சந்திரன், புதன், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். நல்ல தோற்றம் இருக்கும். பணக்காரராக இருப்பார். மனைவி நல்லவளாக இருப்பாள். ஜாதகர் திறமையான பேச்சாளராக இருப்பார். கடவுள் நம்பிக்கை இருக்கும். நல்ல நண்பர்கள் இருப்பார்கள்.
சந்திரன், புதன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். சிலர் ஆயுர்வேத மருத்துவர்களாக இருப்பார்கள். சிலர் எழுத்தாளராகவோ- பேராசிரியராகவோ இருப்பார்கள். நல்ல மனைவி இருப்பாள். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சந்திரன், புதன், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப
சந்திரன், புதன், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். நல்ல தோற்றம் இருக்கும். பணக்காரராக இருப்பார். மனைவி நல்லவளாக இருப்பாள். ஜாதகர் திறமையான பேச்சாளராக இருப்பார். கடவுள் நம்பிக்கை இருக்கும். நல்ல நண்பர்கள் இருப்பார்கள்.
சந்திரன், புதன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலர் டாக்டர்களாக இருப்பார்கள். சிலர் ஆயுர்வேத மருத்துவர்களாக இருப்பார்கள். சிலர் எழுத்தாளராகவோ- பேராசிரியராகவோ இருப்பார்கள். நல்ல மனைவி இருப்பாள். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சந்திரன், புதன், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். சிலர் பயண ஏஜென்டாக இருப்பார்கள். சிலர் கமிஷன் ஏஜென்டாக இருப்பார்கள். சிலர் இன்சூரன்ஸ் ஏஜென்டாக இருப்பார்கள். சிலர் பொருளாதாரம் படித்தவர்களாக இருப்பார்கள். மனைவி நல்லவளாக இருப்பாள். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். நல்ல பண வரவு இருக்கும்.
சந்திரன், புதன், குரு 4-ஆம் பாவத்தில் இருந்தால், தாயால் சந்தோஷம் இருக்கும். உடன் பிறப்புகளுடன் நல்ல உறவு இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சொந்த வீடு, வாகனம் இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். பெயர், புகழ் இருக்கும்.
சந்திரன், புதன், குரு 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அரசியலில் பெரிய பதவியில் இருப்பார். நன்கு படித்தவராக இருப்பார். வயிற்றில் பிரச்சினை இருக்கும். சிலர் வெளிநாட்டில் வாழ்வார்கள். சிலர் பேராசிரியராக இருப்பார்கள். நல்ல பிள்ளைகள் இருப்பார்கள்.
சந்திரன், புதன், குரு 6-ஆம் பாவத்தில் இருந்தால், வயிற்றில் நோய் இருக்கும். தைரியம் குறைவாக இருக்கும். சிலருக்கு காலில் அடிபடும். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும். சிலர் வியாபாரிகளாக இருப்பார்கள். சிலர் பயணம்செய்து, பணத்தைச் சம்பாதிப்பார்கள்.
சந்திரன், புதன், குரு 7-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல மனைவி அமைவாள். மனைவிக்கு நல்ல கணவர் அமைவார். ஜாதகர் வெளியூர் சென்று படிப்பார். சிலர் இசை கற்றவர்களாக இருப்பார்கள். சிலர் சாஸ்திரங்களைப் படித்தவர்களாக இருப்பார்கள். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். பண வரவு இருக்கும். சிலர் உயர்ந்த நூல்களை எழுதுவார்கள்.
சந்திரன், புதன், குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஆழமான சிந்தனையாளராக இருப்பார்கள். சிலர் பின்னர் நடக்கப்போவதை முன்கூட்டியே கணிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இளமையில் உடல்நல பாதிப்பு இருக்கும். தூக்கம் சரியாக வராது. 32 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வீடு, மனை இருக்கும். ஜாதகர்தான் மட்டுமே பேசவேண்டுமென்று எப்போதும் நினைப்பார்.
சந்திரன், புதன், குரு 9-ஆம் பாவத்தில் இருந்தால், தாத்தா, தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அவர்களால் பெயர், புகழ் கிடைக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சொந்தத்தில் வீடு, வாகனம் இருக்கும். ஜாதகர் தான் கூறுவதுதான் சரி என்று பிடிவாதம் பிடிப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சந்திரன், புதன், குரு 10-ஆம் பாவத்தில் இருந் தால், ஜாதகர் அறிவாளி யாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். 46 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் பெரிய பதவியில் இருப்பார். சிலர் நீதிபதியாக இருப்பார்கள். வீடு, வாகனம் இருக்கும்.
சந்திரன், புதன், குரு 11-ஆம் பாவத்தில் இருந் தால், இளமையில் கஷ்டங் கள் இருக்கும். தந்தை, உடன்பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும் போது மட்டும் சந்தோஷ மாக இருப்பார். இல்லா விட்டால், பல சிரமங்களை அனுபவிக்க வேண்டிய திருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.
சந்திரன், புதன், குரு 12-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு ஆணவ குணம் அதிகமாக இருக்கும். வீண் பேச்சு இருக்கும். ஜாதகத்தில் சனி சரியில்லையெனில், மூளையில் பாதிப்பு இருக் கும். வயிற்றில் நோய் இருக் கும். இளமையில் கஷ்டம் இருக்கும். டைபாய்ட், மலேரியா போன்ற நோய்களின் பாதிப்பு இளம் வயதில் இருக்கும்.
செல்: 98401 11534