மனிதர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத, நம்பமுடியாத ஆச்சர்ய நிகழ்வுகள் ஒவ்வொரு வருக்கும் சில நேரங்களில் நடைபெறும். திடீரென்று நம் திறமைக்கு மேலான புகழும், திறமையிருந்தும் இகழ்வுகளை சந்திக்கும் தருணங்களும் ஏற்படும். ஏன் இப்படி நடக்கிறதென்று புரியாமலும், கண்முன்னே எதையும் தடுத்துநிறுத்த முடியாத சூழலும் நம்மை நிலை குலையச் செய்யும். இதற்கெல்லாம் காரணம் என்ன? தீமை நடப்பது நம்மேல் பிறர்கொண்ட பொறாமையாலா? கண் திருஷ்டியாலா? பிறர் நமக்கு வைக்கும் செய்வினைக் கோளாறாலா? அதேபோல் லாபம் பெறுவது நம் திறமையாலா? பெரும் லாபம் அடைவது அதிர்ஷ்டத்தால் தானா? "எல்லாம் விதி' என்றால் நன்மை- தீமை எந்த நேரத்தில் நடைபெறுகிறது?
எதிர்பாராத நன்மை பெறும் காலம்
சாதாரணமாக அன்றாட வாழ்க்கைக்கே போராட்டமாகவோ, கடன் பிரச்சினையில் மூழ்கி வெறுத்திருக்கும் நேரத்திலோ, நமக்கு அறிமுகமே இல்லாத நபர் நம்மை அழைத்து தேவையான உதவி செய்து, நம் வாழ்க்கையை இன்பமயமாக மாற்று வார். யாருடைய உதவியுமின்றி உழைத்துக் கொண்டே படிப்படியாக உயரும் காலத்தில், திடீரென்று பெரிய ஒப்பந்தம் பெற்று சில வருடங் களில் சுயதிறமையால் பெரிய முன்னேற்றம் பெற்றவர்களும் உண்டு. அதிஷ்டமோ, திறமையோ- ஏதோ ஒருவகையில் திடீர் முன்னேற் றம் பெறுவதற்கு சில கிரக நிலைகள் உண்டு.
பிறந்ததுமுதலே சிலர் அதிக கஷ்டமடை யாமல் வாழ்ந்து கொண்டிருப்பர். அவர்களுக்கு லக்னாதிபதி, ராசியாதிபதி, கிரகங்கள் சுபத் தன்மை, ஆட்சி, உச்சம் பெறுதல், கேந்திர, திரி கோணங்களில் இருப்பது முன்னேற்றமான- நிம்மதியான வாழ்வைத் தரும். 2, 4, 5, 7, 9, 10, 11-ஆம் அதிபதிகள் இணைவு, வலுப்பெறுதல் சரியான வயதுக் காலங்களில் வருமானம், திருமணம், குழந்தை பாக்கியம், தொழில், லாபம், சமூக அந்தஸ்து தரும்.
கோட்சாரத்தில் குரு, சனி நல்ல நிலையில் இருக்கும்போது, சுயஜாதகப்படி லக்னாதிபதி, சுபஸ்தான தசாபுக்திகள் நடைபெற்றால் திடீர் அதிஷ்டம், எதிர்பாராத முன்னேற்றம் தந்துவிடும். லக்னாதிபதி தசை பிறர்போற்றும் பிரபல யோகம், நிலையான செல்வத்தையும்; 2-ஆம் அதிபதி தசை வருமானம், குடும்ப முன்னேற்றத்தையும்; 4-ஆம் அதிபதி தசை வீடு, வாகன யோகத்தையும்; 5-ஆம் அதிபதி தசை பூர்வீக நன்மை, கோவில் புனரமைத்தல், மக்களால் போற்றப்படுதல், சந்ததி வளர்ச்சியை யும்; 7-ஆம் அதிபதி தசை மனைவியால் அதிஷ்டம், கூட்டாளிகளால் நன்மை, தொழில் மேம்பாடு அடைதலையும்; 9-ஆம் அதிபதி தசை அனைத்து பாக்கியங்களையும், சந்ததி மேன்மையையும்; 10-ஆம் அதிபதி தசை நிலையான தொழிலையும், தொழில் விருத்தியையும்; 11-ஆம் அதிபதி தசை லாபம், திடீர் அதிர்ஷ்டத்தையும் தந்துவிடும். சாதாரண நபருக்கும் நல்ல தசையானது பணம், புகழ், அந்தஸ்து வழங்கிவிடும்.
எதிர்பாராத தீமை செய்யும் காலம்
ஒவ்வொருவரும் ஒரு திட்டமிட்டு முன்னேற முயற்சித்துக் கொண்டிருக்கின் றனர். எதிர்பாராத நேரத்தில் திடீரென நஷ்டம், இழப்பு, அவமானம், சொல்லமுடியா துயரம் ஏற்பட்டு தொடர் தோல்வியைத் தந்துவிடும். மீளமுடியா முடக்கத்தை வழங்கும். நம்பியவர்கள் உதவாமல் போவது, புதிய நண்பர்கள்- நபர்களால் ஏமாற்றப்படுதல், திடீர் ஆசையால் அவமானப்படுதல், தொழில் நஷ்டம், வாடிக்கையாளர் வருகை குறைதல், எந்த முயற்சி செய்தும்- எவ்வளவு திறமையை வெளிப்படுத்தியும் சிறு முன்னேற்றம் கூட இல்லாமல் தவிப்பது, உடன்பிறந்த வர்கள்- நண்பர்களால் அவமானம், ஏமாற்றம், உறவினரால் கைவிடப்படுதல், ஆதரவற்றோர் நிலைக்குத் தள்ளப்படுவது, பிறரால் உதாசீனப்படுத்தப்படுதல் என நினைத்துப் பாராத கஷ்டம் வழங்கும் காலநிலைகள் எதுவென்றால்- பொதுவாக லக்னாதிபதி, ராசியாதிபதி பலம்குறைந்தவர்கள் அடிக்கடி தோல்வி களைச் சந்திக்கநேரும். சுப ஸ்தானங்கள் வலுப்பெறாமல் பாவகிரகச் சேர்க்கை, பார்வை, மறைவு ஸ்தானாதிபதி இணைவு, பார்வை போன்றவை திடீர் நஷ்டத்தைத் தரும். ஜாதக பலம் குறைந்தவர்களுக்கு கோட்சார கிரகங்கள் அசுபப் பலன் தரும் காலத்தில் அதிக துன்பத்தைத் தந்துவிடும்.
கோட்சாரம் நல்லநிலையில் இருக்கும் போதுகூட 3, 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் நடக்கும்போது சோதனை, இழப்பு, திடீர் நஷ்டம் வழங்கிவிடும். அஷ்டமாதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதி, அசுப கிரக தசை, பாவ கிரகப்பார்வை, சேர்க்கை பெற்ற தசையும்- அறிவாளிகளாக எண்ணி வாழும் பலரை முட்டாளாக்கி மூலையில் அமர்த்திவிடும்.
பிறர் கஷ்டகாலங்களில் அன்பாக, ஆதரவாக, சிறு பணஉதவி, தன்னம்பிக்கை வரும்படி பேசி தற்கொலை எண்ணத்தில் இருப்பவரைக்கூட உற்சாகப்படுத்தி வாழவைத் திருக்கும். தவறான குணங்கள், தவறான முடிவுகளைத் தவிர்த்து அவர்கள் நல்ல நிலைக்குச் சென்றுவிடுவர். நமக்கு தீய தசை ஆரம்பித்தால் நம்மை உயர்வாக நடத்திய வர்கள், காரணமின்றி நம்மைப் பார்த்ததும் கோபமாக, எரிச்சலாகப் பேசி அவமதிப்பர். நம்மால் உதவிபெற்றவர்கள் நம்மை கண்ணில் பார்ப்பதையே விரும்பமாட்டார்கள். நமக்கு உதவ எண்ணம் கொண்டவர்களை நம்மால் சந்திக்கவிடாமல் செய்துவிடும்.
"உலகமே இப்படித்தான்; நான் ஏணியாக இருந்தேன். என்னைப்போல் தியாகி யாரும் இல்லை' என தத்துவம் பேசி எந்தப் பயனும் இல்லை. பழையவற்றை நாம் ஞாபகப்படுத்தி வீண்அவமானத்தைதான் அடைய நேரும். 7, 10-ஆம் அதிபதி தசை, 3, 6-ஆம் அதிபதி தசை, 1, 8-ஆம் அதிபதி தசை, 1, 6-ஆம் அதிபதி தசை, 7, 8-ஆம் அதிபதி தசை, 6, 7-ஆம் அதிபதி தசை, 6, 9-ஆம் அதிபதி தசைக்காலங்கள் திடீர் ஏற்றத்தாழ்வுகளைத் தந்துவிடும். நோய், கடன், மரணம் போன்ற அசுபப்பலனை எதிர்பாராமல் தந்து வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிடும்.
ஏழரைச் சனிக்காலம்
பூர்வபுண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடம்தவிர அனைத்து இடங்களையும் பார்வையிடும் சனி பகவான், வாழ்க்கை யில் சொல்லொணா துயர் தந்து பற்றற்ற நிலையை வழங்குவார். பூர்வபுண்ணியம் செய்தவர்கள் குறைந்த பாதிப்புகளைப் பெறுவர். தந்தை, தாய் இழப்பு, பிரிவு அதிக பண விரயம், ஏமாற்றப்படுதல், உற்றார்- உறவினர் பகை, தற்கொலை எண்ணம், விபத்து, ஏன் பிறந்தோம் என்ற விரக்தி, தைரிய இழப்பு, தொழில் இழப்பு என அனைத்தை யும் வழங்கி, வாழ்க்கை என்பது ஒரு நொடியில் போகக்கூடியது என்பதை எப்படி சொன்னால் ஜாதகர் புரிந்துகொள்வாரோ அப்படிப் புரியவைப்பார். அவமானப் படாத- ஏமாற்றமடையாத மனிதரே இல்லை என்பதை உணரவைக்கும் நற்காலமே ஏழரைச் சனிக்காலம்.
பரிகாரம்
6, 8, 12-ஆமிட மறைவிட தசைகள், கோட்சார பலம் முடிந்தகாலம், அந்தந்த தசையறிந்து ப்ரீதி செய்து கொள்வது அவசியம். கஷ்டமே நமக்கு வராது என வாழ்வதும், கஷ்டமே வாழ்க்கை என நினைப்பதும் தவறு. அதிர்ஷ்டம் வரும் நேரம் திறமை யின்றி போராடக்கூடாது என்பதால், கெட்ட நேரத்தில் திறமையை வளர்த்து கொண்டு, நல்ல நேரத்தில் வெளிப்படுத்தி வெற்றிகொள்ள வேண்டும். பிறரை ஒப்பிட்டு வாழாமல், தோல்விகளை அவமானமாக எண்ணாமல், அனுபவமாக எடுத்துக் கொண்டு, நல்ல தசாபுக்திக் காலங்களில் பேராசை கொள்ளாமல் கிடைத்ததை அனுபவிக்கக் கற்றுக் கொள் ளுதல் மட்டுமே மனமகிழ்ச்சி யைத் தரும்.
செல்: 96003 53748