சூரியன், செவ்வாய், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் அழகாக இருப்பார். இரக்க குணம் இருக்கும். தன் வேலைகளை மிகுந்த கவனத்துடன் முடிப்பார். நல்ல பண வசதி இருக்கும். பிறரிடம் சாதுரியமாக பேசி, காரியங்களைச் சாதிப்பார். நல்ல குணத்தைக் கொண்டவராக இருப்பார். இல்வாழ்க்கையில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். பெண் மோகம் இருக்கும்.

சூரியன், செவ்வாய், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல பேச்சாளராக இருப்பார். சிலர் கலைத்துறையில் இருப்பார்கள். எதையும் தந்திரமாக பேசி, பணத்தைச் சம்பாதிப்பார்கள். பெண் மோகம் அதிகமாக இருக்கும். காம எண்ணங்கள் இருக்கும். வயிற்றில் பித்த நோய் இருக்கும். மனைவியுடன் சிறிய அளவில் சண்டை போடுவார். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். சகோதரர்களுடன் உறவு சுமாராக இருக்கும்.

சூரியன், செவ்வாய், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கலை வித்தகராக இருப்பார். சிலர் சிறந்த பாடகர்களாக இருப்பார்கள். சிலர் பொறியியல் நிபுணர்களாக இருப்பார் கள். சிலர் இரும்பு, உருக்கு வர்த்தகர் களாக இருப்பார்கள். சிலர் தொழிலதிபர் களாக இருப்பார்கள். பயணம் செய்து, பணம் சம்பாதிப்பார்கள். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பித்தநோய் இருக்கும். சொந்த ஊரிலிருந்து வெளியே சென்று, பெயரையும் புகழையும் பெறுவார்கள்.

சூரியன், செவ்வாய், சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். பண வசதி இருக்கும். ஜாதகர் மனைவியுடன் வாதத்தில் ஈடுபடுவார். சிலர் கட்டுமான துறையில் இருப்பார்கள். சிலர் பொறியியல் நிபுணர்களாக இருப்பார்கள்.

Advertisment

ss

சூரியன், செவ்வாய், சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். இளம் வயதில் உடல்நல பாதிப்பு இருக்கும். பெயர், புகழ் இருக்கும். பயணம் இருக்கும். ஜாதகருக்கு ஒரு வாரிசு இருக்கும். சிலர் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பார்கள். சிலர் பெரிய தொழிலதிபராக இருப்பார்கள். சிலர் காவல் துறையில் இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். திருமண விஷயத்தில் தடை இருக்கும். இல்வாழ்க்கையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு காம வெறி அதிகமாக இருக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. பயணம் செய்து, பேச்சாற்றலை பயன்படுத்தி ஜாத கர் பணம் சம்பாதிப்பார். வயிற்றில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், செவ்வாய், சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு மனைவியைத் தவிர, வேறு பெண்களுடனும் தொடர்பு இருக்கும். சிலர் துறவியாக இருப்பார்கள். சிலருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கும்.

சூரியன், செவ்வாய், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் வாழ்க்கையில் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், உடல் நலம் கெடும். குடிப் பழக்கம் இருக்கக்கூடாது. இளம் வயதில் சிலருக்கு உடல் நலம் சரியாக இருக்காது. ஜுரம் வரும். சிலருக்கு கல்லீரலில் பிரச்சினை இருக்கும். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது.

சூரியன், செவ்வாய், சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். தைரிய குணம் இருக்கும்.

திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக் கும் சிலர் நகை வியாபாரியாக இருப்பார் கள். சிலர் கலைத்தொழிலில் இருப் பார்கள். சிலர் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பெரிய தொழிலதிபராக இருப்பார். தன் காரியங்களை நல்லமுறையில் முடிப்பார். சூழலுக்கேற்றபடி பேசி, வெற்றிபெறுவார். துணிச்சல் குணம் இருக்கும். குடும்பத்தில் அவருக்கு நல்ல பெயர் இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். பெண் மோகம் இருக்கும்.

சூரியன், செவ்வாய், சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். நல்ல வாரிசு இருக்கும்.மனைவி அழகாக இருப்பாள். சிலர் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பார்கள். சிலர் அரச வாழ்க்கை வாழ்வார்கள்.

சூரியன், செவ்வாய், சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், செலவுகள் அதிக மாக இருக்கும். ஆடம்பர வாழ்க்கை இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக் கும். ஜாதகர் பயணங்களை அதிகமாக மேற்கொள்வார்.

31 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

அதுவரை அலைச்சலும் பிரச்சினைகளும் இருக்கும்.

செல்: 98401 11534