Advertisment

வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்?

/idhalgal/balajothidam/what-horoscope-system-will-lead-success-life-0

சென்ற வாரம் உப ஜெய ஸ்தானம் ஒருவரின் வெற்றிக்கு எவ்வாறு உதவுகிறது என்று பார்த்தோம். இந்த வாரம் பாவத் பாவம் எப்படி ஜாதகரை இயக்கி வெற்றிக்கு உதவுகிறது என்று பார்க்கலாம். 12 ராசிகளையும் ஒற்றைப்படை ராசிகள், இரட்டைப் படை ராசிகள் என்று இரண்டாகப் பகுக்கலாம்.

ஒற்றைப்படை ராசிகள்

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் என்ற இந்த ஆறு ராசிகளையும் ஒற்றைப்படை ராசிகள் ஆண் ராசி என்று கூறலாம். ஒருவருக்கு ஆண் ராசியில் லக்னம் விழுந்தால் ஆண் தன்மை அதிகமாக இருக்கும். உதாரணமாக ஒருவர் மேஷ லக்னத்தில் பிறந்திருந் தால் ஆண் போன்ற குணநலன்கள் அதிக மிருக்கும். நிதானமற்ற முன்கோபம், முரட்டுத்தனம், விவேகமற்ற வேகம் அதிகமாக இருக்கும்.

ஒரு கிரகம் ஒற்றைப் படை ராசியில் நின்று தசை நடத்தினால் பாவத் பாவ முறையில் 1, 3, 5, 7, 9, 11-ஆம் பாவகம் இயங்கும். ஒற்றைப்படை ராசிகள் எல்லாம் உயிர் காரகத்துவ ரீதியான பிரச்சினைகளைத் தீர்க்க பிரபஞ்சம் வழங்கிய நற்கொடை என்றே கூறவேண்டும். நான் இந்த கருத்தை ஒரு ஜோதிட கருத்தரங்கில் பேசினேன். பலர் இதுவரை யாரும் யோசிக்காத விசயம் என்று பாராட்டி னார்கள்.

1-ஆம் பாவம் 3-ஆம் பாவத்தை விருத்தி செய்யும். 3-ஆம் பாவம் 5-ஆம் பாவகத்தை விருத்தி செய்யும். 5-ஆம் பாவகம் 7-ஆம் பாவகத்தையும், 7-ஆம் பாவகம் 9-ஆம் பாவகத்தையும், 9-ஆம் பாவகம் 11-ஆம் பாவகத்தையும் இயக்கும். 11-ஆம் பாவகம் 1-ஆம் பாவகத்தை இயக்கும். இதை மேலும் புரியும்படி கூறினால் ஒருவரின் லக்னம், லக்னாதிபதி சிறப்பாக இருந்தால் ஜாதகருக்கு தனித்தன்மை, தனித்திறன், செயல்திறன், குணநலன்கள் ஆகியவை சிறப்பாக இருக்கும்.

ஒரு பாவகம் இயங்கும் காலங்களில் அல்லது இயக்கப்படும் பொழுது மறைமுகமாக மற்ற பாவகங்களும் இயங்கும். எந்த பாவகமும் தனித்து இயங்குவதில்லை. ஒருவருக்கு லக்னம் லக்னாதிபதி சுப வலுப்பெற்றால் லக்ன பாவத்தின் பாவத் பாவமான 3

சென்ற வாரம் உப ஜெய ஸ்தானம் ஒருவரின் வெற்றிக்கு எவ்வாறு உதவுகிறது என்று பார்த்தோம். இந்த வாரம் பாவத் பாவம் எப்படி ஜாதகரை இயக்கி வெற்றிக்கு உதவுகிறது என்று பார்க்கலாம். 12 ராசிகளையும் ஒற்றைப்படை ராசிகள், இரட்டைப் படை ராசிகள் என்று இரண்டாகப் பகுக்கலாம்.

ஒற்றைப்படை ராசிகள்

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் என்ற இந்த ஆறு ராசிகளையும் ஒற்றைப்படை ராசிகள் ஆண் ராசி என்று கூறலாம். ஒருவருக்கு ஆண் ராசியில் லக்னம் விழுந்தால் ஆண் தன்மை அதிகமாக இருக்கும். உதாரணமாக ஒருவர் மேஷ லக்னத்தில் பிறந்திருந் தால் ஆண் போன்ற குணநலன்கள் அதிக மிருக்கும். நிதானமற்ற முன்கோபம், முரட்டுத்தனம், விவேகமற்ற வேகம் அதிகமாக இருக்கும்.

