சூரியன், செவ்வாய், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் சண்டை, சச்சரவு என்று இருப்பார். பல நோய்கள் இருக்கும். எப்போதும் மனதில் குழப்பம் இருக்கும். பண வரவு இருக்கும். அவசியமற்ற செலவுகள் இருக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. திருமணம் நடந்தால், அது சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் பிற பெண்களை மனதில் நினைத்துக்கொண்டேயிருப்பார்.

சூரியன், செவ்வாய், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், அதிக கோபம் வரும். குடும்ப சூழ்நிலை சரியாக இருக்காது. இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். படிப்பில் பாதிப்பிருக்கும். 32 வயதிற்குப்பிறகு சுயமுயற்சியால் ஜாதகர் பணம் சம்பாதிப்பார். சிலர் வெளியூரில் இருந்துகொண்டு பணம் ஈட்டுவார்கள்.

ஜாதகருக்கு சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும்.

sun

Advertisment

சூரியன், செவ்வாய், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அவருக்கும் தம்பிக்கும் இடையே சரியான உறவு இருக்காது. சிலருக்கு தம்பி இருக்கமாட்டான். பல விரோதிகள் இருப்பார்கள். சுய உழைப்பால் ஜாதகர் பணம் சம்பாதிப்பார். தொழில் நிமித்தமாக ஜாதகர் வெளியூரில் இருப்பார்.

சூரியன், செவ்வாய், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். அதிகமாக கோபம் வரும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. வாகனம் இருக்காது. அப்படி இருந்தால், அதற்காக பணச்செலவு உண்டாகும். சிலர் விவசாயியாக இருப்பார்கள். அதில் கடுமையாக உழைப்பார்கள். சிலருக்கு திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும்.

சூரியன், செவ்வாய், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கும் அவருடைய வாரிசுக்குமிடையே பிரச்சினை இருக்கும். சிலருக்கு வாரிசு வருவதில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு குழந்தையே இருக்காது. பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். ஜாதகருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும்.படிப்பில் சிக்கல்கள் இருக்கும். சிலர் பொறியாளராக இருப்பார்கள். சிலர் காவல் துறையில் இருப்பார்கள். சிலர் இராணுவத்தில் இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், அடிக்கடி நோய்கள் வரும். விபத்துகள் நடக்கும். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். ஆனால், படிப்படியாக அவர்கள் குறைந்துவிடுவார்கள். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் வெளியூரில் சென்று தொழில் செய்வார்கள். அதிகமாக கோபம் வரும். தலைவலி, பித்தநோய் வரும்.

சூரியன், செவ்வாய், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு திருமண உறவைத் தாண்டி, பிறபெண்ணுடன் உறவு இருக்கும். பெண்ணாக இருந்தால், பிற ஆணுடன் தொடர்பிருக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது.தொழில் நன்றாக நடக்கும். நல்ல பணவரவு இருக்கும். கோபத்தால் பல பிரச்சினைகள் உண்டாகும்.

சூரியன், செவ்வாய், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு நோய்களின் பாதிப்பு இருக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். வலிப்பு நோய் வரலாம். இளம்வயதில் பலருக்கு ஜுரம் வரும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், செவ்வாய், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. கோப குணம் இருக்கும்.முதுகுத் தண்டில் வலி இருக்கும். ஜாதகர் எந்த வேலையையும் நிரந்தரமாக செய்ய மாட்டார். பெரிய வேலையில் இருந்தாலும், மனதில் சந்தோஷம் இருக்காது.கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது.

சூரியன், செவ்வாய், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், முற்பிறவியின் கர்மங்களை நிறறைவேற்ற பிறந்தவர்களாக இருப்பார்கள். சிலர் துறவிகளாக இருப் பார்கள். சிலர் திருமணம் செய்து, அதில் பிரச்சினையில் இருப்பார்கள். சிலருக்கு வாழ்க்கையின் முன்பகுதியில் கஷ்டங்கள் இருக்கும். கடுமையாக உழைத்து முன்னுக்கு வருவார்கள். சிலர் அரசியலில் பெரிய பதவி யில் இருப்பார்கள். சிலர் இராணுவத்தில் அல்லது காவல்துறையில் இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், பெரிய மனிதர்களாக இருப்பார்கள். பணம் சம்பாதிப்பார்கள். வாரிசு பிறப்பதில் பிரச்சினை இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். பெண்களுக்கு ரத்தம் சம்பந்தப் பட்ட நோய் இருக்கும். மாதவிடாய் பிரச்சினை இருக்கும்.நல்ல பணவசதி இருக்கும். வசதியான வாழ்க்கை இருக்கும். எனினும், இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், செவ்வாய், சனி 12-ஆம் பாவத் தில் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். அதிகமாக பயணம் செய்வார் கள். அதிக கோபம் வரும். அதனால், இல்வாழ்க்கையில் சந்தோஷம் குறையும். சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள். கண்ணில் நோய் இருக்கும். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. பணம் சேமிப்பதில் பிரச்சினை இருக்கும்.

செல்: 98401 11534