துலா லக்னம்

இந்த லக்னத் தின் அறிவுக்குரிய அதிபதி சனி ஆவார். இவர் அறிவுக்கு மட்டுமல்லாமல், கேந்திரம் மற்றும் திரிகோணத்திற்கும் அதிபதியும் ஆவதால், துலா லக்னத்தாருக்கு சனி ராஜயோக கிரகமாவார். இந்த சனி துலா லக்னத் திலேயே உச்சமடைவார். இதன்மூலம் இவர்களின் நிதானமான அறிவுத்திறமை இவர்களை தொழிலாளர்களின் தலைவராக் கும். இவர்கள் கல்வியிலும் முதன்மை அறிவாற்றல் பெறுவர். இதே சனி நீசமானால் இவர்களின் கீழ்த்தரமான அறிவால் மக்கள் இவர்களைக் கண்டாலே தெறித்து ஓடுவர். இவர்களுக்கும் மற்றோரிடம் அனுசரணையாகப் பழகும்விதம் பிடிப்படாமல், எல்லாராலும் வெறுக்கப்படுவார்கள்.

122

சனி ஆறாமிடத்தில் இருந்தால் இவர்களுடைய கொஞ்ச நஞ்ச அறிவையும் வம்பு பேசியே வீணாக்கிவிடுவர். சனி எட்டாமிடத்தில் இருந்தால் எதிர்மறை அறிவு அதிகமாக வேலை செய்யும். சனி பன்னிரண்டாம் இடத்தில் இருந்தால் பொறாமைமிக்க அறிவும் யோசனையும் அலைபாயும். இதனால் இவர்களுக்கு நன்மைசெய்ய முற்படுபவர்களும் பின்வாங்கிவிடுவர். அறிவு காரக கிரகமான குரு உச்சமானால் உண்மை, நீதி போன்ற விஷயங்களில் முதன்மையறிவு பெறுவர். அதுவே தொழிலாகவும் மாறி வெகு கீர்த்தி பெறுவர். குரு நீசமானால் தொடக்கக் கல்வியே கேள்விக்குறியாகும். அவ்வளவு அறிவு சீர்குலைவு ஏற்படும். துலா லக்னத்திற்கு அறிவுக்குரிய பாவாதிபதி சனி உச்சமானால் 50 மதிப்பெண். சனி நீசமானால் ஐந்து மதிப்பெண். குரு உச்சமானால் 50 மதிப்பெண். குரு நீசமானால் ஐந்து மதிப்பெண். சனி ஆறாம் வீட்டில் இருந்தால் பத்து மதிப்பெண். சனி எட்டாம் வீட்டில் இருந்தால் ஐந்து மதிப்பெண். சனி பன்னிரண்டாம் வீட்டில் இருந்தால் ஐந்து மதிப்பெண். துலா லக்ன குரு ஆறாம் இடத்தில் இருந்தால் 25 மதிப்பெண். குரு எட்டாம் இடத்தில் இருந்தால் ஐந்து மதிப்பெண். குரு பன்னிரண்டாம் இடத்தில் இருந்தால் பத்து மதிப்பெண். ஆக இந்த கணக்கை அடிப்படை யாகக் கொண்டு துலா லக்னத் தார் அறிவு எவ்வளவு உள்ளது என்று கண்டு பிடிக்கலாம் சனி நீச மானால் சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானுக்கு நல்லெண் ணெய் தீபமேற்றி வழிபடவேண்டும்.

