சூரியன், சந்திரன், சுக்கிரன் லக்னத் தில் இருந்தால், ஜாதகர் மன்னரைப்போல வாழ்வார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். பலரின் சொத்துகளை அபகரிக்க நினைப்பார். கண்ணில் நோய் இருக்கும்.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு பேச்சாற்றல் இருக்கும். பணக்காரராக இருப்பார். படித்தவராக இருப்பார். சிலர் மருத்துவராகவோ ஜோதிடராகவோ இருப்பார்கள். பெண் மோகம் அதிகமாக இருக்கும். கண்ணில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு சீதளம் இருக்கும். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். பிற்பகுதி சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார
சூரியன், சந்திரன், சுக்கிரன் லக்னத் தில் இருந்தால், ஜாதகர் மன்னரைப்போல வாழ்வார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். பலரின் சொத்துகளை அபகரிக்க நினைப்பார். கண்ணில் நோய் இருக்கும்.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு பேச்சாற்றல் இருக்கும். பணக்காரராக இருப்பார். படித்தவராக இருப்பார். சிலர் மருத்துவராகவோ ஜோதிடராகவோ இருப்பார்கள். பெண் மோகம் அதிகமாக இருக்கும். கண்ணில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு சீதளம் இருக்கும். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். பிற்பகுதி சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வெளியூரில் சென்று வாழவேண்டிய சூழல் உண்டாகும். அங்கு பெயர், புகழ் கிடைக்கும். சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சினை உண்டாகும். ஜாதகர் பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும். ஜாதகருக்கு பல கலைகள் தெரியும். அதில் அவருக்கு பெயர், புகழ் கிடைக்கும்.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். பெயர், புகழுடன் இருப்பார். தோல்நோய் இருக்கும். கண்ணில் பிரச்சினை இருக்கும். 36 வயதிற்குப்பிறகு வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும்.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். பகைவர்களை வெல்வார். பெண் மோகம் அதிகமாக இருக்கும். அதனால் பெயர் கெடும். வெளித் தொடர்புகளில் பணம் வரும். ஜாதகர் சூதாட்டத்தைத் தவிர்க்கவேண்டும். கண்ணில் கண்ணாடி போட வேண்டியதிருக்கும்.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். அதிகமாக பேசுவார். அழகான மனைவி இருப்பாள். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். சிலருக்கு கல்லீரலில் பிரச்சினை இருக்கும். அதிகமான காம சிந்தனைகள் இருக்கும்.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் ஜுரம் இருக்கும். சீதளம் இருக்கும். ஜாதகர் நன்கு படிப்பவராக இருப்பார்.வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிலருக்கு பின்னர் வரப்போவதை முன்கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் இருக்கும். ஜாதகர் போதைக்கு அடிமையாகாது இருக்கவேண்டும். நீண்ட ஆயுள் இருக்கும்.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். சந்தோஷ மாக வாழ்வார். பெண்கள் சம்பந்தப் பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பார்.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அரசாங்க அதிகாரியாக இருப்பார். சிலர் பாடகர்களாகவும், நல்ல கலைஞர்களாகவும் இருப்பார்கள். பேச்சாற்றல் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், வாரிசுகளால் சந்தோஷம் இருக்கும். சிலர் அழகு சாதனப்பொருட்களை விற்பவர்களாக இருப்பார்கள். சிலர் துணி வர்த்தகம் செய்வார்கள். சிலர் வெளிநாட்டு தொடர்புகளின் மூலம் பணம் சம்பாதிப்பார்கள். பெண் மோகம் அதிகமாக இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். தூக்கம் சரியாக வராது.
சூரியன், சந்திரன், சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் கஷ்டங்கள் இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். டைபாய்ட் ஜுரம் அல்லது மஞ்சள் காமாலை வரலாம். பெண் மோகத்தை ஜாதகர் தவிர்க்க வேண்டும். பெண்கள் விஷயத்தில் கவனமாக இல்லை யெனில், பெயர் கெடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். இல்லாவிட்டால், உடல் நலம் கெடும்.
செல்: 98401 11534