சூரியன், சந்திரன், புதன், சனி லக்னத்தில் இருந்தால், பண கஷ்டம் இருக்கும். எப்போதும் குடும்பத்தில் வாக்குவாதம் நடந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு குடும்பமே இருக்காது. சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்துசென்று, துறவியைப்போல வாழ்வார்கள். சிலர் நிறைய படித்தவர்களாக இருப்பார்கள். மன கவலைகள் இருக்கும்.

ss

சூரியன், சந்திரன், புதன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். 24 வயதுவரை குடும்பத்தைவிட்டு வெளியே சென்று, அடிமை வாழ்க்கை வாழவேண்டியதிருக்கும். பண கஷ்டம் இருக்கும். 32 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். எனினும், குடும்பத்தில் விவாதம் நடந்தவண்ணம் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். பண கஷ்டம் இருக்கும். சிலர் வெளியே சென்று பணம் சம்பாதிப்பார்கள். சிலர் எந்திரங்களை வைத்து தொழில் செய்வார்கள். சிலர் பணியாட்களை வைத்து தொழில் செய்வார்கள். உடல்நல பாதிப்பு அவ்வப்போது இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் மூத்தவர்களிடம் விவாதம் செய்வார்கள். வாரிசுகளுடன் பிரச்சினை இருக்கும். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காது. பல கஷ்டங்கள் இருக்கும். சுய முயற்சியால் பணம் சம்பாதிப்பார்கள். சிலருக்கு இதயத்தில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசாங்க பதவியில் இருப்பார்கள். சிலர் எஞ்சினீயர்களாக இருப்பார்கள். சிலர் கட்டுமான துறையில் மேஸ்திரியாகவோ தச்சராகவோ இருப்பார்கள் சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் பழைய பொருட்களை விற்கும் வர்த்தகத்தில் இருப்பார்கள். வயிற்றில் நோய் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். வயிற்றில் நோய் இருக்கும். பித்தம் இருக்கும். தலைவலி வரும். குடும்பத்தில் வாக்குவாதம் நடக்கும். தூக்கம் சரியாக வராது. 36 வயதிற்குப் பிறகு, பணவரவு இருக்கும். பெண் மோகம் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். அழகான மனைவி அமைவாள். ஜாதகருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருக்கும். பணம் வீணாக செலவாகும். ஜாதகர் துரோகியாக இருப்பார்.

அவரையும் பிறர் ஏமாற்றுவார்கள். காலில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் எட்டு வயதுவரை பிரச்சினை இருக்கும். அதற்குப்பிறகு, சராசரியான வாழ்க்கை இருக்கும். சிலர் தூக்கத்தில் உளறுவார்கள். பற்களைக் கடிப்பார்கள். சிலர் விவசாயியாக இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், புதன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் தன் தந்தையின் சொத்துகளை அழிப்பார். அனைவரிடமும் சண்டை போடுவார். வீண் பேச்சு நிறைய இருக்கும். படிப்பிற்கேற்ற வேலை இருக்காது. முதுகுத்தண்டில் பிரச்சினை இருக்கும். ஜாதகருக்கு தன் பெற்றோருடன் சுமாரான உறவு இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலர் துறவிகளாக இருப்பார்கள். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். சிலர் பணம் சம்பாதிப்பதற்காக வெளியே சென்று வாழவேண்டியதிருக்கும். சிலர் அரசியலில் இருப்பார்கள். சிலர் எப்போதும் ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொண்டே இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், புதன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், பண வசதி இருக்கும். இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். இளம்வயதில் படிப்பு விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். தலைவலி வரும். பித்த நோய் இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். பணம் சம்பாதிப்பதற்காக வெளியூர் செல்லவேண்டியதிருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். தலைவலி வரும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். விபத்து உண்டாகலாம். முன்னோர்களின் சாபம் இருக்கும்.

செல்: 98401 11534