Advertisment

விருச்சிக லக்னம்

இந்த லக்னத்தாருக்கு அறிவுக்குரிய பாவாதிபதி குரு ஆவார். அறிவு காரக கிரகமே அறிவுக்குரிய பாவாதிபதி ஆவது என்பது மேன்மையான விஷயம்தான். எல்லா லக்னங்களையும்விட விருச்சிக லக்னத்திற்கு மட்டும் சில குறிப்பிட்ட தக்க விஷயங்கள் உள்ளன. இவர்களது லக்னாதிபதி செவ்வாய் அறிவுக்குடைய அதிபதி குரு. இதில் லக்னாதி பதி செவ்வாய் உச்சம்பெறும் மகர ராசியில் குரு நீசம் அடைந்துவிடுவார். லக்னாதிபதி செவ்வாய் நீசம்பெறும் கடக ராசியில் குரு உச்சமாவார். ஆக, லக்னாதிபதிக்கும் அறிவுக்குரிய காரக மற்றும் பாவாதிபதிக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒத்துப்போகவில்லை என்று புரிகிறது. அதனால்தான் நாங்களே சிந்திச்சோம் என்று எந்த வேலையையாவது ஆரம்பித்தால் அது விளங்கவே விளங்காது. இவர்களுடைய யோசனைகள் இவர்களின் காலை வாரிவிட்டுவிடும். ஐந்தாம் அதிபதி ஆறில் இருந்தால் ஒருமாதிரி ஒப்பேற்றிவிடலாம். ஐந்தாம் அதிபதி குரு எட்டில் இருப்பின் சற்று கோக்குமாக்கான ஏறுக்கு மாறான எவரும் எளிதில் ஒப்புக்கொள்ளாத அறிவுக் பொங்கும். ஐந்தாம் அதிபதி குரு பன்னிரண்டில் இருப்பின் அறிவுக் குழப்பம் உண்டாகும். விருச்சிக லக்னத்தாரின் ஐந்தாம் அதிபதி குரு உச்சமானால் 50 மதிப்பெண். குரு நீசமானால் ஐந்து மதிப்பெண். ஐந்தாம் அதிபதி குரு ஆறில் இருப்பின் 20 மதிப்பெண். ஐந்தாம் அதிபதி குரு எட்டில் இருப்பின் பத்து மதிப்பெண். ஐந்தாம் அதிபதி குரு பன்னிரண்டில் இருப்பின் பத்து மதிப்பெண். விருச்சிக லக்னத்தாருக்கு குருவே ஐந்தாம் அதிபதி ஆவதால் குருவின் நிலைகொண்டு அறிவின் அளவினை அறியமுடியும். குரு நீசம்பெற்றால் ஆலங்குடி சென்று வணங்கவும்.

Advertisment

122

தனுசு லக்னம்

தனுசு லக்னத்தாரின் அதிபதி குரு ஆவார். ஐந்தாம் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த லக்னத்திற்கும் லக்னாதி பதி குரு உச்சம் அடையும் ராசியில் அறிவுக்குரிய பாவாதிபதி செவ்வாய் நீசம் அடைவார். குரு நீசமடையும் மகரத்தில் செவ்வாய் உச்சம் அடைவார். எனினும் லக்னாதி பதி குரு என்பதால் அவர் நீசம் அடையாமல் இருப்பின் ஜாதகருக்கு தன்னிச்சையாகவே அறிவின் ஆற்றல் அதிகம் இருக்கும். இதனால் அறிவின் ஐந்தாம் அதிபதி செவ்வாய் சற்று முன்னே பின்னே இருந்தாலும் சமாளித்துக்கொள்வார்கள். தனுசு லக்னம் ஐந்தாம் அதிபதி உச்சமானால் பிறரை மிரட்டும் வகையில் உள்ள பேச்சின் திறமையால் அது தரும் அறிவுத் திறமையால் முன்னேற்றம் காண்பார். இதே செவ்வாய் கடகம் என்னும் அவர்களின் எட்டாம் இடத்தில் நீசமானால் சுய புத்தியின்றி யாராவது தீவிரவாதிகள் என்ன சொன்னாலும் அதைச் செய்துவிடுவர். அதன்பின் இவர்களின் பெயர் தேடப்படும் குற்றவாளிகள் லிஸ்டில் சேர்ந்துவிடும். செவ்வாய் அறிவின் பாவாதிபதியாகி ஆறில் இருப்பின் சுத்த முட்டாளாக இருப்பார். 8-ல் நீசம் அடைவார். ஆனால் 12-ல் அமர்ந்தால் அது அவரின் ஆட்சி வீடாகும். எனவே ஒப்பேற்றிவிடுவார். பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்த அறிவின் அதிபதி சிலசமயம் லூசுபயல் மாதிரி நடவடிக்கை தருவார். ஆனால் சுற்றியுள்ளவர்கள் நிஜமாகவே இவன் லூசா அல்லது நம்மை பைத்தியக்காரன் ஆக்குகிறானா என்று முழிக்க நேரிடும். அறிவுக்காரக குரு இவர்களின் லக்னாதிபதி ஆகிவிடுகிறார். அவர் உச்சம் அடைந்தால் எட்டாம் வீட்டில் உச்சம் அடைவார். இதனால் உச்ச குரு ரொம்ப பெருமை தருவார் என எதிர்பார்க்க இயலாது. குரு நீசம் அடைந்தால் இந்த மாதிரி குழந்தைகளின் பேச்சு குளறி குளறி பேசுவர். இதனால் இவர்களுக்கு நல்ங்ங்ஸ்ரீட் பட்ங்ய்ர்ல்ட்ஹ் எனும் சிகிச்சைமுறை கொடுக்கவேண்டும். தனுசு லக்னம் ஐந்தாம் அதிபதி செவ்வாய் உச்சமானால் 50 மதிப்பெண். செவ்வாய் நீசமானால் 0 மதிப்பெண். செவ்வாய் 6-ல் அமர்ந்தால் 10 மதிப்பெண். எட்டில் அமர்ந்தால் 0 மதிப்பெண். செவ்வாய் பன்னிரண்டில் அமர்ந்தால் 25 மதிப்பெண். குரு உச்சமானால் 25 மதிப்பெண். குரு நீசமானால் 10 மதிப்பெண். குரு 6-ல் அமர்ந்தால் பத்து மதிப்பெண். குரு எட்டில் அமர்ந்தால் 25 மதிப்பெண். குரு பன்னிரண்டில் அமர்ந்தால் பத்து மதிப்பெண். செவ்வாய் நீசமானால் திருச்செந்தூர் முருகனை வழிபடவேண்டும்.

மகர லக்னம்

மகர லக்னத்தின் அதிபதி சனி ஆவார். இந்த லக்ன அறிவுக்குரிய பாவாதிபதி சுக்கிரன் ஆவார். இதனால் இவர்களிடம் அறிவு அழகும் கலை உணர்வும் மிகுந்திருக்கும். இவர்களின் அறிவு ரசனைமிக கொண்டதாக அமையும். இந்த சுக்கிரன் வீட்டில்தான் மகர லக்னாதிபதி சனி உச்சம் பெறுவார். அதனால் இவர்களின் அறிவு இவர்களுடன் நல்ல கெமிஸ்ட்ரியுடன் ஒத்துழைக்கும். சுக்கிரன் உச்சமானால் தகவல் தொடர்பு சம்பந்தமான இனங்களில் அறிவு முதிர்ச்சியாக இருக்கும். மக்கள் தொடர்பு சம்பந்த துறைகளில் அறிவின் ஆற்றல் பெருகி மிக வெற்றிபெறுவர். சுக்கிரன் நீசம் ஆனால் இவர்களின் அறிவுக் குறைவு இவர்களுக்கு எல்லாவற்றையும் தரவிடாமல் செய்துவிடும். இவனின் முட்டாள் தனம் இவனுக்கு ஒருத்தரும் நல்லதே செய்யமாட்டேன் என்கிறார்கள் எனும் பழிச்சொல் தொடர்ந்து வரும் அல்லது நல்லவன் கூடிவரும்போது இவர்களின் முட்டாள் தனத்தால் அதனை சீர்குலைத்துவிடுவர். இதே சுக்கிரன் ஆறாம் வீட்டில் அமர்ந்தால் ஒருவிதமாக சமாளித்து விடுவர். சுக்கிரன் எட்டில் அமர்ந்தால் அறிவின் வெளிச்சம் குன்றிபோய் எல்லோரிடமும் பகை வளர்ப்பர். சுக்கிரன் 12-ல் இருந்தால் அறிவின் தெளிவு இராது. முக்கியமான வேலைகளை செய்யாமலும் தேவையற்ற செயல் அவசரமாக செய்வதுமாக பிறர் எரிச்சல்படும்படியான அறிவு அமையும். அறிவின் காரகர் குரு உச்சமானால் அனைத்து மக்களும் இவரிடம் விரும்பிவந்து பேசும்படியான அறிவுமிளகும். குரு நீசமா னால் லக்னத்தில் நீசம் அடைவார். அறிவு என்ற ஐட்டத்தை கடவுள் இவர்களுக்கு வைக்க மறந்துவிட்டார் என்ற நிலையில் இருக்கும். மகர லக்னம் ஐந்தாம் அதிபதி சுக்கிர உச்சமானால் 50 மதிப்பெண். ஐந்தாம் அதிபதி நீசமானால் ஐந்து மதிப்பெண். ஐந்தாம் அதிபதி 6-ல் இருப்பின் 15 மதிப்பெண். ஐந்தாம் அதிபதி எட்டில் இருப்பின் பத்து மதிப்பெண். ஐந்தாம் அதிபதி 12-ல் இருப்பின் பத்து மதிப்பெண். குரு உச்சமானால் 50 மதிப்பெண். குரு நீசமானால் 5 மதிப்பெண். குரு 6-ல் அமர்ந்தால் 10 மதிப்பெண். குரு எட்டில் அமர்ந்தால் 15 மதிப்பெண் குரு பன்னிரண்டில் அமர்ந்தால் 25 மதிப்பெண். இதனைக்கொண்டு மகர லக்னத்தார் அறிவை எடைபோட்டுக்கொள்ளவும் சுக்கிரன் நீசம்பெற்றால் கஞ்சனூர் சென்று வழிபடவும்

(தொடர்ச்சி அடுத்த இதழில்...)

செல்: 94449 61845