சூரியன், சந்திரன், புதன் லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். நன்கு படித்தவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். விவாதம் புரிவதில் வல்லவராக இருப்பார். பல கலைகள் அறிந்த வராக இருப்பார். வாழ்க்கையின் பிற்பகுதி சந்தோஷமாக இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன் 2-ஆம் பாவத்தில் இருந்தால்,ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் மருத்துவராக இருப்பார்கள். கண்ணில் நோய் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். ஜாதகர் சூழலுக்கு ஏற்றபடி பேசுபவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார்.
சூரியன், சந்திரன், புதன் 3-ஆம் பாவத்தில் இருந்தால் ஜாதகருக்கு துணிச்சல் குணம் இருக்கும். கடுமையாக உழைத்து, பணத்தைச் சம்பாதிப்பார்.சுய முயற்சியால் முன்னுக்கு வருவார். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள்.பெ
சூரியன், சந்திரன், புதன் லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். நன்கு படித்தவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். விவாதம் புரிவதில் வல்லவராக இருப்பார். பல கலைகள் அறிந்த வராக இருப்பார். வாழ்க்கையின் பிற்பகுதி சந்தோஷமாக இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன் 2-ஆம் பாவத்தில் இருந்தால்,ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் மருத்துவராக இருப்பார்கள். கண்ணில் நோய் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். ஜாதகர் சூழலுக்கு ஏற்றபடி பேசுபவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார்.
சூரியன், சந்திரன், புதன் 3-ஆம் பாவத்தில் இருந்தால் ஜாதகருக்கு துணிச்சல் குணம் இருக்கும். கடுமையாக உழைத்து, பணத்தைச் சம்பாதிப்பார்.சுய முயற்சியால் முன்னுக்கு வருவார். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள்.பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் பல கலைகளைக் கற்றவராக இருப்பார்.
சூரியன், சந்திரன், புதன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியமானவராக இருப்பார். பெற்றோரால் சந்தோஷம் இருக்கும். சிலருக்கு குடும்பத்தில் இருப்பவர் களே துரோகம் செய்வார்கள். சொத்தை அபகரிக்க முயற்சிப் பார்கள். சிலர் கலைத்துறையில் வித்தகர்களாக இருப்பார் கள். சிலர் கைத்தொழிலில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். சிலர் நன்கு படித்தவர்களாக இருப்பார்கள். வாரிசுகளால் சந்தோஷம் இருக்கும். கணவன்- மனைவி உறவு சுமாராக இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல அரசாங்க அதிகாரியாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். ஒரு வாரிசு இருக்கும்.
பெண்ணுக்கு உஷ்ண நோய் இருக்கும். சிலருக்கு வயிற்றில் புண் இருக்கும். ஜாதகருக்கு குடும்பத்தில் மரியாதை இருக்கும். அவர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்.
சூரியன், சந்திரன், புதன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் சூழலுக்கேற்றபடி செயல்படுவார். மற்றவர்களிடம் எப்படி பழகவேண்டும் என்பதைத் தெரிந்தவராக இருப்பார். பல வியாபாரங்களில் ஈடுபடு வார். ஒரே தொழிலில் நிரந்தரமாக இருக்கமாட்டார். பகைவர்களை வெல்வார். அன்னைக்கு உடல் நல பாதிப்பு இருக்கும். சிலருக்கு சிறுநீரக பாதிப்பு இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகரின் மனைவி அழகாக இருப்பாள். சிலருக்கு திருமணத் தடை இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப் பாளியாக இருப்பார். சிலருக்கு கோப குணம் இருக்கும். சிலருக்கு ரத்த அழுத்தம் இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் முன் பகுதியில் பிரச்சினை இருக்கும். நோய்களின் பாதிப்பு இருக்கும். 8 வயதுவரை அடிக்கடி மருத்துவரைப் பார்க்க வேண்டியதிருக்கும். சிலருக்கு முன்கூட்டியே சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கும். சிலருக்கு அதிகமான கனவுகள் வரும். சிலருக்கு நீரால் விபத்து இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். ஜாதகர் சுயமுயற்சியால் குடும்பத்தைக் காப்பாற்றுவார். சிலர் தேவையற்றதைப் பேசுவார்கள்.
அதன் காரணமாக எதிரிகள் உண்டா வார்கள்.
சூரியன், சந்திரன், புதன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் புகழ் பெற்ற மருத்துவராகவோ- விஞ்ஞானி யாகவோ நல்ல அரசாங்க அதிகாரி யாகவோ இருப்பார். நிறைய பணத்தைச் சம்பாதிப்பார். திறமைசாலியாக இருப்பார். 36 வயதிற்குப்பிறகு வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு சம்பாதிப்பார். தைரிய குணம் இருக்கும். சூழலைப்பார்த்து பேசுவார். பயணம்செய்து நிறைய மனிதர்களைச் சந்திப்பார். அவர்களிடம் தன் திறமையை வெளிப்படுத்துவார். அதன்மூலம் பணத்தைச் சம்பாதிப்பார். நிறைய படித்தவராக இருப்பார். வயிற்றில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், திருமணத்தடை இருக்கும். பெயர், புகழ் இருக்கும். தூக்கம் சரியாக வராது. வயிற்றில் பிரச்சினை இருக்கும். சிலரின் தந்தைக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். சிலர் வெளியூரில் சென்று தொழில் செய்வார்கள். சிலருக்கு தலைவலி இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும்.
செல்: 98401 11534