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் திடீரென்று ஒருநாள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். கோடிக்கணக்கில் அபராதம் கட்டவேண்டிய சூழ்நிலை கூட சிலருக்கு உண்டாகிறது. இவ்வாறு அவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதற்கு ஜோதிடரீதியிலான காரணம் என்ன?

ஒருவருக்கு யோக தசை நடக்கும் போது, அவர் எந்த காரியத்தைச் செய்தாலும் அது அவருக்கு சாதகமாகவே இருக்கும். எதைச் செய்தாலும் வெற்றி கிடைக்கும். ஜாதகத்தில் ராஜயோகம் இருந்து ராகு அதைப் பார்த்தால், அவருக்கு ராகு தசை அல்லது அந்தரம் நடக்கும்போது திடீரென்று சிக்கலில் மாட்டிக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும்.

sss

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், 2-ல் செவ்வாய், கேது, 6-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அவர் வாழ்க்கையின் பிற்பகுதியில் பெரிய மனிதராக- நல்ல புகழுடன் இருப்பார். ஆனால், அவருக்கு ஏழரைச்சனி அல்லது அஷ்டமச்சனி நடக்கும்போது பிரச்சினைகள் உண்டாகும். ராகு தசை வரும்போது, மேலும் பிரச்சினைகள் ஏற்படும். பெயர் கெடும். சிலர் சிறைக்குக்கூட செல்வார்கள்.

Advertisment

லக்னத்தில் புதன், சூரியன், ராகு இருந்து, 5-ல் சனி, 11-ல் சந்திரன் இருந்து அவருக்கு ராகு தசையோ சந்திர தசையோ நடக்கும்போது புகழ் கெடும். திடீரென்று பிரச்சினையில் சிக்கிக்கொள்வார்கள்.

லக்னத்தில் ராகு, சூரியன், சுக்கிரன் இருந்து, 12-ல் சந்திரன் இருந்தால், ராகு தசையோ சனி தசையோ நடக்கும்போது, பெரிய பிரச்சினைகளில் அகப்பட்டுக்கொள்வார். பெயர் கெடும்.

லக்னத்தில் சூரியன், செவ்வாய் இருந்து, 10-ல் ராகு இருந்து, ராகு தசை நடக்கும்போது பதவி கிடைக்கும். ஆனால் திடீரென்று ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டு பெயர் கெடும்.

Advertisment

லக்னத்தில் செவ்வாய், ராகு, 2-ல் சூரியன், சந்திரன், 11-ல் சனி இருந்து, அவருக்கு சனி தசை நடக்கும்போது, திடீரென்று பிரச்சினைகள் ஏற்படும். பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வார்.

லக்னத்தில் செவ்வாய், 5-ல் ராகு, 7-ல் சூரியன், 12-ல் சனி இருந்து ராகு தசையோ சனி தசையோ நடந்தால், அவர் பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்வார். பெயர் கெடும் சூழல் உண்டாகும். அதிலிலிருந்து மீள்வதே சிரம மான விஷயமாக இருக்கும். சிலர் தலைமறைவாகி விடுவார்கள்.

பரிகாரங்கள்

தவறு செய்யாமல் சிக்கல் களைச் சந்திப்பவர்கள்...

தினமும் விநாயகரை வழிபடவேண்டும்.

அரச மரத்திற்குக் கீழே இருக்கும் நாகர் சிலைக்குப் பால் வார்த்து தீபமேற்றவேண்டும்.

வெள்ளிக்கிழமை காளி கோவிலுக்குச் சென்று பூஜை செய்யவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை பைர வருக்கு தீபமேற்ற வேண்டும்.

வீட்டில் ருத்ராபிஷேகம் செய்வது நல்லது.

வீட்டின் தெற்கு திசையில் கிணறு, நீர்த்தொட்டி இருக்கக்கூடாது.

லக்னாதிபதி, 5-க்குரிய கிரகத்தின் ரத்தினத்தை அணிவது நல்லது.

வீட்டில் ஆஞ்சனேயர் எந்திரத்தை வைத்துப் பூஜிக்கலாம்.

செல்: 98401 11534