சூரியன், செவ்வாய், புதன் லக்னத் தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக பேசுவார். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். மனைவியுடன் உறவு சரியாக இருக்காது. மனைவிக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். ஜாதகரின் கடுமையான பேச்சு காரணமாக உறவுகளில் பாதிப்பு ஏற்படும். நல்ல பணவசதி இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன் 2-ஆம் பாவத்தில் இருப்பதால், ஜாதகர் கடுமையாக பேசுவார். கம்பீரமாக இருப்பார். பணக்காரராக இருப்பார். 36 வயதிற்குப் பிறகு பணம் சம்பாதிப்பார். குடும்ப உறவுகள் சுமாராக இருக்கும்.படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் பலசா-யாக இருப்பார். பித்த நோய் இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார். குடும்ப உறவுகள் சுமாராக இருக்கும். ஜாதகர
சூரியன், செவ்வாய், புதன் லக்னத் தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக பேசுவார். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். மனைவியுடன் உறவு சரியாக இருக்காது. மனைவிக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். ஜாதகரின் கடுமையான பேச்சு காரணமாக உறவுகளில் பாதிப்பு ஏற்படும். நல்ல பணவசதி இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன் 2-ஆம் பாவத்தில் இருப்பதால், ஜாதகர் கடுமையாக பேசுவார். கம்பீரமாக இருப்பார். பணக்காரராக இருப்பார். 36 வயதிற்குப் பிறகு பணம் சம்பாதிப்பார். குடும்ப உறவுகள் சுமாராக இருக்கும்.படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் பலசா-யாக இருப்பார். பித்த நோய் இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார். குடும்ப உறவுகள் சுமாராக இருக்கும். ஜாதகர் அதிகமாக பேசுவார். வெளியூருக்குச் சென்று பணம் சம்பாதிப்பார். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும்.பெண் மோகம் அதிகமாக இருக்கும். ஜாதகர் தான் மனதில் நினைப்பதை முடிக்க வேண்டுமென எண்ணுவார். தந்தையுடன் உறவு சுமாராக இருக்கும்.வீடு, மனைவி சுகம் இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் ஐ.ஏ.எஸ். படித்தவர்களாக இருப்பார்கள். சிலர் காவல் துறையில் பெரிய பதவியில் இருப்பார்கள். வாரிசு பிரச்சினை இருக்கும். வாரிசுகளுடன் உறவு சுமாராக இருக்கும். சிலர் வெளியூர் சென்று படிப்பார்கள். பணம் சம்பாதிப்பார்கள். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. சிலருக்கு ஒரு வாரிசு மட்டும் இருக்கும். பெண்களுக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு கோப குணம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு தோல்நோய் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து, பணம் சம்பாதிப்பார். கண்ணில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் பலசா-யாக இருப்பார்.
சூரியன், செவ்வாய், புதன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் படைத்தவராக இருப்பார். திருமண விஷயத்தில் தடை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் விபத்தில் சிக்குவார்கள். சிலர் வெளியூருக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள். சிலர் கடுமையாக பேசுவார்கள். அதனால், இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. சிலர் பல தொழில்களைச் செய்வார்கள்.
சூரியன், செவ்வாய், புதன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு இளம் வயதில் உடல்நலம் சரியாக இருக்காது. கடுமையான ஜுரம் வரும்.தலையில் நீர் கோர்க்கும். திருமணத்தடை இருக்கும். சிலருக்கு மறுமணம் செய்ய வேண்டிய நிலை உண்டாகும். 36 வயதிற்குப்பிறகு பரவாயில்லாத வாழ்க்கை இருக்கும்.
சூரியன், செவ்வாய் புதன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. கோப குணம் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். ஜாதகர் அதிகமாக பேசுவார். சிலர் தங்களுடைய பேச்சால், பல காரியங்களைக் கெடுத்துக்கொள்வார்கள்.
ஜாதகர் எப்போதும் தன்னையே பெரிதாக நினைத்துக்கொண்டி ருப்பார்.
சூரியன், செவ்வாய், புதன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையான உழைப் பாளியாக இருப்பார். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார் கள். பெயர், புகழ் இருக்கும். சிலர் சிறந்த மருத்துவர்களாக இருப்பார்கள். நன்கு சம்பாதிப் பார்கள். குடும்பத்தில் நல்ல பெயர் இருக்கும். ஜாதகரின் நற்செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
சூரியன், செவ்வாய், புதன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப் பார். பல வாகனங்கள் இருக்கும்.
வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் தன் வாரிசு களைப் பற்றிய சிந்தனை யிலேயே எப்போதும் இருப்பார்.
பெண்களுக்கு மாதவிடாய் விஷயத்தில் பிரச்சினை இருக் கும். கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் வெளியூருக் குச் சென்று பணம் சம்பாதிப் பார். சிலர் அரசாங்க பதவிகளில் இருப்பார்கள். அதில் பெயர், புகழ் கிடைக்கும்.
சூரியன், செவ்வாய், புதன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அதிகமாக பேசுவார். தலையில் முடி உதிரும். திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும்.வீண் செலவுகள் அதிகமாக இருக்கும்.
தேவையற்ற பயணம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் வெளியூருக்குச் சென்று வாழ்வார்கள். சூடு காரணமாக வயிற்றில் பிரச் சினை இருக்கும்.
செல்: 98401 11534