சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பொறியியல் நிபுணராக இருப்பார்.
தைரியசாலியாக இருப்பார். சிலருக்கு வாரிசு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய் 2-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப் பார். கோப குணம் உள்ளவராக இருப்பார்.
குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருக்கும்.
சகோதரர்களுடன் உள்ள உறவில் குறை இருக்கும்.
27 வயதிற்குப்பிறகு வாழ்க்கை சந்தோஷ மாக இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு துணிச்சல் குணம் இருக்கும்.
வாழ்க்கையின் முன்பகுதியில் சில கஷ்டங்கள் இருக்கும். பிற்பகுதி சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். ஜாதகர் தன் செயல்களை நன்கு முடிப்பார்.
சூரியன், சந்திரன், செவ்வாய் 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தைரியம் இருக்கும்.
இல்வாழ்க்கையில் பிரச் சினை இருக்கும். பூமி பாக்கியம் இருக்கும்.
சூரியன், சந்தி ரன், செவ்வாய் 5-ஆம் பாவத்தில் இருந்தால், பெயர், புகழ் இருக்கும். சிலர் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப் பார்கள். சிலர் சுய முயற்சியால் வளர்ந்து, நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.
சிலருக்கு வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும். பித்த நோய் இருக்கும். சிறிய அளவில் விபத்துகள் நடக்கலாம்.
சூரியன், சந்திரன், செவ்வாய் 6-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகருக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள். பெயர், புகழ் இருக்கும். சிலருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். சிலரின் தாயார்களுக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். சிலர் வெளியூரில் சென்று வாழ்வார் கள். கோபம் அதிகமாக இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய் 7-ஆம் பாவத் தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடை இருக்கும். ஜாதகர் பணம் சம்பாதிப்பார்.
தைரியசாலியாக இருப்பார். சில நேரங் களில் அவசியமற்றதைப் பேசி, பகைவர்களை உண்டாக்கிக்கொள்வார். ஒரே இடத்தில் நிரந்தரமாக இருக்க மாட்டார்.
சூரியன், சந்திரன், செவ்வாய் 8-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகருக்கு வாழ்க்கையின் முன்பகுதியில் நோய் இருக்கும். அடிக்கடி ஜுரம் வரும். அடிக்கடி விபத்து நடக்கும்.
வாழ்க்கையில் சந்தோ ஷம் இருக்காது. ஆனால், குருவால் பார்க்கப்பட் டால், சந்தோஷம் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாத கருக்கு தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். தைரிய குணம் இருக்கும்.
சுயமுயற்சியால் பணத் தைச் சம்பாதிப்பார். சிலர் வர்த்தகர்களாக இருப்பார் கள். பயணம் அதிகமாக செய்வார்கள். கோப குணம் இருக்கும். அனைவரிடமும் ஜாதகருக்கு நல்ல பெயர் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய் 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசாங்க அதிகாரிகளாக இருப்பார்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். கோப குணம் இருக்கும். அன்னைக்கு உடல்நல பாதிப்பு இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப்பார். பெயர், புகழ் இருக்கும். அரசாங்க விஷயத்தில் ஆதாயம் இருக்கும். சிலர் அரசாங்க அதிகாரிகளாக இருப்பார்கள்.
வயிற்றில் நோய் இருக் கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக் கும்.
சூரியன், சந்திரன், செவ் வாய் 12-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண தடை இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலர் மறுமணம் செய்வார்கள். வெளியே நல்ல பெயர் இருக்கும்.
உறவினர்களால் பிரச்சினை இருக் கும். தந் தைக்கு உடல்நல பாதிப்பு இருக்கும்.
செல்: 98401 11534