Advertisment

செவ்வாய், சனியின் ஒருமித்த பார்வை என்ன செய்யும்? - ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/what-does-mars-and-saturns-consensus-look-r-mahalakshmi-1

சென்ற இதழ் தொடர்ச்சி...

ந்த லக்னமாயினும் செவ்வாய 12-லும், சனி லக்னத்திலும் அமர்ந்த பலன்...

செவ்வாய் 12-ல் அமர்ந்து 3-ஆம் வீட்டையும், சனி லக்னத்தில் அமர்ந்து 7-ஆம் வீட்டையும் கவனிப்பர்.

Advertisment

12-ல் அமர்ந்த செவ்வாய் தனது நான்காம் பார்வையில் மூன்றாம் வீட்டை முறைத்துப் பார்ப்பார்.

லக்னத்தில் அமர்ந்த சனி 3-ஆம் பார்வையால் அதே வீட்டை கவனிப்பார்.

3-ஆமிடம் வீரிய ஸ்தானம். அதுவும் ஆண்களுக்கு இவ்வமைப்பிருந்தால் அவர்கள், ஒரு நல்ல மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. சனி, தனது மூன்றாம் பார்வை கொண்டு 3-ஆமிடத்தை அழிப்பதால், அவ்விடத் தின் முக்கிய செயலாற்றல் முடங் கிவிடும் அபாயமுண்டு. இவ்வகை அமைப்புள்ள ஆண்கள் திருமணம் வேண்டாம் என்று சொன்னால், அவ்வார்த்தைக்கு மதிப்பு கொடுக் கவேண்டும். வீணாக ஒரு பெண்ணின் பாவத்தை விலைகொடுத்து

சென்ற இதழ் தொடர்ச்சி...

ந்த லக்னமாயினும் செவ்வாய 12-லும், சனி லக்னத்திலும் அமர்ந்த பலன்...

செவ்வாய் 12-ல் அமர்ந்து 3-ஆம் வீட்டையும், சனி லக்னத்தில் அமர்ந்து 7-ஆம் வீட்டையும் கவனிப்பர்.

Advertisment

12-ல் அமர்ந்த செவ்வாய் தனது நான்காம் பார்வையில் மூன்றாம் வீட்டை முறைத்துப் பார்ப்பார்.

லக்னத்தில் அமர்ந்த சனி 3-ஆம் பார்வையால் அதே வீட்டை கவனிப்பார்.

3-ஆமிடம் வீரிய ஸ்தானம். அதுவும் ஆண்களுக்கு இவ்வமைப்பிருந்தால் அவர்கள், ஒரு நல்ல மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. சனி, தனது மூன்றாம் பார்வை கொண்டு 3-ஆமிடத்தை அழிப்பதால், அவ்விடத் தின் முக்கிய செயலாற்றல் முடங் கிவிடும் அபாயமுண்டு. இவ்வகை அமைப்புள்ள ஆண்கள் திருமணம் வேண்டாம் என்று சொன்னால், அவ்வார்த்தைக்கு மதிப்பு கொடுக் கவேண்டும். வீணாக ஒரு பெண்ணின் பாவத்தை விலைகொடுத்து வாங்கக் கூடாது.

பெண்களுக்கு இவ்வமைப்பு இருப்பின், இவ்வுலகம் அப்பெண் களை ஒரு காலகட்டம்வரை "ரொம்ப பயந்தாங்கொள்ளி' என்று சொல்லும். பிறகு, "அந்தப் பொண்ணு கொஞ்சம் லூஸு' என்று மனசாட்சி இல்லாமல் சொல்லிவிடும். 3-ஆம் அதிபதியும் கெட்டிருப்பின், விசேஷ கவனம் செலுத்தவேண்டும். முதலிலேயே மனநல மருத்துவர்களை ஆலோசிப் பது நன்று.

Advertisment

சிலருக்கு மனநலம் சரியாக இருந்தால், அடிக்கடி வீட்டை மாற்றும் நிலை அல்லது கல்வி நிலையம் மாறுவது, எழுதுவது, பேசுவது போன்றவற்றில் சற்று தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

பரிகாரங்கள்

சித்தா, ஆயுர்வேத மருத்துவ உதவி பெறவும்.

பைரவருக்கு அகலில் 23 மிளகிட்டு, பச்சைத்துணிப் பொட்டலத்தில், இலுப்பை எண்ணெய்யில் பச்சை நிறத் திரியிட்டு தீபமேற்றவும்.

pp

ஆஞ்சனேயர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர் வழிபாடு அவசியம்.

திருப்பரங்குன்றம் முருகரை வழிபடவும்.

பயந்த சுபாவமுள்ளவர்களைக் கிண்டல் செய்யாமல் இருக்கவும்.

திருநங்கைகளுக்கு முடிந்த உதவி செய்யவும்.

செவ்வாய் 12-ல் அமர்ந்து தனது எட்டாம் பார்வையால் ஏழாம் வீட்டை கவனிக்கிறார்.

சனி லக்னத்தில் இருந்து தனது 7-ஆம் பார்வையால் அதே வீட்டைப் பார்க்கிறார்.

7-ஆம் வீடு என்பது களஸ்திர ஸ்தானம் என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த திருமண வீட்டை செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் எரிக்க, சனி தனது ஏழாம் பார்வையால் எட்டாக்கனி ஆக்குகிறார்.

இவ்வமைப்பு ஜாதகர்களுக்கு திருமண மாவதென்பது மிக அரிது. ஏழாம் அதிபதி நன்றாக இருந்தால் திருமணம் மிகக் காலங்கடந்து நடக்கும். சீக்கிரமாகத் திருமணம் நடந்தாலும், அது நீடித்து நிலைக்குமா என்பது யோசிக்கவேண்டிய விஷயம்.

செவ்வாய், தனது எட்டாம் பார்வையால் பார்ப்பதால், திருமணப் பொருத்ததின்போது வாழ்க்கைத்துணையின் ஆயுள் ஸ்தானம் பலமாக இருத்தல் அவசியம்.

பரிகாரங்கள்

விவாகத்திற்குரிய ஹோமங்கள் அவசியம்.

பைரவருக்கு, அகலில் பசு நெய்விட்டு, சிவப்புத்துணியில் 24 மிளகு கட்டி, சிவப்பு நிறத் திரியில் தீபமேற்றவும்.

முருகருக்கு திருமண உற்சவம் நடத்துதல் நன்று.

திருச்சத்திமுற்றம், திருக்கஞ்சனூர், திருமணஞ்சேரி போன்ற ஸ்தல வழிபாடு நடத்தவும்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றுவரவும்.

செவ்வாய் 12-லும், சனி லக்னத்திலும் நின்று வீரிய, தைரிய ஸ்தானத்தையும், களஸ்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்கள்.

எனவே இவ்வமைப்பு பெற்ற ஜாதகர்கள், தங்கள் இயலாமையால் திருமணம் வேண்டாமென பிடிவாதமாக மறுதலித் தால், தயவுசெய்து அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தவேண்டாம். ஒரு நல்ல மனோ தத்துவ மருத்துவரைக் கலந்தாலோசித்து, "குணமாக்கிவிடலாம்; எல்லாம் சரியாக வரும்' என்ற நம்பிக்கையை மருத்துவர் சொன்னால் மட்டுமே திருமணப் பேச்சை எடுக்கவேண்டும்.

பிறப்பு ஜாதகத்தில் இவ்வாறு செவ்வாய் முதல் கட்டத்திலும், சனி இரண்டாவது கட்டத்திலும் அமைந்தவர்களுக்கு இவ்விதம் இரு இடங்களும் பாதிப்புக்கு உள்ளாகும். கோட்சாரம் இவ்வாறு அமையும்போது பிறந்த வர்களுக்கு, போன ஜென்ம பாதிப்பின்படி இறைவனின் கட்டளையா என்றும் யோசனையாக இருக்கிறது.

எல்லா ஜாதகத்திலும் செவ்வாய், சனி இருவரும் முழு பாவிகளாக இருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு ஜாதகத்திற்கும் செவ்வாய் யோகாதிபதியாக இருப்பார் அல்லது சனி யோகக்காரகராக அமைவார். அப்போது, இவர்களின் பார்வை முழு கெடுதல் செய் யாமல், சில நன்மைகளையும் செய்துதரும்.

அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொருத்து மேற்கண்ட பலன்கள் சற்று கூடும்; குறையும்.

செல்: 94449 61845

bala300819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe