சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், நல்ல மனைவி அமைவாள். வாழ்க்கை சந்தோஷ மாக இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிறந்த பேச்சாற்றல் இருக்கும். அதை வைத்து பணம் சம்பாதிப்பார். சிலர் வக்கீலாகவோ, நீதிபதியாகவோ இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந் தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். குடும்பத்தில் வாதம் நடக்கும். 23 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் விஞ்ஞானிகளாக இருப்பார் கள். பெண் மோகம் இருக்கும்.
ஜாதகர் பெண்களைப் பற்றிய சிந்தனையிலேயே எப்போதும் இருப்பார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந் தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நன்கு பணம் சம்பாதிப்பார். காம சிந
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், நல்ல மனைவி அமைவாள். வாழ்க்கை சந்தோஷ மாக இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிறந்த பேச்சாற்றல் இருக்கும். அதை வைத்து பணம் சம்பாதிப்பார். சிலர் வக்கீலாகவோ, நீதிபதியாகவோ இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந் தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். குடும்பத்தில் வாதம் நடக்கும். 23 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் விஞ்ஞானிகளாக இருப்பார் கள். பெண் மோகம் இருக்கும்.
ஜாதகர் பெண்களைப் பற்றிய சிந்தனையிலேயே எப்போதும் இருப்பார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந் தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நன்கு பணம் சம்பாதிப்பார். காம சிந்தனை அதிகமாக இருக்கும். அழகான மனைவி அமைவாள்.
ஜாதகர் இளமையிலேயே பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். சொந்தத்தில் வாகனம் இருக்கும்.
சிலருக்கு திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலருக்கு திருமணமான பிறகு, வெளியே ரகசிய உறவு இருக்கும். ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்த வராக இருப்பார். தைரிய குணம் இருக்கும். சிறந்த பேச்சாற்றல் இருக்கும். அதை மூலதனமாக வைத்து ஜாதகர் பிழைப்பை நடத்துவார். சிலர் விஞ்ஞானிகளாக இருப்பார்கள். சிலர் அரசு பதவிகளில் இருப்பார்கள். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். பெண்களுக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் பல கஷ்டங் கள் இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். காலில் அடிபடும். சிலருக்கு காலில் ஊனம் இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் பணம் வரும். திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். ஜாதகர் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருப்பார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் மனைவியிடம் வாதம் செய்வார். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருக்கும். ஜாதகர் பயணம் செய்து, பணத்தைச் சம்பாதிப்பார். எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்கவேண்டுமென நினைப்பார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் மனைவியிடம் சண்டை போடுவார்.கோபம் அதிகமாக வரும். சிலர் தூக்கத்தில் உளறுவார்கள். வாகனம் ஓட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு போதை பழக்கம் இருக்கும். அதன்காரணமாக சிறுநீரகம், ஈரல் பாதிக்கப்படும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு துணிச்சல் குணம் இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக் கும். சீதளம் பிடிக்கும். தொழிலில் அடிக்கடி இடம் மாறுதல் உண்டா கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந் தால், ஜாதகர் அரசரைப்போல வாழ்வார். கோப குணம் இருக்கும். அரசியலில் பெயர், புகழ் இருக் கும். சிலர் தங்களின் பேச்சை வைத்து பிழைப்பார்கள். சிலர் பல மொழிகள் அறிந்தவர்களாக இருப் பார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந் தால், தைரிய குணம் இருக்கும். பிள்ளைகள் நல்லவர்களாக இருப் பார்கள். மனைவி நல்லவளாக இருப்பாள். ஜாதகர் எதையும் ருசித்து சாப்பிடுவார். சொந்தத்தில் வீடு, மனை, நகைகள் இருக்கும். தந்தையின் பேச்சைக் கேட்டு ஜாதகர் நடப்பார். நல்ல பண வரவு இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ் வாய், சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் செலவுகள் இருக் கும். பெண் மோகம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு திருமணம் தாமதமாக நடக்கும். சிலர் அவசியமற்ற விஷயங்களில் தலையிட்டு, நேரத்தை வீணாக்குவார்கள். சிலர் வாதம் செய்வதில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.