Advertisment

சந்திரன், செவ்வாய், புதன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்? மகேஷ்

/idhalgal/balajothidam/what-happens-if-moon-mars-and-mercury-are-placed-anywhere-mahesh-verma-0

ந்திரன், செவ்வாய், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் கோப குணம் உள்ளவராக இருப்பார். அழகான தோற்றத் தைக் கொண்டிருப்பார். மற்றவர்களை அதிகார தோரணையுடன் மிரட்டி, தன் காரியங்களைச் சாதிப்பார்.

Advertisment

அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பார். தன் ஊரின் தலைவராக இருப்பார். பெண்களுக்குப் பிடித்தவராக இருப்பார். பலசாலியாக இருப்பார். சந்தோஷமாக வாழ்வார்.

cc

சந்திரன், செவ்வாய், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலானவராக இருப்பார். நல்ல குடும்பத்தலைவராக இருப்பார். சில நேரங்களில் கோபம் வரும். வீடு, மனை, வாகனம் இருக்கும். இளம் வயதில் படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். சிலர் வர்த்தகர்களாக இருப

ந்திரன், செவ்வாய், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் கோப குணம் உள்ளவராக இருப்பார். அழகான தோற்றத் தைக் கொண்டிருப்பார். மற்றவர்களை அதிகார தோரணையுடன் மிரட்டி, தன் காரியங்களைச் சாதிப்பார்.

Advertisment

அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பார். தன் ஊரின் தலைவராக இருப்பார். பெண்களுக்குப் பிடித்தவராக இருப்பார். பலசாலியாக இருப்பார். சந்தோஷமாக வாழ்வார்.

cc

சந்திரன், செவ்வாய், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலானவராக இருப்பார். நல்ல குடும்பத்தலைவராக இருப்பார். சில நேரங்களில் கோபம் வரும். வீடு, மனை, வாகனம் இருக்கும். இளம் வயதில் படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். சிலர் வர்த்தகர்களாக இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பயணம் அதிகமாக செய்வார். குடும்பத்திற்காக கடுமையாக உழைப்பார். உடன்பிறந்தோருடன் நல்ல உறவு இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். சிலருக்கு பல தடங்கல்களைத் தாண்டி, திருமணம் நடக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். பூமி, வாகனம் இருக்கும். தேவையற்ற கோபம் வரும். வாழ்க்கை வசதியாக இருக்கும்.

‌சந்திரன், செவ்வாய், குரு 5-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பிள்ளைகள் இருப்பார்கள். அவர்கள் நன்றாக படிப்பார்கள். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் அரசாங்கத்தில் பெரிய பதவிகளில் இருப்பார்கள். சிலர் காவல் துறையில் இருப்பார்கள். சிலர் வெளிநாட்டில் பெரிய வர்த்தகர்களாக இருப்பார்கள். வயிற்றில் சிறிய பிரச்சினை இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். சிலருக்கு மறுமணம் நடக்கும். நல்ல பண வசதி இருக்கும்‌. சிலருக்கு ஒரு காலில் பிரச்சினை இருக்கும். சிலர் வெளிநாட்டில் பெயர், புகழுடன் இருப்பார்கள். சிலர் அதிகமாக கோபப்படுவார்கள்.

சந்திரன், செவ்வாய், குரு 7-ஆம் பாவத்தில் இருந்தால், மனைவி அழகாக இருப்பாள். ஜாதகருக்கு கோப குணமிருக்கும். திருமண வாழ்க்கையில் சிறிய பிரச்சினை இருக்கும். சிலர் பருமனாக இருப்பார்கள். சிலர் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் உடல்நல பாதிப்பிருக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். கோப குணம் இருக்கும். சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள். நன்றாக தூங்குவார்கள். இல்வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருக்கும். 32 வயதிற்குப் பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பண வசதியுடன் இருப்பார். பூர்வீக சொத்து கிடைக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். ஜாதகர் தான் நினைத்ததை முடிக் கும் குணம் உள்ளவராக இருப்பார். சிலர் அரசியல் வாதிகளாக இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், குரு 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் குடும்பத்தில் பெரிய மனிதராக இருப்பார். நன்கு தன் குடும்பத்தைக் காப்பாற்றுவார். சிலர் புகழ்பெற்ற மருத்துவர்களாக இருப்பார்கள். சிலர் அரசியல் வாதிகளாக இருப்பார்கள். சிலர் நீதிபதிகளாக இருப் பார்கள். பண வசதி, வாகன வசதி இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு 11-ஆம் பாவத்திலிருந்தால், இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக் கும். அதிகமான சிந்தனைகள் இருக்கும். கோப குணம் இருக்கும். வீடு, வாகனம் இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு 12-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத் தில் தடை இருக்கும். அதிக மான சிந்தனைகள் இருக்கும்.

செலவுகள் அதிகமாக இருக்கும். உடல்நல பாதிப்பு இருக்கும். சிலர் பருமனாக இருப்பார்கள். பெண் மோகம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

bala230224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe