ஜாதகத்தில் ராசிக்கட்டம் பக்கத்தில் அம்சக் கட்டம் போட்டிருப்பார்கள். இது எதற்காக ஜாதகத்தில் போடப்பட்டுள்ளது என்பது சிலருக்குத் தெரியாது. சில ஜோதிடர்கள் வெறும் ராசிக்கட்டத்தை வைத்து மட்டும் பலன் சொல்வார்கள்.
அவ்வாறு சொன்னால் முழுமையான பலன் கிடைக்காது.
ஜோதிடத்தில், ஜாதகப்பலனை நிர்ணயிப் பதற்கு பல பிரிவுகள் உள்ளன. ஆனால் குறைந்த பட்சம் நவாம்சக் கட்டத்தைப் பார்த்து, அதை ஆராய்ச்சி செய்து நிர்ணயம் செய்தால் துல்லியமான பலன்கள் கிடைக்கும். எந்த ஜாதகத்தை ஆய்வுசெய்ய கையில் எடுக்கி றோமோ, அந்த ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகத் திற்கும் பாதசாரம், நட்சத்திரப் பாதம் போட்டிருப்பார்கள். உதாரணமாக, மீன ராசியில் சுக்கிரன் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் இங்குள்ள சுக்கிரன் உச்சம்பெற்றிருக்கும். மீன ராசியில் ஒன்பது பாதங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது பாதங்களில் ஒன்றில்தான் சுக்கிரன் இருந்தாக வேண்டும். அம்சக்கட்டத்தை ஆராய்ச்சி செய்துதான் ஜோதிடப் பலன்கள் சொல்ல வேண்டும் என்பது நியதி.
உதாரணமாக, மிதுன லக்னத்திற்கும், மகர லக்னத்திற்கும் சுக்கிரன் யோக காரகன்; யோகாதிபதி. ஒருவேளை சுக்கிரன் மீன ராசியில் உச்சம்பெற்றால் களத்திரகாரன், சுகபோககாரன் வலுத்துவிட்டது என்பது பொருள். இதனால் சுக்கிர தசையில் ஜாத கருக்கு அனைத்துவித வசதிகள், வீடு கிடைத்து விடும்; மனைவி நன்றாக அமைவாள் என்று ஜாதகர் பகல் கனவு காண்பார்.
சுக்கிரன் வலுத்துவிட்டால் சுக்கிர தசையில் கணவன்- மனைவி இருவரும் மிகவும் அன்பாக இருப்பார்கள்; வாகனம் கிட்டும்; வாழ்க்கைத் தரம் மேம்படும். கலைத்துறை, சினிமாத்துறை நாட்டம் வரும் என பொதுவாக பலன் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவை அத்தனையும் நடைமுறையில் சாத் தியமாகுமா என்றால், சுக்கிரன் உத்திரட்டாதி 2-ல் இருக்கக்கூடாது. ஏன்? இங்கேதான் அம்சக்கட்டத்தின் பயன், பலன்கள் தெரியவரும். உத்திரட்டாதி 2-ஆம் பாதம் அம்சத்தில் கன்னி ராசியில் சுக்கிரன் இருப்பார். கன்னி ராசி சுக்கிரனுக்கு நீச வீடு. மிதுன லக்னத்திற்கு 5, 12-க்குடைய சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று, அம்சத்தில் கன்னியில் நீசமடைந்தால் தன் உச்சவலுவை இழந்து உச்சபலனை இழந்துவிடும். நீசம் என்றால் ஒரு கிரகம் சுய வலுவை இழந்து விட்டதாகப் பொருள்.
அப்படி அம்சத்தில் வலுவிழந்த சுக்கிரன் மிதுன லக்னத்திற்கு சுக்கிர தசையில் முழுமை யான பலன் தராமல் போய்விடும். மறுபடியும் வாழ்க்கையில் போராட்டம், துன்பங்கள் தலைதூக்கும். மேலே சொன்ன அத்தனை நல்ல பலன்கள், கனவுப் பலன்கள் எல்லாம் பொய்த்து விடும். இதற்குக் காரணம் அம்சக் கட்டத்தில் சுக்கிரன் பலம் இழந்ததே.
லக்னத்திற்கு யோகத்தைக் கொடுக்கும் கிரகங்கள் அம்சக்கட்டத்தில் பலம் இழக்கக்கூடாது. லக்னத்திற்கு யோகத்தைச் செய்யாத கிரகங்கள் அம்சக் கட்டத்தில் பலமிழக்க வேண்டும். லக்னத்திற்கு யோகத்தைச் செய்யாத கிரகம் ராசியில் பலமிழந்தால், மறுபடியும் அம்சக் கட்டத்தில் வலுத்தால் தீய பலன்கள்தான் செய்யும்.
மிதுன லக்னத்திற்கு 5, 12-க்குடைய சுக்கிரன் வலுவிழந்தால் பூர்வபுண்ணி யம் குறைவாக இருக்கிறது என்று பொருள். 12-க்குடைய சுக்கிரன் வலுவிழந்தால் அயன, போக ஸ்தானம் வலுவில்லை என்பது பொருள். இதனால் கணவன்- மனைவி தாம்பத்திய உறவு பாதிக்கும். வெளிநாட்டுப் பயண வாய்ப்பு அமைவது கடினம். ராசியில் பலம் பெற்ற கிரகங்கள் அம்சத்தில் பலமிழந்தால், அந்த தசாபுக்தியின் ஆரம்பத்தில் நன்மை செய்து பின்னர் கெடுதல்கள் நடைபெறும். ராசியில் பலமிழந்து அம்சத்தில் பலம் பெற் றால் முதலில் தீமைகள் நடைபெற்று பின்னர் நன்மைகள் நடைபெறும். ராசியிலும், அம்சத் திலும் யோகத்தைச் செய்யும் கிரகம் நூறு சதவிகிதம் முழுமையாக பலம்பெற்றால் நூறு சதவிகிதம் முழுமையான பலன்கள் கிடைக் கும். இதனால் ஜாதகர் கீழ்நிலையில் இருந் தாலும் வாழ்க்கையில் மேல்நோக்கி வருவார்; பயணிப்பார். ராசியில் யோகத்தைச் செய்யும் கிரகம் நீசம் பெற்று அம்சத்தில் பலம் பெற்றால் ஐம்பது சதவிகித யோகத்தைதான் கொடுக்கும்.
யோகத்தைச் செய்யும் கிரகம் ராசியில் உச்சம், ஆட்சி, நட்பு பெற்று அம்சத்தில் நீசம், பகை பெற்றால் ஐம்பது சதவிகிதம்தான் யோகத் தைக் கொடுக்கும். ராசியில் யோகத்தைச் செய்யாத கிரகம் நீசம், பகை பெற்று அம்சத் தில் ஆட்சி, உச்சம், நட்பு பெற்றால் தீமை யான பலன்கள்தான் நடைபெறும்.
ஒருசிலர் அம்சக்கட்டம் முப்பது வயதிற்கு மேல் பார்க்க வேண்டும் என்றும், ஒருசிலர் அது தேவையில்லை என்றும் கூறுகிறார்கள். நம்முடைய ஆயுள் இறுதிமூச்சுவரை அம்சக் கட்டம் வேலை செய்யும் என்பதே உண்மை. ஜாதகப் பலன்கள் ராசி, அம்சம், பாதசாரம் ஆகிய இந்த மூன்றை ஒட்டியே நடைபெறும். அதேபோல் ஒரு கிரகம் எந்த நட்சத்திர பாதசாரத்தில் உள்ளது என்பதை ஆராய வேண்டும். லக்னத்திற்கு யோக கிரகம் யோக சாரத்தில் உள்ளதா அல்லது அவயோக சாரத்தில் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்து பலன்களை முடிவுசெய்ய வேண்டும்.
யோக கிரகம் லக்னத்திற்கு அசுப யோக சாரத்தில் இருந்தால் முழுமையான, நன்மை யான பலன்கள் நடைபெறாது. யோககிரகம் லக்னத்திற்கு யோக சாரம் பெற்றால் யோகப் பலன்களை முழுமையாகச் செய்ய வாய்ப் புள்ளது. அதேபோல் யோகத்தைச் செய்யாத கிரகம் யோக சாரத்தில் இருந்தால் ஐம்பது சதவிகிதம் தீமையான பலன்கள் நடைபெறும். யோகத்தைச் செய்யாத கிரகம் அவயோக சாரத்தில் இருந்தால் முழுமையான, தீமையான பலன்களைச் செய்யும். ஒரு கிரகம் ராகு- கேது சாரம் பெற்றால் ராகு- கேது இருக்கும் இடத்தைப் பொருத்து நன்மை, தீமைகள் அமையும். யோகத்தைச் செய்யும் கிரகம் ஒரு ராசியில் அமரும்பொழுது அதன் வீட்டு அதிபதி வலுவாக இருக்க வேண்டும். அவ்வாறு வலுவில்லையென் றாலும், அமர்வு சரியில்லையென்றாலும் முழுமையான யோகப் பலன்களைக் கொடுக்காது.
உதாரணமாக, நமக்குச் சொந்த வீடு இல்லையென்றாலும், இருந்தாலும் ஒருசில காரணங்களால் வாடகை வீட்டிற்கு குடிபோகும்பொழுது, அந்த வீட்டின் உரிமையாளர் நன்றாக இருந்தால் மட்டுமே நம்முடைய தேவையை- கோரிக்கையை அவரு டைய செலவில் செய்துதருவார். இல்லை யென்றால் நம்மையே பழுதுபார்த்துக் கொள்ளச் சொல்வார். அந்தச் செலவை வாடகையிலோ முன்பணத்திலோ கழிக்க முடியாது என்றும் கூறுவார். இதனால் நாம் அந்த வீட்டிற்கு குடிபுகுந்தும் நஷ்டத்தை சந்திப்போம். இதனால் பணவிரயம், மனவிரயம் ஏற்படும்.
மேற்கண்ட உதாரணத்துடன் ஜாதகத்தில் ராகு- கேது 3, 6, 11-ல் இருந்தாலும், ராகு- கேது இருக்கும் வீட்டின் அதிபதி பகை, நீசம், அஸ்தமனம், கிரகயுத்தம் அடையக் கூடாது. இதனால் ராகு- கேது 3, 6, 11-ல் இருந்தும் முழுமை யான நல்ல பலன்கள் கொடுக்காமல் போய் விடும். ராகு- கேது 3, 6, 11-ல் இருந்து, அதன் வீட்டு அதிபதி நட்பு, ஆட்சி, உச்சம் பெற்றால் தான் முழுமையான நல்ல பலன்களைக் கொடுக்கும். எனவே ஜாதகப் பலனைச் சொல்வதற்கு அம்சக்கட்டம் மிகமிக முக்கியம்.
செல்: 98403 69513