சூரியன், புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால் பெண் மோகம் இருக்கும்.வெளிநாட்டில் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும். நிலையான புக்தி இருக் காது. பெண்களால் மன கஷ்டம் உண்டாகும். வீண்செலவுகள் இருக்கும். மனதில் குழப்பம் இருக்கும்.

சூரியன், புதன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல்நல பாதிப்பு இருக்கும். சிலர் திக்கித்திக்கி பேசுவார்கள். சிலர் நிறைய படித்தவர்களாக இருப்பார்கள். சிலர் புகழ்பெற்ற மருத்துவர்களாக இருப்பார்கள். சிலர் ஆலோசகர் களாக இருப்பார்கள். பித்தப்பையில் பிரச்சினை இருக்கும். காம எண்ணங் கள் அதிகமாக இருக்கும்.

சூரியன், புதன், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். காம சிந்தனைகள் இருக்கும். சிலர் வெளியூ ரில் தொழில் செய்வார்கள். சுயமுயற்சி யால் பணம் சம்பாதிப்பார்கள். கூர்மையான அறிவுடன் செயல்படு வார்கள். பெண் மோகம் அதிகமாக இருக்கும். செலவுகள் அதிகம் உண்டாகும்.

சூரியன், புதன், சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், மனைவியுடன் சுமாரான உறவு இருக்கும். பண வரவு இருக்கும் அதிக செலவுகள் உண்டாகும். கண்ணில் நோய் இருக்கும். படபடப்பு இருக்கும். தந்தையின் குடும்பத்துடன் சுமாரான உறவு இருக்கும்.

Advertisment

சூரியன், புதன், சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய கற்றவராக இருப்பார். சிலர் இசைக் கலைஞர்களாக இருப்பார்கள். சிலர் பாடலாசிரியராகவோ பாடகராகவோ இருப்பார்கள். சிலர் வீணாக பேசுவார்கள். பணவரவு இருக்கும். பெயர், புகழ் இருக் கும். சில நேரங்களில் சுக்கிரன் சரியான அம்சத்தில் இல்லையென்றால், பெண் மோகத்தால் பெயரை கெடுத்துக்கொள்வார்கள்.

sss

சூரியன், புதன், சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். பகைவர்கள் குறைவார்கள். பெண் மோகம் இருக்கும். ஆடம்பர செலவுகள் இருக்கும். தலையில் நோய் இருக்கும். சீதளம் இருக் கும். சிலர் கம்பீரமாக பேசுவார்கள். எதிரிகளிடம் நண்பரைப்போல பழகுவார்கள்.

சூரியன், புதன், சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக் கும். அழகான மனைவி இருப்பாள்.

சிலருக்கு மறுமணம் நடக்கும். வியாபாரத்தின்மூலம் பணம் சம்பாதிப்பார்கள். மனம் ஒரே நிலை யில் இருக்காது. அடிக்கடி வெளி யூருக்குப் பயணம் செய்யலாம் என்ற எண்ணம் உண்டாகும்.

சூரியன், புதன், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பேச்சாற்றல் இருக்கும். ஜாதகர் பார்ப்பதற்கு சாந்தமாக இருப்பார். ஆனால், மனதில் எப்போதும் சிந்தனைகள் இருக்கும். இளமையில் உடல்நல பாதிப்பு இருக்கும்.பெண் மோகம் இருக்கும். சிலர் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார்கள்.

சூரியன், புதன், சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. சிலர் தந்தையின் சொத்தை அழிப்பார்கள். நிறைய படித்தவர்களாக இருப்பார்கள். ஆணவம் பிடித்தவர்களாக இருப்பார் கள். வெளியூரில் சென்று வாழ்வார்கள். சுய முயற்சியால் வாழ்வார்கள்.மனைவியுடன் வாதம் செய்வார்கள்.

சூரியன், புதன், சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் ஏதாவதொரு பதவி யில் இருப்பார். சிலர் இசைத் துறையில் நிபுணர்களாக இருப்பார்கள். சிலர் எழுத்தாள ராக இருப்பார்கள். சிலர் நகை வியாபாரியாக இருப்பார்கள். நல்ல பணவரவு இருக்கும்.

சூரியன், புதன், சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப் பார். இளமையில் பல கஷ்டங் கள் இருக்கும். ஜாதகருக்கு காம சிந்தனைகள் இருக்கும். சிலருக்கு மனதில் கஷ்டங்கள் இருக்கும். ஆடம்பரச் செலவு கள் இருக்கும்.

சூரியன், புதன், சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் பேச்சு இருக்கும். செலவு கள் அதிகமாக இருக்கும். மனதில் சந்தோஷம் இருக் காது. பண வசதி இருக்கும். ஆணவ குணம் இருக்கும். சிலர் பிறரை எப்போதும் தாக்கிப் பேசு வார்கள். சில ருக்கு போதைப் பழக்கம் இருக் கும்.