Advertisment

செவ்வாய், சனியின் ஒருமித்த பார்வை என்ன செய்யும்? -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/what-does-mars-and-saturns-consensus-look-ar-mahalakshmi-0

சென்ற இதழ் தொடர்ச்சி...

ந்த லக்னமானாலும் செவ்வாய் 5-லும், சனி 6-லும் அமர்ந்த பலன்...

செவ்வாய் 5-ஆமிடத்தில் அமர்ந்து, தனது நான்காம் பார்வையால் 8-ஆமிடத்தையும், சனி 6-ல் அமர்ந்து தனது மூன்றாம் பார்வை யால் 8-ஆமிடத்தையும் அவதானிப்பர்.

Advertisment

செவ்வாயின் பார்வை எட்டாமிடத்தில் படிவதால், அவ்வப்போது விபத்துகள் உண்டாகும். 4-ஆம் பார்வையால் பார்ப்ப தால் விபத்துகளை உண்டாக்கி, சுகத்தைக் கெடுப்பார். சனி எனும் ஆயுள்காரகன் 8-ஆமிடம் எனும் ஆயுள் ஸ்தானத்தை அவதானிப்பதால், ஆயுளை விருத்தி செய்வார். ஒரு பாவக காரகர் அதே தன்மை யுடைய பாவத்தைப் பார்க்கும்போது விருத்தியடையச் செய்வார் என்பது ஜோதிட விதி. அதன்படி செவ்வாய் அவ்வப்போது அடிபடச்செய்ய, சனி ஆயுள்பங்கம் வராமல் பாதுகாப்பார்.

ss

8-ஆமிடத்திற்கு வேறுபல காரகங்களும் உண்டு. அவமானம், அதிக நோய், துர்பாக் கியம், விபத்து என வேண்டத்தகாத பல விஷயங்களைக் கொடுக்கும். ஒருவேளை செவ்வாய், சனியின் துர்ப்பார்வைகள், இத்தைய விஷயங்களை அழித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பரிகாரங்கள்

இவ்வமைப்புள்ளவர்கள், சனிக்கிழமை தோறும் பைரவரை வணங்குதல் அவசியம்.

Advertisment

மண் அகல் விளக்கில் சிவப்புத் துணியில் 25 மிளகை வைத்துப் பொட்டலம் கட்டி, இலுப்பை எண்ணெயிட்டு தீபமேற்றவும்.

நரசிம்மரை வணங்கவும். திருப்பரங்குன்றம் முருகரை சேவிக்கவும்.

இவர்களுக்குரிய முக்கிய பரிகாரம்- யாராவது மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும் நிலையில் இருந்தால், முதல் ஆளாக ரத்ததானம் செய்துவிடுங்கள்.

12-ஆமிடப் பார்வைப் பலன்கள்

செவ்வாய் 5-ல் அமர்ந்து தனது எட்டாம் பார்வையால் 12-ஆம் வீட்டையும், சனி 6-ல் அமர்ந்து அதே 12-ஆம் வீட்டை தனது ஏழாம் பார்வையாலும் ஒருசேர ஏறிட்டு நோக்குவர்.

ஆக, 12-ஆம் வீடு எனும் விரயஸ்தானம் பாழாகிறது. 12-ஆம் இடம் தூர இடத்திற்குப் பிரிந்து செல்வதைக் குறிக்கும். இதனை சுபர்கள் பார்த்தால், மகிழ்ச்சியாக வெளிநாட்டுப் ப

சென்ற இதழ் தொடர்ச்சி...

ந்த லக்னமானாலும் செவ்வாய் 5-லும், சனி 6-லும் அமர்ந்த பலன்...

செவ்வாய் 5-ஆமிடத்தில் அமர்ந்து, தனது நான்காம் பார்வையால் 8-ஆமிடத்தையும், சனி 6-ல் அமர்ந்து தனது மூன்றாம் பார்வை யால் 8-ஆமிடத்தையும் அவதானிப்பர்.

Advertisment

செவ்வாயின் பார்வை எட்டாமிடத்தில் படிவதால், அவ்வப்போது விபத்துகள் உண்டாகும். 4-ஆம் பார்வையால் பார்ப்ப தால் விபத்துகளை உண்டாக்கி, சுகத்தைக் கெடுப்பார். சனி எனும் ஆயுள்காரகன் 8-ஆமிடம் எனும் ஆயுள் ஸ்தானத்தை அவதானிப்பதால், ஆயுளை விருத்தி செய்வார். ஒரு பாவக காரகர் அதே தன்மை யுடைய பாவத்தைப் பார்க்கும்போது விருத்தியடையச் செய்வார் என்பது ஜோதிட விதி. அதன்படி செவ்வாய் அவ்வப்போது அடிபடச்செய்ய, சனி ஆயுள்பங்கம் வராமல் பாதுகாப்பார்.

ss

8-ஆமிடத்திற்கு வேறுபல காரகங்களும் உண்டு. அவமானம், அதிக நோய், துர்பாக் கியம், விபத்து என வேண்டத்தகாத பல விஷயங்களைக் கொடுக்கும். ஒருவேளை செவ்வாய், சனியின் துர்ப்பார்வைகள், இத்தைய விஷயங்களை அழித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பரிகாரங்கள்

இவ்வமைப்புள்ளவர்கள், சனிக்கிழமை தோறும் பைரவரை வணங்குதல் அவசியம்.

Advertisment

மண் அகல் விளக்கில் சிவப்புத் துணியில் 25 மிளகை வைத்துப் பொட்டலம் கட்டி, இலுப்பை எண்ணெயிட்டு தீபமேற்றவும்.

நரசிம்மரை வணங்கவும். திருப்பரங்குன்றம் முருகரை சேவிக்கவும்.

இவர்களுக்குரிய முக்கிய பரிகாரம்- யாராவது மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும் நிலையில் இருந்தால், முதல் ஆளாக ரத்ததானம் செய்துவிடுங்கள்.

12-ஆமிடப் பார்வைப் பலன்கள்

செவ்வாய் 5-ல் அமர்ந்து தனது எட்டாம் பார்வையால் 12-ஆம் வீட்டையும், சனி 6-ல் அமர்ந்து அதே 12-ஆம் வீட்டை தனது ஏழாம் பார்வையாலும் ஒருசேர ஏறிட்டு நோக்குவர்.

ஆக, 12-ஆம் வீடு எனும் விரயஸ்தானம் பாழாகிறது. 12-ஆம் இடம் தூர இடத்திற்குப் பிரிந்து செல்வதைக் குறிக்கும். இதனை சுபர்கள் பார்த்தால், மகிழ்ச்சியாக வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளலாம். ஆனால், இரு அசுபர்கள் ஒரே நேரத்தில் பார்க்கும்போது அது விரும்பத்தகாத பயணமாகவே அமைந்து விடும். சிறைச்சாலை, மருத்துவமனை, மறைந்து வாழ்வது, ஊரைவிட்டு ஓடும் நிலை என இவ்வா றான பல காரணங்களால் ஜாதகர் இயல்பு வாழ்க்கையிலி−ருந்து மறைந்து வாழ நேரிடும்.

5, 6-ல் உள்ள செவ்வாய், சனி 8-ஆமிடம், 12-ஆமிடங்களைப் பார்ப்பதால் அனேகமாக சிறைச்சாலையில் வாழ நேரிடும். செவ்வாய், சனி தசாக் காலங்களில் அதிக கவனம் தேவை அல்லது சிறையில் சுகமாக வாழ முதலி−லேயே ஏற்பாடு செய்துகொள்ளவேண்டியதுதான்.

பரிகாரங்கள்

ஒழுங்காக, முறையாக வாழ்க்கை நடத்து வதும் நல்லது.

பைரவருக்கு மஞ்சள் துணியில் 21 மிளகை வைத்து, நெய்யிட்டு, மஞ்சள்நிறத் திரியிட்டு தேங்காயில் விளக்கேற்றவும்.

திருவெண்காடு அகோரசுவாமியை வணங் கவும்.

காகத்திற்கு எள்ளன்னம் அல்லது துவரம் பரப்பு சேர்த்த கலவை சாதம் படைத்து விநியோகம் செய்யவும்.

எந்த லக்னமாயினும் செவ்வாய் 6-லும், சனி 7-லும் அடுத்தடுத்து அமர்ந்த பலன்கள்...

செவ்வாய் 6-ல் அமர்ந்து 9-ஆமிடத்தையும், சனி 7-ல் அமர்ந்து லக்னத்தையும் பார்வை யிடுவர்.

6-ல் அமர்ந்த செவ்வாய், தனது நான்காம் பார்வையால் 9-ஆமிடத்தையும், சனி ஏழில் அமர்ந்து 3-ஆம் பார்வையால் அதே 9-ஆமிடத்தையும் பார்வையிடுவர்.

9-ஆமிடப் பார்வைப் பலன்கள்

9-ஆமிடம் தந்தையைக் குறிக்கும். இந்த இரு பாவர்களின் பார்வை இவர்களது தந்தையின் சுகத்தைக் குலைக்கும். அவர் எப்போதும் சுணங்கியே இருப்பார்.

பூமி, வேலை சம்பந்தமான அதிர்ஷ்டம் சற்றே கெடும். ஏனோ நம்பிக்கையின்றி காலந் தள்ளுவார்கள்; சுயபச்சாதபம் கொள் வார்கள். "உலகத்திலேயே நான்தான் ரொம்ப பாவம். மிக அதிர்ஷ்டக்கட்டை' என புலம் பித்தள்ளுவர்.

ஒருவேளை அதிர்ஷ்டம் வந்து கதவைத் தட்டினாலும், செவ்வாயின் கோபத்தாலும், சனியின் சோம்பேறித்தனத்தாலும் அதிர்ஷ்ட தேவதையின் அழைப்பை நிராகரித்துவிடுவார் கள். அப்புறம் உட்கார்ந்து புலம்புவர். இதன் காரணமாக தெய்வத்தையும் திட்டுவார்கள்.

9-ஆம் வீடு உயர்ந்த எண்ணங்களை, நேர்மையான மனசாட்சியை, நல்ல ஆசை களைக் குறிக்கும். இந்த 9-ஆம் வீட்டைப் பார்க்கும் செவ்வாயும் சனியும், ஜாதகருக்கு கெட்ட கெட்ட நினைவுகளையும், குற்ற முள்ள மனதையும், உருப்படாத ஆசை களையும் அள்ளித் தந்துவிடுவர். எனவே இத்தகைய அமைப்புடைய ஜாதகர்கள், தன்னிறைவற்றவர்களாக உலா வருவர்.

பரிகாரங்கள்

தியானம் செய்தும், நல்லவர்களோடு பழக்கம் வைத்தும், உழவாரப்பணி செய்தும் மனநிலையை சமப்படுத்த முயற்சிக்கவும்.

பைரவருக்கு 21 மிளகை மஞ்சள் துணியில் முடிந்து, விளக்கெண்ணெய் ஊற்றி, மஞ்சள் நிறத் திரியிட்டு விளக்கேற்றவும். ஆரஞ்சுப் பழம், சர்க்கரைப்பொங்கல் படைக்கவும்.

குச்சனூர் சனி வழிபாடு நன்று.

ஆஞ்சனேயரை வழிபடவும்.

அருகிலுள்ள முருகன் கோவிலில் தீபமேற் றவும். விளக்கேற்ற அர்ச்சகருக்கு நல்லெண் ணெய் வாங்கிக் கொடுக்கவும்.

செவ்வாய் 6-ஆமிடத்தில் அமர்ந்து, தனது 8-ஆம் பார்வையால் லக்னத்தையும், சனி ஏழில் ஏறி, அதே லக்னத்தை தனது ஏழாம் பார்வையாலும் பார்க்கின்றனர்.