ஒரு கிரகம் ஒற்றைப் படை ராசியில் நின்று தசை நடத்தினால் பாவத் பாவ முறையில் 1, 3, 5, 7, 9, 11-ஆம் பாவகம் இயங்கும். ஒற்றைப்படை ராசிகள் எல்லாம் உயிர் காரகத்துவ ரீதியான பிரச்சினைகளைத் தீர்க்க பிரபஞ்சம் வழங்கிய நற்கொடை என்றே கூறவேண்டும். நான் இந்த கருத்தை ஒரு ஜோதிட கருத்தரங்கில் பேசினேன். பலர் இதுவரை யாரும் யோசிக்காத விசயம் என்று பாராட்டி னார்கள்.

1-ஆம் பாவம் 3-ஆம் பாவத்தை விருத்தி செய்யும். 3-ஆம் பாவம் 5-ஆம் பாவகத்தை விருத்தி செய்யும். 5-ஆம் பாவகம் 7-ஆம் பாவகத்தையும், 7-ஆம் பாவகம் 9-ஆம் பாவகத்தையும், 9-ஆம் பாவகம் 11-ஆம் பாவகத்தையும் இயக்கும். 11-ஆம் பாவகம் 1-ஆம் பாவகத்தை இயக்கும். இதை மேலும் புரியும்படி கூறினால் ஒருவரின் லக்னம், லக்னாதிபதி சிறப்பாக இருந்தால் ஜாதகருக்கு தனித்தன்மை, தனித்திறன், செயல்திறன், குணநலன்கள் ஆகியவை சிறப்பாக இருக்கும்.

ஒரு பாவகம் இயங்கும் காலங்களில் அல்லது இயக்கப்படும் பொழுது மறைமுகமாக மற்ற பாவகங்களும் இயங்கும். எந்த பாவகமும் தனித்து இயங்குவதில்லை. ஒருவருக்கு லக்னம் லக்னாதிபதி சுப வலுப்பெற்றால் லக்ன பாவத்தின் பாவத் பாவமான 3-ஆம் பாவகம் இயங்கி ஜாதகருக்கு தைரியம், வீரியம், விஜயம், வெற்றி உண்டாகும். எந்தச் செயலிலும் வெற்றிபெற ஜாதகருக்கு தைரியம், திட்டமிடுதல் அவசியம். லக்ன பாவகத்தின் சுப அதிர்வலை கள் ஜாதகருக்கு கிடைக்கப்பெற்று அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும்.

தொட்டது துலங்கும். 3-ஆம் பாவகத்தின் மூலம் 5-ஆம் பாவகம் எனும் சந்ததி விருத்தி, அதிர்ஷ்டம், கீர்த்தி, புகழ், அறிவுக்கூர்மை, தெய்வீக உணர்வு, காதல் உணர்வு, பாட்டன் சொத்து போன்ற பலன்கள் நடக்கும். ஒருவருக்கு குழந்தை பிராப்தம் இல்லையெனில் 5-ஆமிடம், 9-ஆமிடம் பார்க்கக்கூடாது. இந்த 5, 9-ஆம் பாவகம் மூலம் பூர்வபுண்ணிய ஸ்தானப்படி. பாக்கிய ஸ்தான பலப்படி இந்த ஜாத கருக்கு குழந்தை பாக்கியத்தை அனுபவிக்கக் கூடிய கொடுப்பினை உள்ளதா என்பதை அறியமுடியும். வீரியம் (3-ஆம் பாவகம்) இருந்தால் மட்டுமே 5-ஆமிடம் எனும் கொடுப்பினைமூலம் குழந்தை பிறக்கும். 5-ஆம் பாவகத்திற்கு லாப ஸ்தானம் 3-ஆமிடம். ஒரே வரியில் பாவத் பாவம் பற்றி விளக்கம் கூறவேண்டுமெனில் ஒரு பாவத்தின் பரிபூரண வெற்றியை அனுபவிக்க அதற்கு 11-ஆமிடமான லாப ஸ்தானத்தை இயக்கினால் தோல்வி என்பதே ஜாதகரை அண்டாது. 5-ஆம் பாவத்திற்கு பாவத் பாவம் 7-ஆமி டம். வரக் கூடிய வாழ்க் கைத் துணையைப் பற்றிய எதிர்பார்ப்பு கள், விருப்பங்கள் அதிகம் இருந்தால் வாழ்க்கைத் துணையின்மேல் காதல் வராது.

வரப்போகும் வாழ்க்கைத் துணையை தினமும் ஆத்மார்த்த மாக மானசீகமாக காதலிக்கத் துவங்கி னால் 90 சதவிகிதம் திருமணத் தடை அகலும். திருமணத்திற்குப் பிறகும் வாழ்க்கைத் துணையை காதலிப்பவர் களுக்கு கருத்து வேறுபாடு வராது. 7-ஆம் பாவகத்திற்கு லாப ஸ்தானம் 5-ஆமிடம். எப்பொழுது வாழ்க்கைத் துணையின் மேல் காதல் குறைகிறதோ அப்பொழுது 5-ஆம் பாவத்தின் பாவத் பாவமான 7-ஆம் பாவகம் செயல் இழக்கத் துவங்கும்.

Advertisment

ss

ஒவ்வொரு பாவகத்தை இயக்கவும் பல வாழ்வியல் பரிகாரங்கள் உள்ளது. இங்கு கொடுக்கப்பட்ட தலைப்பு எதிலும் வெற்றி பெறக்கூடிய ஜாதக அமைப்பு எப்படி யிருக்கும் என்பதால் பரிகாரத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை. இதை மேலும் விரிவாகப் பரிகாரத்துடன் மற்றொரு கட்டுரையில் பார்ப்போம்.

5-ஆம் பாவகத்தின் அன்பினால் அதன் பாவத் பாவமான 7-ஆம் பாவம் இயங்கி சமுதாய அங்கீகாரம், நல்ல வாழ்க்கைத்துணை, நண்பர்கள், கூட்டுத் தொழில், இரண்டாவது குழந்தை போன்றவற்றில் விருத்தி ஏற்படும். 7-ஆம் பாவகத் தின் பாவத் பாவம் இயங்குவதால் பூர்வ புண்ணிய பலப்படி இந்த ஜென்மத்தில் வாழ்வில் நடைபெற வேண்டிய அனைத்து உயர்வான பாக்கிய பலன்களும் நடக்கும். உதாரணமாக ஒருவர் தன் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து பார்ப்பது பாக்கியம். பேரன்- பேத்தியை பார்க்கவும் 9-ஆம் பாவகம் சுய ஜாதக அல்லது கோட்சாரரீதியாக இயங்க வேண்டும். என்னிடம் வரும் வாடிக்கையாளர் களின் பிள்ளைகளுக்குத் திருமணத்தடை இருந்தால் பெற்றவர்களின் ஜாதகத்தில் 9-ஆம் பாவகம் இயங்கும் காலத்தைக் கணித்து பிள்ளைகளுக்கு உரிய பரிகார பூஜை முறைகள் செய்தால் நிச்சயம் திருமணத் தடையை உடைக்கமுடியும். தனக்கு பேரன்- பேத்தி பிறக்க வில்லை என்று ஒருவர் வருத்தத்துடன் ஜாதகம் பார்க்கவந்தார். அவர்களின் பிள்ளைகளுக்கு புனர் விவாகம் மறுமாங்கல்ய பூஜை செய்தால் 9-ஆம் பாவகத்திற்கு லாப ஸ்தானமான 7-ஆம் பாவகத்தை இயக்கினால் நிச்சயம் குலம் தழைக்க வாரிசு உருவாகும்.

ஒரு ஜாதகத்தில் கொடுப்பினை என்று சொல்லக்கூடிய 9-ஆம் பாவகம் வ-மையாக செயல்பட்டால் அல்லது 9-ஆம் பாவகத்தை இயக்கினால் 11-ஆம் பாவகமான லாப ஸ்தானம் செயல்பட்டு அசுர வளர்ச்சி உண்டாகும். ஜாதகர் அதிர்ஷ்டப் பிறவி. கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பா, மூத்த சகோதரருடன் வசதியாக வாழ்வார்கள். அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கௌரவம் உண்டு. தொட்டதெல்லாம் பொன்னாகும்.

11-ஆமிடத்தின் பாவத் பாவம் லக்னம்

லக்ன பாவத்தின் லாப ஸ்தானம் 11-ஆமிடமான லாப ஸ்தானம். ஒரு மனிதனுக்கு பணம் கொடுக்கும் தைரியத்தை வேறு எந்த கிரகமும் கொடுக்க முடியாது. அதனால் தான் நமது முன்னோர்கள் பணம் பத்தும் செய்யும் என்று சொல்லி வைத்தார்கள். இவ்வாறு எந்த ஒரு பாவகமும் தனித்து இயங்காது. ஒற்றைப் படை ராசியில் நின்று தசை நடத்தினால் சுபமோ- அசுபமோ பாவத் பாவ முறையில்தான் செயல்படும்.

இரட்டைப்படை ராசிகள்

ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம். இந்த ஆறு ராசிகளைப் பெண் ராசிகள், இரட்டைப் படை ராசிகள் என்று கூறலாம். பெண் ராசியில் லக்னம் அமையப் பிறந்தவர்களுக்கு பெண் தன்மை அதிகமாக இருக்கும். உதாரணமாக பெண் ராசி கன்னி லக்னமாக பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் பெண் தன்மை மிகுதியாக இருக்கும். அமைதி, சாந்தம், நளினம், பயந்த சுபாவம், வெட்கம், அழகு நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஒரு ஜாதகத்தில் 2, 4, 6, 8, 10, 12 எனும் 6 பாவகங்களும் இரட்டைப்படை ராசிகள் தத்துவத்தில் பாவத் பாவமாக இயங்கும். இரட்டைப்படை ராசிகள் அனைத்தும் பொருள் காரகத்துவரீதியாக இயங்கும்.

இரண்டாம் பாவகம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம். நல்ல பொருளா தாரமுள்ள ஒரு மனிதனை குடும்ப உறவுகள் ஏன் பெற்ற தாய்கூட மதிப்பார்கள். 2-ஆம் பாவகம் எனும் பொருளும் குடும்ப உறவுகளும் ஆதரித்தால் வருமானத்தில் மீதம் கிடைக்கும்.

2-ஆம் பாவத்தின் மீதப்பணம் பாவத் பாவமாக இயங்கி 4-ஆம் பாவகம் எனும் தேக சுகமாகவும் வீடு, வாகனம் எனும் ஆடம்பர வாழ்க்கையை நோக்கிச் செல்லும்.

அசையும், அசையாச் சொத்துகள் சேரும். வருமானத்திற்கு தகுந்த சொத்துடன் வாழ்ந்தால் 4-ஆம் பாவகத்தின் 6-ஆம் பாவகம் வரமாக செயல்படும். கடன், நோய், எதிரி இல்லாமல் வாழமுடியும். 4-ஆம் பாவத்தின் 6-ஆம் பாவகம் சுபத்துவமாக செயல்பட்டால் கற்ற கல்விக்கு தகுந்த வேலை கிடைக்கும். தன் தகுதிக்கு, வருமானத் திற்கு மீறிய சொத்துகளின் ஆசை, 4-ஆம் பாவகத்தின் பாவத் பாவமான 6-ஆமிடம் எனும் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை வலுப்படுத்தும். வருமானத் திற்கு மீறி கடன் வாங்கி சொத்து சேர்த்தால் கடனுக்குப் பயந்து நோய்வரும். கடனும் நோயுமுள்ள ஒருவருக்கு உறவுகள் எதிரிகளாவார்கள். சிலருக்கு 6-ஆம் பாவகம் எனும் பொருள் கடன் பாவத் பாவமான 8-ஆம் பாவகத்தின்மூலம் வம்பு, வழக்கு கோர்ட் கேஸை ஏற்படுத்தும். கடன், நோய், வழக்கு இருந்தால் 8-ஆம் பாவத்தின் பாவத் பாவமான 10-ஆம் பாவகம் எனும் தொழிலை இழக்க நேரும். 10-ஆம் பாவகம் நிலையான தொழில், உத்தியோகம் இன்மையால் 10-ஆம் பாவத்தின் பாவத் பாவமான 12-ஆம் பாவம் எனும் தூக்கத்தைத் தொலைத்து நிம்மதியின்மை கூடும். 12-ஆம் பாவத்தின் பாவத் பாவமான 2-ஆமிடம் வலுவிழந்து குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். வெற்றி வாய்ப்புகள் நழுவும். இதில் திட்டமிட்டு காய் நகர்த்தினால் சொத்துகள்மூலம் வாடகை வருமானம், விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்டச் சொத்து, வருமானம் தரக்கூடிய தொழில், சுபவிரயம், நிம்மதியான தூக்கம், நிறைவான குடும்ப வாழ்க்கை அமையும்.

ja

Advertisment

இதுபோன்ற ஒற்றைப்படை, இரட்டைப் படை ராசிகளும் பாவத் பாவமுறையில் செயல்பட்டு ஒருவரின் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்கிறது.

யோக தசைகள் ஒற்றைப்படை ராசியில் நின்று தசை நடத்தினால் குறுகிய காலத்தில் வெற்றியடைவார்கள். ஒருவரின் வெற்றி என்பது சமுதாய அங்கீகாரம்.

பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை, தொழில் என அனைத்து துறைகளிலும் வெற்றியடைந்த ஒருவருக்கே சமுதாயம் ரத்தினக் கம்பளம் விரிக்கும். ஒரு ஜாதகம் பாவத் பாவ முறையில் செயல்பட்டு வெற்றியடைய லக்னம், லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். ஏனெனில் லக்னம், லக்னாதிபதி ஜாதகரின் உடல்நிலை, தன்னம்பிக்கை, வாழ்க்கையின் அடித்தளமாக அமையும்.

தொடரும்

செல்: 98652 20406

bala210325
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe