Advertisment

வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்? பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/what-horoscope-system-will-make-you-successful-life-prasanna-astrologer-i

டக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பர் நடந்துவிடும். இதுதான் நிதர்சனமான உண்மை. எதிர்பார்த்த நேரத்தில் ஏமாற்றத்தையும், எதிர்பாராத நேரத்தில் வெற்றியையும் தருபவர்களே நவகிரகங்கள்.

அந்தவகையில் ஒரு ஜாதகத்தில் எந்த ஸ்தானம் கைவிட்டாலும் லக்ன பாவகத்தின் பாவத் பாவமான 3-ஆம் பாவகம் யாரையும் கைவிடாது. வெற்றிவேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல், சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல். ஜாதக அமைப்பு எப்படியிருந்தால் நல்ல முயற்சி உடையவரின் வாழ்வாதாரம் எதிர்பாராத அசுர வளர்ச்சியைத் தேடித்தரும். உப ஜெய ஸ்தானங்கள் என்பது 3 , 6, 10, 11-ஆம் பாவகங்கள்.

3-ஆம் பாவகம்

எந்தச் செயலின் வெற்றிக்குப் பின்னும் நிற்பது ஒருவரின் முயற்சி. ஒரு ஜாதகத்தில் 3-ஆம் பாவகம் வலிமைபெற்றால் ஜனன கால ஜாதகத்தில் லக்னாதிபதியும், மூன்றா மிடத்து அதிபதியும் பரிவர்த்தணை பெற்றிருந்தாலும் அல்லது லக்னாதிபதி நின்ற வீட்டு அதிபதி சுபப் பலம் பெற்றிருந்தாலும் ஜாதகர் தன் வாழ்நாளில் வெற்றியாளராக வலம்வருவார்.

இந்த அமைப்புடன் செவ்வாய் இணைந்தால் ஜாதகருக்கு அந்தஸ்து மேலும் உயரும். பிடிவாத குணமும் ஏற்படும். ஜனனகால ஜாதகத்தில் செவ்வாய், மூன்றாம் அதிபதி அல்லது 3-ஆமிடத்தில் நின்ற கிரகம் இவையனைத்தும் சுபப் பலம்பெற்று மிக்க வலிமையுட

டக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பர் நடந்துவிடும். இதுதான் நிதர்சனமான உண்மை. எதிர்பார்த்த நேரத்தில் ஏமாற்றத்தையும், எதிர்பாராத நேரத்தில் வெற்றியையும் தருபவர்களே நவகிரகங்கள்.

அந்தவகையில் ஒரு ஜாதகத்தில் எந்த ஸ்தானம் கைவிட்டாலும் லக்ன பாவகத்தின் பாவத் பாவமான 3-ஆம் பாவகம் யாரையும் கைவிடாது. வெற்றிவேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல், சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல். ஜாதக அமைப்பு எப்படியிருந்தால் நல்ல முயற்சி உடையவரின் வாழ்வாதாரம் எதிர்பாராத அசுர வளர்ச்சியைத் தேடித்தரும். உப ஜெய ஸ்தானங்கள் என்பது 3 , 6, 10, 11-ஆம் பாவகங்கள்.

3-ஆம் பாவகம்

எந்தச் செயலின் வெற்றிக்குப் பின்னும் நிற்பது ஒருவரின் முயற்சி. ஒரு ஜாதகத்தில் 3-ஆம் பாவகம் வலிமைபெற்றால் ஜனன கால ஜாதகத்தில் லக்னாதிபதியும், மூன்றா மிடத்து அதிபதியும் பரிவர்த்தணை பெற்றிருந்தாலும் அல்லது லக்னாதிபதி நின்ற வீட்டு அதிபதி சுபப் பலம் பெற்றிருந்தாலும் ஜாதகர் தன் வாழ்நாளில் வெற்றியாளராக வலம்வருவார்.

இந்த அமைப்புடன் செவ்வாய் இணைந்தால் ஜாதகருக்கு அந்தஸ்து மேலும் உயரும். பிடிவாத குணமும் ஏற்படும். ஜனனகால ஜாதகத்தில் செவ்வாய், மூன்றாம் அதிபதி அல்லது 3-ஆமிடத்தில் நின்ற கிரகம் இவையனைத்தும் சுபப் பலம்பெற்று மிக்க வலிமையுடன் இருந்தால் ஜாதகர் தன் வாழ்வில் நடக்கும் எத்தகைய நிலைகளையும், சம்பவங்களையும் மிகவும் சர்வசாதாரனமாக எதிர்கொள்வார்கள். திறமையான அணுகுமுறையுடைய பெருமைக்குரிய சாமர்த்தியசாலியாக திகழ்கிறார்கள். லக்னாதி பதி எந்த வீட்டுக்கு செல்கிறாரோ அந்த வீட்டை வாழவைப்பார். லக்னாதிபதி மூன்றாமிடம் சென்றால் தனது சுய உழைப்பால் முன்னேற்றத்தை அடைவார். தன் சுயமுயற்சியால் கடுமையாக உழைத்து சுய முயற்சியால் முன்னேறுவார். மூன்றாம் அதிபதி ஸ்திர ராசியில் நின்றால் நிலையான- நிரந்தரமான வெற்றி உண்டு.

Advertisment

hh

6-ஆம் பாவகம்

இரண்டாவது உப ஜெய ஸ்தானம் 6-ஆம் பாவகம். ஆறாம் பாவகம் என்றால் கடன், நோய், எதிரி பாவகம் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். லக்னம் லக்னாதிபதி வலிமையாகவும் லக்னாதிபதியை விட 6-ஆம் அதிபதி வலிமை குறைவாக இருக்கவேண்டும். லக்னாதிபதியைவிட 6-ஆம் அதிபதி வலிமை குறைவாக இருந்தால் எளிதில் வாங்கிய கடனை அடைக்கமுடியும். மலைபோல் கடன் இருந்தாலும் பனிபோல் குறையும்.

1, 10-ஆம் பாவ கம் வலுத்தவர் கள் கடன் வாங்கி தொழில் செய்தால் விரைவில் தொழிலுக்கான கடன் தீரும். அதேபோல் எளிதில் வியாதி அண்டாது. உட-ல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். உடலில் புதிய ரத்த சிவப்பு அணுக்கல் உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். நோய் வந்தாலும் அதிக நாட்கள் நீடிக்காது.

லக்னம் 6-ஆமிடம் சம வலிமைபெற்றால் வாழ்நாள் முழுவதும் நிலையான- நிரந்தரமான ஒரே உத்தியோகத்தில் இருப்பார்கள். பலரை வைத்து நிர்வாகம் செய்யக்கூடிய உத்தியோக அமைப்பாக இருக்கும்.

லக்னாதிபதியைவிட 6-ஆம் அதிபதி வலுத்தால் வாழ்க்கை முழுவதும் கடன் உண்டு. நோய்க்கு வைத்தியம் செய்து கடன் அதிகமாகும். கடனுக்கு பயந்து நோய் அதிகமாகும். எதிரிக்கு அடிபணிந்து வாழ்வார்கள். நிலையான- நிரந்தரமான உத்தியோகம் இருக்காது.

10-ஆம் பாவகம்

மூன்றாவது உப ஜெய ஸ்தானம் 10-ஆம் பாவகம். இதை கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்று கூறலாம்.

ஒருவர் செய்யும் தொழில் மூலமாகவே அதிக பாவமோ, புண்ணியமோ உருவாகிறது.

நியாயமான முறையில் தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தினால் புண்ணிய பலன்கள் மிகுதியாகும்.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நிலையான- நிரந்தரமான தொழில் வாய்ப்புகள் உண்டு. இவர்களுடைய சந்ததியினருக்கு ஜீவனக் குறைபாடு வராது. தர்மம் தலைகாக்கும். இவர்கள் ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் உருவாகும். இவர்கள் முன்னோர் களின் நல்லாசிகள் நிரம்ப பெற்றவர் கள். இவர்கள் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்பு கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். தொட்டது துலங்கும். பட்டது பூக்கும். இவர்கள் சென்ற இடம் எல்லாம் புகழாரம் சூட்டப்படும்.

11-ஆம் பாவகம்

நான்காவது உப ஜெய ஸ்தானம் 11-ஆம் பாவகம். 3-ஆம் பாவகத்தில் பாக்கிய ஸ்தானம் 11-ஆம் பாவகம். 10-ஆம் பாவகத்திற்கு தன ஸ்தானம் 11-ஆம் பாவகம். பல தொழில் வித்தகர். 11-ல் இருந்தால் அண்ணன்- தம்பி என குடும்பமே முன்னேற்றத்திற்காக முயற்சி செய்வார்கள். கூட்டுக் குடும்பமாக இருந்து தொழில் முயற்சியில் வெற்றி பெற்றவர் களுடைய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும்.

உப ஜெய ஸ்தானமான 11-ஆம் பாவகத்தின் மூலம் பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேருதல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பலவகையில் வருவாய், லாபம் போன்றவை ஏற்படும். தேவைக்கு அதிகமாக பணம், பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் 11-ஆமிடமான லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும்.ஒருசிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ், அந்தஸ்து, வெற்றிபெறுவது 11-ஆம் அதிபதியின் தசை புக்தி காலங்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது.

பாவத் பாவம்

ஒவ்வொரு பாவகத்திற்கும் அதற்கு 3-ஆம் பாவகத்தை இயக்கும் சக்தி உள்ளது. லக்ன பாவத்தின் பாவத் பாவமான மூன்றாமிடம் ஒருவருக்கு வளர்ச்சியை கொடுக்கும் பாவகம். ஒருவர் வாழ்வில் அனைத்து விதமான சகாயமும் பெற்றிட மூன்றாமிடம் பலமாக இருப்பது மிக அவசியம். அறிவியல் மிகமிக வளர்ந்தாலும் தன்னை உணர்ந்து வாழ்வில் உயரும் முயற்சியில் மனிதர்கள் பின் தங்கியே இருக்கிறார் கள். கிடைப்பதை உண்டு வாழ்நாள் முழுவதும் முன்னேற்றத்திற்கு எந்த முயற்சியும் செய்யாமல் வாழ்வை முடித்துக் கொள்ளும் மனிதர்கள்தான் அதிகம்.

ஒருசிலருடைய வெற்றிக்குப்பின் அவர்களுடைய முயற்சியே பிராதனமாக இருக்கும். இது ஒருவருடைய வெற்றிக்கு உதவிசெய்யும் ஸ்தானம் என்பதால் விடாமுயற்சியால் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற்றவர்கள் பலரின் ஜாதகத்தில் 3-ஆமிடம் மிக வலிமையாக இருக்கும். ஒரு ஜாதகத்தில் மூன்றாம் அதிபதி, மூன்றாம் இடத்தில் நின்ற கிரகம், மூன்றாமிடத்தைப் பார்த்த கிரகத்தினைக் கொண்டு ஒரு மனிதன் தன் முன்னேற்றத்திற்கு செய்யும் முயற்சி யினை தெளிவாகக் கூறமுடியும். ராசிகளை ஒற்றைப்படை ராசி. இரட்டைப் படை ராசி என இரண்டாகப் பிரிக்கலாம். ஒற்றைப் படை ராசிகள் எல்லாம் உயிர் காரகத்துவரீதியான வளர்ச்சியை, வெற்றியைக் கொடுக்கும். இரட்டைப்படை ராசிகள் எல்லாம் பொருள் காரத்துவ ரீதியான வளர்ச்சியை கொடுக்கும். பணம் சம்பாதிக்க உடலில் உயிர் வேண்டும். உயிருக்குள் உணர்வு இருந்தால்தான் சம்பாதித்து வாழ்வில் வெற்றிபெறவேண்டும் என்ற உந்துதல் உருவாகும். ஆக, மனிதன் ஜீவிக்க உயிர், பொருள் இரண்டும் வேண்டும்.

செல்: 98652 20406

Advertisment
bala280325
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe