Advertisment

சந்திரன், செவ்வாய், புதன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்? மகேஷ்

/idhalgal/balajothidam/what-happens-if-moon-mars-and-mercury-are-placed-anywhere-mahesh-0

ந்திரன், செவ்வாய், சனி லக்னத்தில் இருந்தால், இளமையில் தாயால் சந்தோஷம் இருக்காது. கோப குணம் இருக்கும். ஜாதகர் துரோகம்

Advertisment

செய்பவராக இருப்பார். கலகம் செய்பவராக இருப்பார். தான் எப்போதும் கஷ்டத்தில் இருப்பதாக கூறுவார். மனைவியுடன் சந்தோஷமாக இருக்கமாட்டார்.

சந்திரன், செவ்வாய், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோபப்படுபவராக இருப்பார். அடிக்கடி சண்டை போடுவார். வீட்டில் கலகம் செய்வார். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும்.

பணம் சம்பாதிப்பார். மனைவியிடம் வாதத்தில் ஈடுபடுவார். பணம் ஈட்ட அடிக்கடி பயணம் செய்வார்.

Advertisment

சந்திரன், செவ்வாய், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் வெளியூரில் சென்று வாழ்வார்கள். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். இளம் வயதில் உடல்நல பாதிப்பு இருக்கும்.

ந்திரன், செவ்வாய், சனி லக்னத்தில் இருந்தால், இளமையில் தாயால் சந்தோஷம் இருக்காது. கோப குணம் இருக்கும். ஜாதகர் துரோகம்

Advertisment

செய்பவராக இருப்பார். கலகம் செய்பவராக இருப்பார். தான் எப்போதும் கஷ்டத்தில் இருப்பதாக கூறுவார். மனைவியுடன் சந்தோஷமாக இருக்கமாட்டார்.

சந்திரன், செவ்வாய், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோபப்படுபவராக இருப்பார். அடிக்கடி சண்டை போடுவார். வீட்டில் கலகம் செய்வார். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும்.

பணம் சம்பாதிப்பார். மனைவியிடம் வாதத்தில் ஈடுபடுவார். பணம் ஈட்ட அடிக்கடி பயணம் செய்வார்.

Advertisment

சந்திரன், செவ்வாய், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் வெளியூரில் சென்று வாழ்வார்கள். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். இளம் வயதில் உடல்நல பாதிப்பு இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பண வரவு இருக்கும். சிலர் அரசு பதவியில் இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலர் கலப்பு திருமணம் செய்வார்கள். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் தாங்கள் செய்வதே சரி என்று பேசுவார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்காது. தாயால் சந்தோஷம் குறைவாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள். சிலருக்கு வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு பிள்ளைகளால் சிக்கல்கள் உண்டாகும். ஜாதகர் வாத, விவாதம் செய்பவராக இருப்பார். சிலர் இராணுவத்தில் இருப்பார்கள். ஜாதகர் பலசாலியாக இருப்பார். சிலருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும்.

ss

சந்திரன், செவ்வாய், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், கோபம் அதிகமாக வரும். இல்வாழ்க்கை சரியாக இருக்காது. சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் அதிகமாக உணவு சாப்பிடுவார்கள். சிலருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். காலில் அடிபடும். சிலருக்கு புற்று நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சந்திரன், செவ்வாய், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், தாமதமாக திருமணம் நடக்கும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். சிலர் மறுமணம் செய்வார்கள். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவேண்டும். எந்த தொழிலையும் நிலையாக செய்ய மாட்டார்கள். குருவின் பார்வை இருப்பதால், சிலர் பெரிய தொழிலதிபராக இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படும். இல்வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்த தாக இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். எட்டு வயதுவரை உடல்நலக் கேடு இருக்கும். வீட்டில் எப்போதும் வாதம், விவாதம் நடக்கும்.

சந்திரன், செவ்வாய், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. அவர் தந்தையின் சொத்தை அழிப்பார். தந்தையிடம் வாதம் செய்வார். மனைவி யிடம் கடுமையாக பேசுவார். இளமையில் கஷ்டம் இருக்கும். சிலர் தொழிலதிபர் களாக இருப்பார்கள். பிற்பகுதி வாழ்க்கை நன்றாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் மிகவும் கடுமையான மனிதராக இருப்பார். கோப குணம் இருக்கும். அதிகார தோரணையில் பேசுவார். 48 வயதிற்குப் பிறகு, சிலர் அரசியல்வாதியாக ஆவார்கள்.

அங்கு பெரிய பதவியில் இருப்பார்கள். சிலர் பெரிய அரசாங்க பதவிகளில் இருப் பார்கள். இல்வாழ்க்கை சுமாராக இருக் கும். தாயின் உடல் நலம் பாதிக்கப்படும்.

சந்திரன், செவ்வாய், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஆண்களுக்கு கோப குணம் இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை இருக்கும். ரத்தம் குறைவாக இருக்கும். பணவரவு இருக்கும். ஜாதகர் திருட்டுத்தனம் செய்தாவது பணத்தைச் சம்பாதிக்க வேண்டுமென நினைப்பார். சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சினை இருக்கும்.

சந்திரன், செவ்வாய், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், தாமதமாக திரு மணம் நடக்கும். கோபம் அதிகமாக வரும்.

செலவுகள் அதிகமாக இருக்கும். சிலர் போதைக்கு அடிமையாக இருப்பார்கள்.

சிலருக்கு பெற்றோரால் சந்தோஷம் இருக் காது. சிலர் வீண் வாதங்களில் ஈடுபடு வார்கள். சிலர் வெளி யூரில் தொழில்செய்து, பணம் சம்பாதிப்பார் கள்.

bala080324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe