ஒரு குடும்பத்திலுள்ள சிறு குழந்தையை அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என நெருங்கிய உறவினர்கள் பார்த்துக்கொண்டே இருந்தால் அக்குழந்தைக்கு பாதுகாப்பும் அரவணைப்பும் மகிழ்ச்சியும் தன்னிச்சை யாகக் கிடைக்கும்.
அதுவல்லாது ஒரு திருடனோ, குழந்தைக் கடத்தல்காரனோ, அந்த வீட்டு எதிரியோ அக்குழந்தையை ஒருசேர பார்க்க நேர்ந்தால், குழந்தையின் கதி என்னாகும்?
ஜோதிடத்திலும் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், பாவிகளுடன் சேராத புதன் இவர்கள் பார்வையிடின் அந்த இடம் விருத்தி பெறும்; துளிர்க்கும்; பூக்கும்; மலரும்; மணம் வீசும். ஜாதகருக்கு மட்டுமல்லாது அவரது குடும்பத்தினருக்கும், சுற்றியுள்ளவர்களுக்கும் அனுகூலம் நிரம்பக் கிடைக்கும்.
ஜோதிடத்தில் பாவகிரகங்களாக சனி, செவ்வாய், சூரியன், ராகு- கேதுக்கள் குறிப் பிடப்பட்டுள்ளனர். இதில் சூரியன் ராஜ கிரகம் மற்றும் முதன்மை கிரகம். எனவே சூரியனை பாவர் வகையில் சேர்ப்பது யோசனைக்குரியது. மீதமுள்ள சனி, செவ்வாய், ராகு- கேதுக்களின் பார்வை எவ்விதம்?
இதில் ராகு, கேதுக்களுக்கு 7-ஆம் பார்வை முக்கியமானது. மேலும் 3, 11-ஆம் பார்வை யால் பக்கவாட்டில் பார்த்துக்கொள் வார்கள்.
ஒரு பாவ கிரகம் ஓரிடத்தைப் பார்த்தாலே அவ்விடம் பாழ். இந்த நிலையில் இரு பாவகிரகங்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தைப் பார்க்க இயலுமா?
சனி, செவ்வாய் ஆகிய இரு கிரகப் பார்வைகளால் இயலும். எவ்விதம்?
ஒரு ஜாதகக் கட்டத்தில் செவ்வாய் முதல் கட்டத்திலும், சனி அதற்கடுத்த இரண்டாவது கட்டத்திலும் இருந்தால், இவர்கள் இருவரது பார்வையும் ஒரே ராசியைத் தாக்கும்.
செவ்வாய் தனது 4-ஆம் பார்வையால் ஒரு ராசிக்கட்டத்தைப் பார்க்கும்போது, சனி தனது 3-ஆம் பார்வையால் அதே கட்டத்தை நோக்குவார்.
செவ்வாய் தனது 8-ஆம் பார்வையால் ஒரு கட்டத்தை அவதானிக்கும்போது, சனி தனது 7-ஆம் பார்வையால் அதே கட்டத்தைக் கூர்ந்து நோக்குவார்.
செவ்வாய்க்கு 4, 7, 8-ஆம் பார்வை உண்டு.
சனிக்கு 3, 7, 10-ஆம் பார்வை உண்டு.
தங்களது பிறந்த ஜாதகத்தில் இவ்விதம் இரு பாவர்களின் ஒருமித்த பார்வையை ஒரே ராசியில் பெற்றவர்கள் அதற்கேற்ப பரிகாரம் செய்துகொள்ளவேண்டும். மேலும் வாழ்க்கை முறையையும் அதற்குத் தகுந்தாற் போல் வாழப் பழகுதல
ஒரு குடும்பத்திலுள்ள சிறு குழந்தையை அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என நெருங்கிய உறவினர்கள் பார்த்துக்கொண்டே இருந்தால் அக்குழந்தைக்கு பாதுகாப்பும் அரவணைப்பும் மகிழ்ச்சியும் தன்னிச்சை யாகக் கிடைக்கும்.
அதுவல்லாது ஒரு திருடனோ, குழந்தைக் கடத்தல்காரனோ, அந்த வீட்டு எதிரியோ அக்குழந்தையை ஒருசேர பார்க்க நேர்ந்தால், குழந்தையின் கதி என்னாகும்?
ஜோதிடத்திலும் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், பாவிகளுடன் சேராத புதன் இவர்கள் பார்வையிடின் அந்த இடம் விருத்தி பெறும்; துளிர்க்கும்; பூக்கும்; மலரும்; மணம் வீசும். ஜாதகருக்கு மட்டுமல்லாது அவரது குடும்பத்தினருக்கும், சுற்றியுள்ளவர்களுக்கும் அனுகூலம் நிரம்பக் கிடைக்கும்.
ஜோதிடத்தில் பாவகிரகங்களாக சனி, செவ்வாய், சூரியன், ராகு- கேதுக்கள் குறிப் பிடப்பட்டுள்ளனர். இதில் சூரியன் ராஜ கிரகம் மற்றும் முதன்மை கிரகம். எனவே சூரியனை பாவர் வகையில் சேர்ப்பது யோசனைக்குரியது. மீதமுள்ள சனி, செவ்வாய், ராகு- கேதுக்களின் பார்வை எவ்விதம்?
இதில் ராகு, கேதுக்களுக்கு 7-ஆம் பார்வை முக்கியமானது. மேலும் 3, 11-ஆம் பார்வை யால் பக்கவாட்டில் பார்த்துக்கொள் வார்கள்.
ஒரு பாவ கிரகம் ஓரிடத்தைப் பார்த்தாலே அவ்விடம் பாழ். இந்த நிலையில் இரு பாவகிரகங்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தைப் பார்க்க இயலுமா?
சனி, செவ்வாய் ஆகிய இரு கிரகப் பார்வைகளால் இயலும். எவ்விதம்?
ஒரு ஜாதகக் கட்டத்தில் செவ்வாய் முதல் கட்டத்திலும், சனி அதற்கடுத்த இரண்டாவது கட்டத்திலும் இருந்தால், இவர்கள் இருவரது பார்வையும் ஒரே ராசியைத் தாக்கும்.
செவ்வாய் தனது 4-ஆம் பார்வையால் ஒரு ராசிக்கட்டத்தைப் பார்க்கும்போது, சனி தனது 3-ஆம் பார்வையால் அதே கட்டத்தை நோக்குவார்.
செவ்வாய் தனது 8-ஆம் பார்வையால் ஒரு கட்டத்தை அவதானிக்கும்போது, சனி தனது 7-ஆம் பார்வையால் அதே கட்டத்தைக் கூர்ந்து நோக்குவார்.
செவ்வாய்க்கு 4, 7, 8-ஆம் பார்வை உண்டு.
சனிக்கு 3, 7, 10-ஆம் பார்வை உண்டு.
தங்களது பிறந்த ஜாதகத்தில் இவ்விதம் இரு பாவர்களின் ஒருமித்த பார்வையை ஒரே ராசியில் பெற்றவர்கள் அதற்கேற்ப பரிகாரம் செய்துகொள்ளவேண்டும். மேலும் வாழ்க்கை முறையையும் அதற்குத் தகுந்தாற் போல் வாழப் பழகுதல் அவசியம்.
இந்த கட்டுரையில் இன்ன லக்னம், இன்ன ராசி எனக் குறிப்பிடாமல், பொதுவாக லக்னத்துக்கு அடுத்தடுத்து அமையும் செவ்வாய், சனி பார்வை விவரமும், அதன் பாதிப்புகளும், அதற்கான பரிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் பிறப்பு ஜாதகத்தில், இவர்களின் இருப்பைக்கொண்டு ஏற்படும் பலன்களை அறிந்து தெளிவடையலாம்.
அடுத்தடுத்துள்ள செவ்வாயும் சனியும் ஒரு ராசிக்கட்டத்தில், இரு இடங்களில் தங்களது ஒருமித்த பார்வையைப் பதிக்க இயலும்.
எந்த லக்னமாயினும், லக்னத்தில் செவ்வாய், 2-ஆமிடத்தில் சனி அமர்ந்திருந்தால்...
செவ்வாயின் 4-ஆம் பார்வையும், சனியின் 3-ஆம் பார்வையும் 4-ஆமிடத்தில் பதியும்.
செவ்வாயின் 8-ஆம் பார்வையும், சனியின் 7-ஆம் பார்வையும் ஒருசேர 8-ஆமிடத்தில் சேரும்.
4-ஆமிடப் பார்வைப் பலன்கள்
செவ்வாய், சனி என இரு பாவர்களின் பார்வைகளும் 4-ஆமிடத்தில் பரவும்போது, தாயாரின் உடல்நலம் கெடும். கல்வித்தடை உண்டு. கிணறு வெட்டினால் தண்ணீர் வராது. ஏற்கெனவே தண்ணீர் ஊற்றெடுத்த கிணறுகூட, இவர்கள் வசம் வந்தவுடன் வற்றிப் போய்விடும். இவர்கள் இருக்கும் வீட்டில் அடிக்கடி பழுதுபார்க்கும் செலவு வரும். வாகனப் பழுது தொடர்ந்து இருக்கும்.
அசையா சொத்துகள் இவர்களை அசைத்துப் பார்க்கும்.
இவர்கள் குடியிருக்கும் வீட்டைச்சுற்றி குப்பைக்கிடங்காக இருக்கும். அல்லது ஏதாவது எரிந்து காணப்படும். அல்லது ஏதோ ஒருவகையில் நெருப்பும் அனல் காற்றும் புகையும் வீசும். வீட்டின் நுழைவு வாசல் குறுகலாகவோ அல்லது இடித்து காயம்படும்படியாகவோ அமையும்.
சிலரோ ஏரி, குளம் அருகில் அல்லது அதன் உள்ளேயே வீட்டைக் கட்டியிருப் பார்கள். நீர்நிலைகள் இருந்த இடத்தில் வீட்டைக்கட்டிக் குடியிருந்தால் வாழ்க்கை சிறக்காது. உறவினர்கள் குற்றம் சொல்லி−க் கொண்டே இருப்பர். இல்லறத்துணையின் (கணவன் அல்லது மனைவி) தொழில் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
4-ஆமிடம் விவசாயத்தைக் குறிக்கும். இவர்கள் தங்கள் வயலி−ல் எதை விதைத் தாலும், முழுமையாக அறுவடை செய்ய இயலாது. ஆயினும், செவ்வாய் தனது 4-ஆம் பார்வையால் 4-ஆமிடத்தையே பார்ப்பதால், விவசாய நிலைமை ஓரளவு தேறிவிடும்.
நான்காம் அதிபதி உச்சம், ஆட்சி பெற்று அமர்ந்தாலும், நான்காம் வீட்டை சுபகிரகங்கள் பார்த்தாலும், மேற்கண்ட நிகழ்வுகள் ஓரளவு கட்டுக்குள் அமையும்.
பரிகாரம்
கடல் அல்லது நீர்நிலைகள் அருகிலுள்ள முருகனை வணங்கவும். நீர்நிலை அருகிலுள்ள ஆஞ்சனேயரை தரிசிக்கவும். சனீஸ்வரருக்கு குளிர அபிஷேகம் (நல்லெண்ணெய்) செய்யவும். முருகன் அபிஷேகத்துக்கு சந்தனம் வாங்கிக் கொடுக்கவும்.
நீர்நிலைகளில் வீடு கட்டியிருந்தால், கூடியமட்டும் அதனைவிட்டு நீங்கி, வேறிடத் தில் வீடு பார்க்கவும். இல்லையெனில் தந்தை யின் உடல்நிலையில் பாதிப்பு வந்துகொண்டே இருக்கும். பள்ளிக் குழந்தைகளுக்கு குடிநீர் வசதி செய்துகொடுக்கவும். தாழ்வுநிலைத் தொழிலாளிகளின் வாகனப் பராமரிப்புக்கு உதவவும். எல்லாவற்றையும்விட பெற்ற தாயை நன்கு கவனிக்கவும்.
இவ்விதப் பரிகாரங்கள் 4-ஆமிடத்தை, இரு பாவர்களின் ஒருமித்த பார்வையிலி−ருந்து, மழைக்குக் குடைபோல் காத்து ரட்சிக்கும். பைரவருக்கு அக−ல் நெய் ஊற்றி, 20 மிளகை பொட்டலம் கட்டி, சந்தன நிறத் துணியில் கட்டி, தாமரைத்தண்டு திரியிட்டு விளக் கேற்றவும்.
8-ஆமிடப் பார்வைப் பலன்
லக்னத்தில் செவ்வாய், தனது 8-ஆம் பார்வையால் லக்னத்தின் 8-ஆமிடத்தையும், 2-ஆமிட சனி தனது 7-ஆம் பார்வையால் 8-ஆமிடத்தையும் நோக்குவார். 8-ஆமிடம் என்பது ஆயுள் ஸ்தானம். அதனை ஆயுள் காரகன் சனி பார்ப்பது நன்மையே. ஆனால் செவ்வாய், தனது 8-ஆம் பார்வையால் 8-ஆமிடத்தைப் பார்ப்பது சற்று கிலி−தான்.
செவ்வாயின் 8-ஆம் பார்வை சற்று கொடுமை யானதுதான்.
அதனால், செவ்வாய் தனது தசாபுக்திக் காலத்தில், ஜாதகருக்கு அவ்வப்போது விபத்துகளை ஏற்படுத்த, சனி தனது பார்வை யால் ஜாதகரைக் காப்பாற்றிவிடுவார். எனவே இவ்வமைப்புள்ள ஜாதகர்கள் அவ்வப்போது அடிபட்டு மருத்துவமனை போவதும், கட்டு களுடன் திரும்பி வருவதும் வாடிக்கையாகி விடும் "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கு வாண்டா' என்ற முடிவுக்கு இந்த இரு கிரகங் களும் கொண்டுவந்து விடுவர்.
8-ஆமிடம் அவமானத்தை உண்டாக்கும் இடம். ஆனால் இந்த இரு பாவர்களும் அவமான இடத்தைச் சுட்டெரிப்பதால், இவர்களுக்கு அவமானம், கெட்ட பெயர் என்ற பேச்சுக்கே இடமில்லை.
குரு, 8-ஆமிடத்தைப் பார்த்தால், அவர் ஜாதகரைப் பாதுகாத்துவிடுவார்.
பரிகாரம்
முடிந்தபோதெல்லாம் பைரவரை வணங்கவும். அகலி−ல், சிவப்புத்துணியில் 25 மிளகைப் பொட்டலம் கட்டி, இலுப்பை எண்ணெய் ஊற்றி, சிவப்பு நிறத்திரியிட்டு விளக்கேற்றவும். கொள்ளு, சுண்டல், விளாம்பழம் நன்று.
எந்த லக்னமாயிலும் செவ்வாய் 2-லும், சனி 3-லும் இருக்கும் பலன்...
செவ்வாய் 4-ஆம் பார்வையாலும், சனி 3-ஆம் பார்வையாலும் 5-ஆமிடத்தைப் பார்ப்பர்.
செவ்வாய் 8-ஆம் பார்வையாலும், சனி 7-ஆம் பார்வையாலும் 9-ஆம் இடத்தை ஒருசேர அவதானிப்பர்.
5-ஆமிடப் பார்வைப் பலன்கள்
செவ்வாய் 2-ல் அமர்ந்து தனது 4-ஆம் பார்வையால் 5-ஆமிடத்தையும், சனி 3-ல் அமர்ந்து தனது 3-ஆம் பார்வையால் 5-ஆமிடத்தையும் ஒருசேர உற்று நோக்குவர்.
5-ஆமிடம் என்பது கர்ப்பஸ்தானம். இவ்வித அமைப்புள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை சுருங்கியிருக்கும். இதற்குக் காரணம் செவ்வாயின் வெப்பப் பார்வை. மற்றும் சனியின் குறுக்கும் பார்வை. சிலருக்கு, மருத்துவர் ஒருவரின் கர்ப்பப்பை வளர்ச்சியின்றி உள்ளதென்றோ, ஒட்டிக் கொண்டுள்ளதென்றோ அல்லது விந்தணுக் கள் கர்ப்பயைச் சென்றுசேரும் குழாய்கள் சரியாக இல்லை என்றோ கூறுகிறார் என்றால், அதற்குக் காரணம் இந்த இரு பாவகிரகப் பார்வையின் தாக்கமே ஆகும்.
ஆண்களுக்கும் குழந்தை உருவாக்கும் விந்தணுக்களின் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவில் இருக்கும்.
செவ்வாயின் 4-ஆம் பார்வையாதலால். கர்ப்பப்பைக் குறைபாடுகளை ஏற்படுத்தும். அதனால், குழந்தை உண்டானாலும் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.
பரிகாரங்கள்
திருக்கருகாவூர் சென்று படிப்பாயச பூஜை செய்யவும்.
தொட்டமளூர் கிருஷ்ணரை வேண்டிக் கொள்ளவும்.
குழந்தை முருகனை,கோவணத்துடன் கூடிய பழனிமுருகனை வேண்டிக் கொள்ளவும்.
வியாழக்கிழமை குரு ஹோரையில் பைரவருக்கு முந்திரிப்பழ மாலை அணிவித்து, கொண்டைக்கடலை நிவேதனம் செய்து வழிபட்டு, அதனை விநியோகம் செய்தால் சனி பார்வையால் குழந்தை உண்டாக ஏற்படும் தடை நீங்கும்.
பெண்கள் எள், நல்லெண்ணெயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
குழந்தைகாரகர் குருவே விதைகளில் முளை தோன்றக் காரணகர்த்தா. எனவே குழந்தை வேண்டுவோர் முளைகட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஆங்கில மருத்துவத்துடன் சித்த, ஆயுர்வேத வைத்தியரையும் கலந்தாலோசிக்க வேண்டும்.
செவ்வாய் 2-லும், சனி 3-லும் இருந்து, அவர்கள் 9-ஆமிடத்தை ஒன்றாக உற்று நோக்குவர்.
9-ஆமிடப் பார்வைப் பலன்கள்
9-ஆமிடம் முக்கியமாக ஆன்மிகத்தையும், அதிர்ஷ்டத்தையும் குறிக்கும். தந்தையைக் குறிக்கும் இடமும் ஆகும்.
செவ்வாய் தனது 8-ஆம் பார்வையால் தந்தை ஸ்தானத்தைப் பார்ப்பதால், இவ்வித ஜாதகருக்கு ஒன்று இவருடைய தந்தை யுடன் அடிக்கடி மனஸ்தாபம் ஏற்படும். அல்லது இவருக்கு தந்தையாகும் வாய்ப்பு தடைப்படும்.
கவனியுங்கள்; செவ்வாய் 2-லும், சனி 3-லும் இருக்கும் அமைப்பு, பெண்களின் கர்ப்ப ஸ்தானத்தையும், ஆண்களின் தந்தை ஸ்தானத்தையும் ஒருசேர பாழடிக்கிறது.
மேலும் செவ்வாய், சனி தசாபுக்திக் காலங் களில் ஜாதகரின் தந்தைக்கு அடிபடும் அல்லது கண்டம் ஏற்படும் வாய்ப்பு உருவாகும்.
9-ஆமிடம் என்பது, இளைய சகோதரத்தின் மணவாழ்வைக் குறிக்குமிடம். ஜாதகரின் தரமற்ற பேச்சும், கண்ணியக்குறைவான செய்கைகளும் அவர்களின் மணவாழ்வில் புயலைக் கிளப்பும்.
9-ஆமிடம் பக்திப்பூர்வமாது. இவ்வமைப் புள்ள ஜாதகர்கள் தாம் சார்ந்திருக்கும் மதம் பிடிக்கவேயில்லை என்று மதத்தின் எல்லை தாண்டி, பிற மத வழிபாட்டிற்குள் செல்வர்.
9-ஆமிட காரகமான மேற்கல்வி, வெளி நாட்டுப் பயணம் எல்லாம் கனவில் மட்டுமே அமையும். ஒருவேளை 9-ஆம் அதிபதி சுபமாகியிருந்து, சுபகிரகப் பார்வை பெற் றால், நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனாலும் கிடைக்கும் பலன்கள் தாறுமாறாகத்தான் அமையும். பெரியவர்களை எப்போதும் பழித்துப் பேசிக்கொண்டிருப்பர். மரியாதைக் குரிய நல்லவர்களின் விரோதத்துடனேயே எப்போதும் வாழ்வர்.
பரிகாரங்கள்
குலதெய்வம், இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம்.
சிறுவயதி−ருந்தே கடவுள் பக்தி, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கவும். இதன்மூலம் இவர்கள் வேண்டாத யோசனை செய்வது தவிர்க்கப்படும்.
திருச்செந்தூர் முருகனைவேண்டிக் கொள்ளவும்.
இராமேஸ்வரம் சென்று தரிசிக்கவும்.
கோவில்களில் உழவாரப் பணி மேற் கொள்ளவும்.
பைரவருக்கு விளக்கேற்றவும்.
குழந்தைகள், வயதானவர்கள் சம்பந்தமாக நிறைய உதவி செய்யவேண்டும்.
பைரவருக்கு மஞ்சள்நிறத் துணியில் 21 மிளகைப் பொட்டலம் கட்டி, விளக் கெண்ணெய் ஊற்றி, மஞ்சள் திரியிட்டு விளக்கேற்றவும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் நன்று.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 94449 68145