லக்னப் பார்வைப் பலன்கள்

சனி, செவ்வாய் பார்த்த இடம் பாழ். இவ்வமைப்பில் இவர்களிருவரும் ஜாதகரின் லக்னத்தையே பார்க்கின்றனர். எனில் ஜாதகரின் கதிதான் என்ன? செவ்வாய், சனி இருவரும் ஜாதகரை ஒன்றுக்கும் லாயக்கில்லாதவராக ஆக்கிவிடுவார்கள். ஜாதகர் சம்பந்தமில்லாமல் கோபப்படுவார். சோம்பேறியாக இருப்பார். பயனில்லா செயல்களைப் பரபரவென்று செய்வார். வேலை செய்யும் நேரத்தில் முடங்கிக் கொள்வார். தனது வாழ்வின் பின்னடைவுக்கு அவரே காரணமாக இருப்பார்.

சனியின் ஏழாம் பார்வை ஜாதகருக்கு அவ்வப்போது நோய்த்தாக்கத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். செவ்வாயின் 8-ஆம் பார்வை ஜாதகரை கோபப்படுத்தி, சண்டையிட வைத்து அவப்பெயரை வரவழைத்துவிடும்.

லக்னாதிபதி நன்றாக இருந்தாலும், லக்னத்தை சுபர் பார்த்தாலும் ஜாதகரின் நிலை ஓரளவு மேம்பாடாக அமையும்.

பரிகாரங்கள்

செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில், பைரவருக்கு அகல் விளக்கில் 27 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி, சிவப்புத் நூலில் திரியிட்டு விளக்கேற்றவும். சாம்பார் சாதம் நைவேத்தியம் செய்யவும்.

வாழ்நாள் முழுக்க சிவ வழிபாடு நன்று.

காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும் ஏற்றலாம்.

பழமுதிர்ச்சோலை முருகரை வணங்கவும்.

மலைமேலுள்ள தெய்வ வழிபாடு சிறப்பு.

எந்த லக்னமாயினும் செவ்வாய் 7-லும், சனி 8-லும் அமர்ந்த பலன்...

செவ்வாய் 7-ல் நின்று தனது நான்காம் பார்வையால் 10-ஆமிடத்தைப் பார்ப்பார். சனி 8-ல் ஏறி நின்று தனது 3-ஆம் பார்வையால் பத்தாமிடத்தில் பார்வையைப் பதிப்பார்.

10-ஆமிடப் பார்வைப் பலன்கள்

10-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானம். கௌரவத்துக்குரிய இடம். 10-ஆமிட அதிபதி நல்ல நிலையில் இருந்து, 10-ஆமிடத்தை வேறொரு சுபகிரகமும் பார்த்தால் இவர் களுக்கு தொழில் அமைய வாய்ப்புண்டு. எனினும் தொழிலில் இவர்களின் உயரிய லட்சியத்தை எட்டிப்பிடிக்க முடியாமல் தடை வந்துகொண்டே இருக்கும். இதே தொழிலிலுள்ள அல்லது அரசியலிலுள்ள மற்றவர்களின் சாதனைகள்- அது சிறிய அளவில் இருப்பினும் பெரிதாகப் பேசப்படும். ஆனால் இவ்வமைப்புள்ள ஜாதகர்கள் உண்மையாகவே சாதனை புரிந்திருந்தாலும், அவை ஏனோ மறக்கப்பட்டுவிடும்; மறைக்கப் பட்டுவிடும். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்காமல் போகக்கூடும். கூடியமட்டும் இவ்வகை அமைப்பு ஜாதகர்கள், சொந்தத் தொழில் செய்ய ஆயிரம்முறை யோசிக்க வேண்டும்.

