கும்ப லக்னம்

கும்ப லக்னாதிபதி சனி ஆவார். இவர்களின் அறிவின் பாவாதிபதி புதன் ஆவார். புதன் எனும் கிரகத்துக்கு எப்போதுமே குயுக்தியான மூளை உண்டு. அதிலும் இவர் அறிவின் அதிபதியாக வருவதால், கும்ப லக்னத் தாருக்கு எப்போதுமே சற்று குறுக்கு புத்தி அபரிதமாக இருக்கும். புதன் உச்சமடைந்தால், இவர்களின் எட்டாமிடமான கன்னியில் உச்சமடைவார். மற்றும் அதே கன்னியில் ஆட்சியும் அடைவார். மறைந்த புதன் நிறைந்த பலன் என்ற கூற்று உண்டு. ஆனால் அதனை அறிவு என்கிற அடிப்படையில் நோக்கும்போது சரிப்பட்டு வருமா எனும் கேள்வியும் வருகிறது ஒன்று, இவர்களின் உச்சபட்ச அறிவு நடைமுறை வாழ்க்கைக்கு பயனற்றுப் போய்விடும். அல்லது அந்த உச்ச புதன் கொடுக்கும் அறிவு அத்தனை யும், எதிர்மறை சிந்தனைகளையும், விளங்காத யோசனைகளையும் கொடுக்கும். இவர் களின் அறிவை, ஆக்கப்பூர்வமாகப் பயன் படுத்தாமல், அழிவை நோக்கிப் பயன்படுத்து வர். ஒரு கிரகம் உச்சம் பெற்றும் இத்தனை குழப்பம் வருவது இந்த ஒரு லக்னத்திற்கு மட்டும்தான்.

dd

Advertisment

இதே புதன் நீசமானால் புத்தி வேறு பாட்டால் ஒன்று தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க இயலாது. அல்லது பேச்சே வராமல் இருக்கக்கூடும். அல்லது அறிவுக் குறைவுள்ள குழந்தையாக இருப்பர். அறிவு பாவகாதிபதி புதன் 6-ஆம் வீட்டில் அமர்ந்தால் மிக மந்தமாக இருக்காது. ரொம்ப புத்திசாலியாகவும் இன்றி; இயல்பு நிலைக்கு ஒருபடி குறைவாக இருக்கும். 8-ஆம் வீட்டில் உச்சம் பெற்றாலும் பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். 12-ல் மகரத்தில் அமர்ந்தால், அது சனியின் வீடாவதால், புத்தி மிகமிக மெதுவாக வேலை செய்யும். இன்று ஒரு விஷயத்தைச் சொன்னால், ஒரு வாரம் கழித்துதான் அவர்களுக்குப் புரியும். அறிவுக்காரக கிரகம் குரு, உச்சமானால், 6-ஆமிடமான கடகத்தில் உச்சம் பெறுவார். வழக்காடுவதில் நிகரற்ற புத்தித் சாதுர்யம் இருக்கும். குரு நீசமானால் புத்தியின்றி முட்டாள்தனமாக, அண்டாவுக்குள்கூட, கைவிடத் தெரியாத அறிவிலிகளாக, அவசரக் காரர்களாக இருப்பர்.

கும்ப லக்னத்தாரின் 5-ஆம் அதிபதி புதன் உச்சமானால் 20 மதிப்பெண். புதன் நீசமானால் 10 மதிப்பெண். புதன் 6-ஆமிடத்தில் அமர்ந்தால் 15 மதிப்பெண். புதன் 8-ஆமிடத் தில் அமர்ந்தால் 20 மதிப்பெண். புதன் 12 ஆமிடத்தில் அமர்ந்தால் 10 மதிப்பெண்.

கும்ப லக்ன அறிவுக்காரகர் குரு. குரு உச்சமானால் 50 மதிப்பெண். குரு நீசமானால் 10 மதிப்பெண். குரு 6-ஆமிடத்தில் அமர்ந்தால் 50 மதிப்பெண். குரு 8-ஆமிடத்தில் அமர்ந் தால் 10 மதிப்பெண். குரு 12-ஆமிடத்தில் அமர்ந் தால் 5 மதிப்பெண்.

Advertisment

இதனை அடிப்படையாகக்கொண்டு, கும்ப லக்னத்தார் தங்கள் அறிவின் அளவை அளவிட்டுக்கொள்ளலாம். புதன் நீசமடைந் தால் ஸ்ரீரங்கநாதர் மற்றும் உங்கள் ஊரிலுள்ள பள்ளிகொண்ட பெருமாளை வணங்குவது நல்லது. மற்றும் திருவெண்காடு சென்று தரிசிப்பது நன்று.

மீன லக்னம்

மீன லக்னத்தின் அதிபதி குரு. இவர்களின் அறிவுக்குரிய பாவாதிபதி சந்திரன் ஆவார். சந்திரன் வெகு வேக கிரகம். அவரே இவர்களின் அறிவுக்கு அதிபதி ஆவதால், இவர்களின் யோசனைகள் அடிக்கடி மாறும். "க்ஷணச்சித்தம்- க்ஷணப்பித்தம்' எனும் அளவில் அறிவு அமையும். சந்திரன் உச்ச மடைந்தால், மீன லக்ன 3-ஆமிடமான ரிஷபத்தில் உச்சமடைவார்.

சந்திரன் சுக்கிரனின் வீட்டில் உச்ச மடைவதால். இந்த உச்ச சந்திரன். இவர்களை அடிக்கடி யோசனைகளை மாற்றும். கலைத் துறையில் மிளிரச் செயவார். மாற்றம் ஒன்றே மாறாதது எனும் கோட்பாடுபடி, இவர்கள் புத்தி, யோசனை, சிந்தனை, வாழ்க்கை, தொழில் என அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள். சந்திரன் நீசம்பெற்றால் இவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் புத்தி மாறாட்டத்தால் யாரும் இவரை நம்பமாட்டார்கள். எனவே "இவன் எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டான்' என்று ஒதுக்கிவைத்து, ஒதுங்கிப் போய் விடுவர். இதனால் தனிமையில் மிக வாடும் நிலை ஏற்படும். மீன லக்ன அறிவின் பாவாதி பதி சந்திரன் 6-ல் இருப்பின், இவர்களுக்கு மருந்து, வைத்தியம் சம்பந்தமான அறிவு சுமாராக வசப்படும். சந்திரன் 8-ல் இருந்தால், சற்று மூளைக் கோளாறு உடையவர்கள்போல் நடந்துகொள்வர். பொதுவாகவே, 8-ல் சந்திரன் இருக்கும். ஜாதகர்கள், சற்று குழம்பிய மனநிலையில் அலைவர். அதிலும் மீன லக்னத்தாருக்கு சந்திரன் அறிவின் பாவாதிபதி ஆவதால், மண்டைக் குழப்பம், அறிவுத் தெளிவின்மை, புத்தி பேதலித் ததுபோல் நடந்துகொள்வது போன்றவை ஏற்படும். இதே சந்திரன் 12-ல் இருப்பின், எப்போதும் ஒருவித பதட்டத்துடன் நீதானமில்லாமல், சந்தேக குணத்துடன், யாரையும் நம்பாமல் நடந்துகொள்வர். இவர்களை வைத்து காலங்கழிப்பது வெகுகஷ்டம்.

அறிவுக் காரகர் குரு இவர்களின் லக்னாதி யாவார். குரு உச்சம்பெற்றால், ஒரு நொடியில் அனைத்தையும் புரிந்து தெரிந்துகொள்ளும் கற்பூர, கம்ப்யூட்டர் புத்தி இருக்கும். இவர்களின் அறிவின் மேன்மையால், பல ஊர், பல நாடு களுக்கு சென்று பங்களிப்பு செய்ய இயலும், இவர்களின் குரு நீசமானால், இவர்களின் முன்னேற்றம், இவர்களின் முட்டாள்தனத் தால் கெட்டுவிடும்.

மீன லக்னத்தாரின் அறிவு பாவாதிபதி சந்திரன் உச்சமானால் 50 மதிப்பெண். சந்திரன் நீசமானால் 5 மதிப்பெண். சந்திரன் 6-ல் இருப் பின் 20 மதிப்பெண். சந்திரன் 8-ல் இருப்பின் 5 மதிப்பெண். சந்திரன் 12-ல் இருப்பின் 10 மதிப்பெண்.

மீன லக்னத்துக்கு அறிவு அதிபதி குரு உச்சமானால் 50 மதிப்பெண். குரு நீசமானால் 5 மதிப்பெண். குரு 6-ஆமிடத்தில் இருந்தால் 15 மதிப்பெண். குரு 8-ஆமிடத்தில் இருந்தால் 5 மதிப்பெண். குரு 12-ஆமிடத்தில் இருந்தால் 15 மதிப்பெண்.

ஆக இந்த கணக்கைக்கொண்டு மீன லக்னத் தார் உங்களின் அறிவின் அளவைத் தெரிந்து, தெளிந்துகொள்ளலாம். குரு நீசமானால், திருப் பட்டூர் சென்று, ஜாதகத்தை பிரம்மாமுன் வைத்து வழிபடுவது நல்லது. சந்திரன் நீசமானால் திங்களூர் சென்று வணங்கவும்.

இந்த அறிவின் அளவைக்கொண்டு கணவன்- மனைவி தங்களின் வாழ்க்கைத் துணைக்கு அறிவு இம்புட்டுத்தான்; ரொம்ப எதிர்பார்க்ககூடாது என ஒரு தெளிவான மன நிலைக்கு வந்துவிடலாம்.

வியாபாரம்- அதிலும் யூக வணிகம் செய்வோர் தங்களின் அறிவின் அளவு தெரிந்தால், அதற் குத் தக்கபடி வணிக முடிவெடுக்கலாம்..

சில வீடுகளில் "நான்தான் பெரியவன். நான் சொன்னதைத்தான் எல்லாரும் கேட்கணும்' என அடம்பிடிப்பர். அவர்களும் தங்களின் அறிவின் அளவை தெரிந்துகொண்டால், அதன் அடிப்படையில் அனைவரிடமும் கலந்துபேசி முடிவெடுக்கலாம்.

இந்த கட்டுரையின் முக்கிய காரணமும் நோக்கமும், கல்வி பயிலும் மாணவர்களை பற்றியதுதான். ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகள் மிக மேன்மையான கல்வி கற்கவேண்டும் என்றே விரும்புவார்கள். அதில் தவறேதுமில்லை. ஆனால் பையனுக்கோ, பெண்ணிற்கோ அந்த அளவு அறிவு இருக் கிறதோ- பெரிய பெரிய படிப்பெல்லாம் செட் டாகுமா? முடியுமா என யோசிக்கவேண்டும். நிறைய காசை செலவழித்து, பெரிய கல்வி நிலையங்களில் சேர்த்துவிட்டு, "பின் பையன் காலேஜ் பக்கம்கூட போகவில்லை' என்றோ, "அரியர்ஸ் நிறைய உள்ளது' என்றோ, கவலைப் பட நியாயமில்லை.

மாணவர்களின் அறிவின் அளவைக் கணித்து அதற்கேற்ற முன்னேற்றப் பதையில் செல்வது நல்லது.