சூரியன், சந்திரன், புதன், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் அழகான தோற்றத் துடன் இருப்பார். பண வசதி இருக்கும். நோய்களின் பாதிப்பு இல்லாமல் இருப்பார். நன்கு படித்தவராக இருப்பார். தர்மசீலனாக இருப்பார்.
சூரியன், சந்திரன், புதன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். 23 வயதிற்குப்பிறகு, சந்தோஷ மான வாழ்க்கை இருக்கும். ஜாதகர் பணக்காரராக இருப் பார். சிலர் குருவாகவோ ஜோதிடராகவோ இருப் பார்கள். சிலர் ஆசிரியராக இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், புதன், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். நல்ல பணவசதி இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல மனைவி அமைவாள். சொந்த ஊரைவிட்டு வெளியே சென்று பணம் சம்பாதிப்பார். ஆண் வாரிசு இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன், குரு 4-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் சில பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். நன்கு படித்தவராக இருப்பார். அனைத்து வசதிகளும் இருக்கும். சிலர் அரசரைப்போல வாழ்வார்கள்.
சூரியன், சந்திரன், புதன், குரு 5-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சிலர் அரசியல் உலகத்தில் பதவியில் இருப்பார் கள். சிலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகிய பதவி களில் இருப்பார்கள். ஜாதகர் நிறைய படித்தவ ராக இருப்பார். சிலர் பிறந்த ஊரிலிருந்து வெளியே சென்று, சந்தோஷமாக வாழ்வார்கள்.
சூரியன், சந்திரன், புதன், குரு 6-ஆம் பாவத்தில் இருந்தால், காலில் அடிபடும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். பண வசதி இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். அழகான மனைவி அமைவாள். சிலருக்கு பிற பெண்களுடன் ரகசிய உறவு இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன், குரு 7-ஆம் பாவத்தில் இருந் தால், மனைவி அழகாக இருப்பாள். வாழ்க்கை சந்தோஷ மாக இருக்கும். வியா பாரத்தில் பெயர், புகழ் கிடைக்கும். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். சிலர் பெரிய எழுத்தாளராகவோ கதாசிரியராகவோ இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், புதன், குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் பெரிய விவசாயிகளாக இருப்பார்கள். சிலர் பெரிய வர்த்தகர்களாக இருப்பார்கள். பூர்வீக சொத்து கிடைக்கும். பெயர், புகழ் இருக்கும். மரம், செடி, கொடி சூழ வீடு இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். சிலர் தியானத்தில் ஈடுபடுவார்கள். பண வசதி இருக்கும். நல்ல வாரிசுகள் இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், புதன், குரு 9-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் பெரிய பணக் காரர்களாக இருப்பார்கள். பூர்வீக சொத்து இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். தர்மச் செயல்களில் ஈடுபடுவார். சிலர் வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
சூரியன், சந்திரன், புதன், குரு 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் படிப்பாளியாக இருப்பார். நல்ல குருநாதராக இருப்பார். பிறருக்கு உயர்ந்த கருத்துகளைக் கூறுவார். ஆணவ குணம் இருக்கும். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள். ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப்பார்.
சூரியன், சந்திரன், புதன், குரு 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பெரிய பணக்காரராக இருப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அழகான மனைவி இருப்பாள். நல்ல பிள்ளைகள் அமைவார்கள். ஜாதகர் எந்த தொழிலைச் செய்தாலும், பணம் சம்பாதிப்பார். ஜாதகருக்கு சனி சரியில்லாதிருந்தால், வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்கும். இல்லாவிடில், சந்தோஷ வாழ்க்கைதான்.
சூரியன், சந்திரன், புதன், குரு 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கருமியாக இருப்பார். வீண் செலவுகள் செய்யமாட்டார். இளமையில் சிரமங்கள் இருக்கும். பல நல்ல நண்பர்கள் இருப்பார்கள். சிலருக்கு பெண் மோகம் அதிகமாக இருக்கும். வாரிசுகள் வெளிமாநிலம் அல்லது வெளி நாட்டில் இருப் பார்கள்.
செல்: 98401 11534