சிலர் வேலையில் இருந்துகொண்டு, பின் தொழில் தொடங்கலாம் என யோசனை செய்வர். இவ்வமைப்பு ஜாதகர்கள் வேலையை விடாமல், "சைடு பிஸினஸாக' தொழில் தொடங்கலாம். ஏனெனில் எந்த நேரமும் இவர்கள் காலை வார செவ்வாய், சனி காத்துக் கொண்டிருப்பார்கள்; கவனம் தேவை.

பரிகாரம்

தொழில் தொடங்குவதுபற்றி நிறைய யோசனையும் ஆலோசனையும் தேவை.

பைரவருக்கு, இரும்பு அகல் விளக்கில் 26 மிளகைப் பொட்டலம் கட்டி, நீலநிறத் திரியிட்டு, நல்லெண்ணெய் தீபமேற்ற வேண்டும்.

பொங்கு சனீஸ்வர பகவானை வழிபடவும்.

திருச்செந்தூர், வைத்தீஸ்வரன்கோவில் முருகனை வழிபடவும்.

சிவப்பு, நீலநிறப்பொருட்கள் தானம் நன்று.

செவ்வாய் 7-ஆமிடத்திலிருந்து தனது எட்டாம் பார்வையால் 2-ஆமிடத்தையும், சனி 8-ஆமிடத்தில் அமர்ந்து தனது 7-ஆம் பார்வையால் அதே 2-ஆமிடத்தையும் எட்டிப் பார்ப்பார்கள்.

2-ஆமிடப் பார்வைப் பலன்கள்

ஆக, இரு பாவர்களும் தங்களது முழு கெட்ட பார்வையால் 2-ஆமிடத்தைப் பார்த்து அதனைப் பாழாக்குவர். 2-ஆமிடம் செல்வம், தனம், பணவரவு பற்றிக் கூறுவது. இவர்களின் பார்வை வருகிற பணத்தையும் வற்றிப்போக வைத்துவிடும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். 2-ஆமிட அதிபதி நன்றாக இருந்து, 2-ஆமிடத்தை வேறு சுபர் பார்த்தால் பணவரவு நன்றாக அமையும்.

பேச்சு தடுமாறும். குடும்பத்தில் குழப்பம், அவ்வப்போது கும்மியடித்து விட்டுப் போகும். அசையும் சொத்துகள் எங்காவதுபோய் ரெஸ்ட் எடுத்துவிட்டு வரும்.

இவ்வகை ஜாதகர்களுக்கு தன் மனதில் இருக்கும் விஷயத்தை, வெளியில் கோர்வையாகச் சொல்லவராது.

சமயத்தில் பேச்சில் பொய்யைக் கலந்தடிப் பார்கள். இவர்களுக்கு கண் அல்லது பல் சற்று சேதமடைந்திருக்கும்.

இரு பாவர்களும் தொழில் ஸ்தானத் தையும், தனவரவு ஸ்தானத்தையும் பார்க் கிறார்கள். எனவே இவ்வமைப்பு ஜாதகர்கள் சட்டென்று தொழில் தொடங்குதல் கூடாது. தொடங்கினால், ஏதோ மாதச் சம்பளம் வாங்கி, குடும் பத்தை சற்று கௌரவமாக ஓட்டிக் கொண்டிருந்ததும் கெட்டுப்போய் விடும். எனவே கவனம் தேவை.

பரிகாரம்

தொழில் தொடங்கும் விஷயத்தில் அகலக்கால் வைக்கக்கூடாது.

பைரவருக்கு, 24 மிளகைப் பொட்டலம் கட்டி அகல்விளக்கிலிட்டு, தேங்காய் எண்ணெயூற்றி தாமரை நூல் திரிபோட்டு தீபமேற்றவும்.

பணம் வேண்டும் இடமாதலால், மகாலட்சுமியுடன்கூடிய பெருமாளை வணங்கவும்.

சனீஸ்வரருக்கு எள் மிட்டாய் படைத்து தானமளிக்கவும்.

மலைமேலுள்ள முருகரை வணங்கவும்.

மலைமேலுள்ள தெய்வ வழிபாடு நன்று.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 94449 61845

bala090819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe