எந்த லக்னமாயினும் செவ்வாய் 3-லும், சனி 4-லும் நின்று ஒருசேரப் பார்க்கும் பலன்...
செவ்வாய் 4-ஆம் பார்வையாலும், சனி 3-ஆம் பார்வையாலும் 6-ஆமிடத்தைப் பார்ப்பார்கள்.
செவ்வாய் 8-ஆம் பார்வையாலும், சனி 7-ஆம் பார்வையாலும் 10-ஆமிடத்தை கவனிப்பர்.
6-ஆமிடப் பார்வைப் பலன்கள்
6-ஆமிடம் என்பது நோய், எதிரி, கடன், வழக்கு ஸ்தானம். செவ்வாய், சனி இருவரின் பார்வையும் பார்த்த இடத்தைப் பாழாக்கும். இதன்படி, இவ்வமைப்புள்ள ஜாதகர்களுக்கு நோயின் தாக்கம் இராது. எதிரிகள் எல்லை தாண்டி ஓடுவர் அல்லது எதிரிகள் ஏற்பட்டாலும் உடனே அழிந்துவிடுவர்.
கடன் தொல்லை இருக்காது.
ஆக, இவ்வமைப்புள்ள ஜாதகர்களுக்கு ஒருவகையில் நல்லதே நடக்கும் எனலாம்.
சிலருக்கு 6-ஆம் அதிபதியைவிட லக்னாதி பதி வலுக்குன்றிருந்து எதிரிகள் ஏற்பட்டாலும், இந்த இருவரின் பார்வை அவர்களின் மண்டையில் தட்டி விரட்டிவிடும்.
இந்த இடத்தில் 6-ஆம் அதிபதியின் இன்னொரு காரகமான வேலையை யோசிக்க வேண்டியிருக்கிறது. செவ்வாய், சனியின் பார்வை வேலைக்கே போகவிடாதோ என்று தோன்றுகிறது.
இவர்கள் ஜாதக அமைப்புப்படி, செவ்வாய், சனி ஆகியோரில் யாரேனும் ஒருவர் யோகாதி பதியாக இருந்து, 6-ஆமிடம் சுபர் பார்வை யும் பெற்றால், இவர்கள் ரியல் எஸ்டேட், இரும்பு சம்பந்தமான வேலையில் அமர்வர்.
6-ஆமிடம் தாய்மாமனைக் குறிக்கும். எனவே இவர்களுக்கு கோபம் வந்தால் தாய்மாமனுடன் சண்டைக்குப் போவார்கள்.
இவ்வமைப்புக்கு பரிகாரம்தேவை யில்லை என்

இவ்வமைப்புக்கு பரிகாரம்தேவை யில்லை என்று நினைக்கிறேன்.
10-ஆமிடப் பார்வைப் பலன்கள்
செவ்வாய் 3-லும், சனி 4-லும் நின்று 10-ஆமிடத்தைப் பார்ப்பார்கள்.
10-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானம்.
அதை சனி தனது ஏழாம் பார்வையால் பார்க்கிறார். செவ்வாய் எட்டாம் பார்வை எனும் கொடும் பார்வையால் பார்க்கிறார்.
இவர்களிருவரும் தொழில் ஸ்தானத்தை துவம்சம் செய்கிறார்கள்.
செவ்வாய், சனி 3, 4-ல் இருந்து மாதச் சம்பள ஸ்தானத்தையும், சொந்தத் தொழில் ஸ்தானத்தையும் ஒருசேரக் கெடுக்கிறார்கள். அப்படியாயின் இவ்வமைப்பு ஜாதகர்களின் நிலையென்ன?
10-ஆம் அதிபதி நன்றாக இருப்பின், தொழில் தொடங்கலாம். ஆனால் இவர்கள் பெயரில் அல்லாமல் வேறு நல்ல ஜாதக அமைப்புள்ளவர்களின் பெயரில் தொடங்க லாம். இவர்கள் பெயரில் ஆரம்பித்தால், ஒன்று வழக்குகள் வந்துவிடும். அல்லது தீப்பிடிக்கும். எனவே கவனம் தேவை. கௌரவ மாக வாழப் போராடுவார்கள்.
பரிகாரங்கள்
திருப்பதி வேங்கடாசலபதியை மனமார வணங்கவும்.
மதுரை மாவட்டத்திலுள்ள சிந்துபட்டி வேங்கடாசலபதி ஆலயம், தொழில்முனைவோருக்கேற்ற தலமாகும்.
புதன்கிழமை 10.30 முதல் 12.00 மணிக்குள் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, பாசிப்பருப்பு பாயசத்துடன் வணங்கவும்.
ஆஞ்சனேயருக்கு செந்தூரம் வாங்கிக் கொடுக்கவும். சனீஸ்வரர் சந்நிதிக்குத் தேவை யறிந்து பொருட்கள் வாங்கிக் கொடுக்கவும்.
பைரவருக்கு இரும்பு அகல்விளக்கில் 26 மிளகை நீலநிறத் துணியில் பொட்டலம் கட்டி, நீலநிறத்திரியில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றவும்.
எந்த லக்னமாயினும் செவ்வாய் 4-லும், சனி 5-லும் அமர்ந்த பலன்...
செவ்வாய் 4-ல் அமர்ந்தும், சனி 5-ல் அமர்ந்தும் 7-ஆமிடத்தையும், 11-ஆமிடத் தையும் ஒன்றாகப் பார்வையிடுவர்.
7-ஆமிடப் பார்வைப் பலன்கள்
7-ஆமிடம் என்பது களஸ்திர ஸ்தானம்.
செவ்வாயும் சனியும் ஒரே நோக்கில் அந்த ராசியைப் பார்க்கும்போது. திருமண விஷயங் களைக் குளறுபடியாக்குவர். முக்கியமாக பெற்றோர் பார்த்த திருமணமாக அல்லாமல், காதல் திருமணமாக அமைந்துவிடும். இந்த இரு பாவர்களும் ஒருசேர 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு கண்ணாடிக்குவளைபோல், சற்றே கை தவறினால் விழுந்து நொறுங்கிவிடும் நிலையில் இருக்கும். இத்தகைய அமைப்பிலுள்ளோர் காதல் மணம் புரிந்தாலும் மிக கவனமாக இருத்தல் அவசியம். இவர்களின் பிரச்சினை, வசதிவாய்ப்புக் குறைவு, சுற்றத்தாரின் எரிச்சல், வேலை விஷயம், மனம் வேறுபாடு கொள்ளுதல், வீடு, வாகனம், வாழும் சூழ்நிலை பிடிக் காமல் போதல், வேறுபாடான பழக்கவழக்கம் என இவை போன்ற சமாளிக்கக்கூடிய விஷயங் களே விரிசலுக்குக் காரணமாக இருக்கும்...
இதே 7-ஆமிடத்தை குரு பார்த்தால் மணவாழ் வைக் காப்பாற்றிப் பாதுகாத்துவிடுவார். 7-ஆம் அதிபதி நல்ல நிலையில் இருந்து குருவும் பார்த்தால், பெற்றோர் சம்மதத்துடன் மணம் நடைபெறும். அதனால் பிரிவினை சிக்கலும் வராது. அப்படியே வந்தாலும் பெரியவர்கள் பேசி சரிப்படுத்திவிடுவர்.
7-ஆம் பாவகம், வியாபாரப் பங்குதார ரையும் குறிக்கும். எனவே தொழில் செய்வோர், தங்கள் கூட்டாளிகளிடம் கவனமாக இருத்தல் அவசியம்.
அதுபோலவே குத்தகை சம்பந்தமான விஷயங்களிலும் கவனமாக இருத்தல் வேண்டும்.
பரிகாரங்கள்
உங்கள் வீட்டில் திருமண வயதுடைய யாருக்காவது இவ்வமைப்பு இருப்பின் காமோ கர்ஷண யாகம் செய்துகொள்ளவேண்டும்.
இவ்வமைப்பும் ஒரு களத்திர தோஷம்தான். வயதான சுமங்கலி−க்குப் புடவையுடன் தாம்பூலம் வழங்கவேண்டும்.
பைரவருக்கு மாவிளக்கு போடலாம்.
அல்லது அகலி−ல் தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யூற்றி சிவப்புநிறத் துணியில் 24 மிளகைக் கட்டி சிவப்புத் திரியிட்டு தீபமேற்றவும்.
திருக்கஞ்சனூர், திருமணஞ்சேரி வழிபாடு நன்று. காதல் மணம் செய்தபிறகு, சண்டை இல்லாமல் இணைந்து வாழ, திருச்செங்கோடு, திருச்சக்தி முற்றம், ஸ்ரீரங்கம், திருசாத்தமங்கை போன்ற தலங்களில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வழிபட, காதல் திருமணம் காலமெல் லாம் நிலைத்துநிற்கும்.
11-ஆமிடப் பார்வைப் பலன்கள்
செவ்வாய் 8-ஆம் பார்வையாலும், சனி 7-ஆம் பார்வையாலும் 11-ஆமிடம் எனும் லாப ஸ்தானத்தைப் பார்க்கிறார்கள்.
செவ்வாய் பார்வையால் 11-ஆமிடம் எனும் மூத்த சகோதரருடன் எப்போதும் சண்டைதான். சமாதானமே கிடையாது. 11-ஆம் அதிபதியும் லக்னாதிபதியும் நன்றாக இருந்து, இவரும் மூத்த சகோதரரும் இணைவாக இருப்பின், எங்காவது இவரும் மூத்த சகோ தரரும் சேர்ந்து பயணம் செய்யும்போது அவருக்கு காயம்பட நேரலாம். சண்டை போடு வதேமேல் என்றாகிவிடும். இவர்களுக்குப் பதவி உயர்வு, அரசியலி−ல் நல்ல பதவி, மக்கள் சபைகளில் தேர்வு போன்றவை கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத கதையாக, வாய்ப்புகள் கூடிவரும் நேரத்தில் கை நழுவிப் போய்விடும். இதற்கு இவர்களின் எதிரிகள் செய்யும் "அன்டர்கிரவுண்ட்' வேலை காரணமாயிருக்கும்.
இவர்கள் மலையளவு, வானளவு லட்சியம் கொண்டிருப்பார்கள். ஆனால் அவை நிறைவேற மிக சிரமப்பட வேண்டியிருக்கும். நிறைய தடைகளை- இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
செவ்வாய் தசை, சனி புக்தி நடக்கும்போது முழங்கால் துன்பம் தரும். சிலருக்கு அறுவை சிகிச்சையும் செய்யவேண்டி வரும்.
11-ஆமிடம் லாபஸ்தானம். இவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய வரவுகள், மூதாதையர் சொத்து, செல்வம், நகைகள், பணவரவு போன்றவை வந்து சேருவ தற்குள், அவைமீது வெறுப்பே வந்துவிடும்.
அவ்வளவு தடைகள் வரும்.
11-ஆமிடம் சமையலுக்கான இடம்.
இவ்வமைப்புடையோர் சமையல் செய்தால், வாயில்வைக்க விளங்காது. அல்லது சமையல் செய்யும்போது, அடிக்கடி தீப்புண் ஏற்பட்டு அது சம்பந்தமான நோய்வரும்.
பரிகாரங்கள்
பைரவரை நாக−ங்கப் பூ, உளுந்து வடை, நாவற்பழம், எள்ளுருண்டை ஆகியவற்றுடன் பூஜை செய்யவேண்டும்.
எண்ணம் நிறைவேற முதல்படியாக, குலதெய்வத்திற்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்துவிடவும்.
வீரபத்திரர் வழிபாடு நன்று.
அகலி−ல் சந்தனாதி தைலம் ஊற்றி, 22 மிளகை கருநீலத் துணியில் பொட்டலம் கட்டி, கருநீலத் திரியில் தீபமேற்றவும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 94449 61845