Advertisment

சந்திரன், செவ்வாய், புதன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்? மகேஷ்

/idhalgal/balajothidam/what-happens-if-moon-mars-and-mercury-are-placed-anywhere-mahesh

ந்திரன், செவ்வாய், சுக்கிரன் லக்னத்தில் இருந் தால், ஜாதகருக்கு தாயாருடன் சுமாரான உறவு இருக்கும். மனைவியின்மீது அவ்வப்போது கோபப் படுவார். மனைவியும் கோப குணம் உள்ளவ

Advertisment

ராக இருப்பாள். சீதளம் இருக்கும். ஜாதகருக்கு பெண் மோகம் இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.

Advertisment

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், காதல் திருமணத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. ஜாதகருக்கு பெண் மோகம் அதிகமாக இருக்கும். அதற்காக பணத்தைச் செலவழிப்பார். வயிற்றில் பிரச்சினை இருக்கும். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள். உடல் ஜீரணமாவதில் பிரச்சினை இருக்கும். சிலர் அடிக்கடி சாப்பிடுவார்கள். சகோதரர்களுடன் உள்ள உறவில் பிரச்சினை இருக்கும். 33 வயதிற்குப்பிறகு நன்கு பணம் சம்பாதிப்பார்கள்.

ss

சந்தி

ந்திரன், செவ்வாய், சுக்கிரன் லக்னத்தில் இருந் தால், ஜாதகருக்கு தாயாருடன் சுமாரான உறவு இருக்கும். மனைவியின்மீது அவ்வப்போது கோபப் படுவார். மனைவியும் கோப குணம் உள்ளவ

Advertisment

ராக இருப்பாள். சீதளம் இருக்கும். ஜாதகருக்கு பெண் மோகம் இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.

Advertisment

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், காதல் திருமணத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. ஜாதகருக்கு பெண் மோகம் அதிகமாக இருக்கும். அதற்காக பணத்தைச் செலவழிப்பார். வயிற்றில் பிரச்சினை இருக்கும். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள். உடல் ஜீரணமாவதில் பிரச்சினை இருக்கும். சிலர் அடிக்கடி சாப்பிடுவார்கள். சகோதரர்களுடன் உள்ள உறவில் பிரச்சினை இருக்கும். 33 வயதிற்குப்பிறகு நன்கு பணம் சம்பாதிப்பார்கள்.

ss

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பெண் மோகம் இருக்கும். அதற்காக வீணாக பணம் செலவாகும். சில நேரங்களில் உடல்நல பாதிப்பு உண்டாகும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். 38 வயதிற்குப் பிறகு வசதியான வாழ்க்கை இருக்கும்.மனைவிமீது ஜாதகருக்கு கோபம் வரும்.

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் நிலம் சம்பந்தப்பட்ட வர்த்தகத்தைச் செய்வார்கள். சிலருக்கு கள்ளத் தொடர்பு இருக்கும்.

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சலான குணம் இருக்கும். பெயர், புகழ் இருக்கும். வசதியான வாழ்க்கை இருக்கும். சிலர்

அரசிய-ல் பதவியில் இருப்பார்கள். சிலர் அரசியல்வாதிகளின் நட்பை வைத்திருப்பார்கள். வயிற்றில் பிரச்சினை இருக்கும். வாழ்க்கையின் பிற்பகுதி சந்தோஷமாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஜாதகர் பகைவர்களை வெல்வார். சிலர் மந்திர, தந்திர விஷயங்களில் மாட்டிக் கொள்வார்கள். நண்பர்கள் ஏமாற்றுவார்கள். சிலருக்கு பெண் மோகம் இருக்கும்.

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் துறவிகளாக இருப்பார்கள். தைரிய குணம் இருக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு, பணம் சம்பாதிப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்கையில் முற்பகுதியில் உடல்நல பாதிப்பிருக்கும். கோப குணம் இருக்கும். சீதளம் இருக்கும். ஈரலில் பிரச்சினை இருக்கும். காமவெறி அதிகமாக இருக்கும். நல்ல பண வசதி இருக்கும்.

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். அடிக்கடி கோபம் வரும். பண வசதி இருக்கும். வீடு, மனை வாகனம் இருக்கும். சிலர் நல்ல உடலமைப்பைக் கொண்டிருப்பார்கள். அந்த தோற்றத்தை வைத்து பெண் களை ஈர்ப்பார்கள். சிலர் வெளியூரில் தொழில் செய்வார்கள்.

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். துணிச்சலுடன் தன் காரியங் களைச் செய்வார்.தான் திட்டமிட்டதை முடிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார். தாயாருடன் சுமாரான உறவு இருக்கும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். சிலர் மருத்துவர் களாக இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் மனநல மருத்துவர்களாக இருப்பார்கள். சிலர் ஜோதிடர் களாக இருப்பார்கள். சிலர் ஆராய்ச்சி யாளராக இருப்பார்கள். வயிற்றில் நோய் இருக்கும். தூக்கம் சரியாக வராது. நல்ல பணவரவு இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும்.

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். வசதியான வாழ்க்கை இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சீதளம் இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும்.

செல்: 98401 11534

bala010324
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe