சென்ற இதழ் தொடர்ச்சி...

ந்த லக்னமானாலும் 8-ல் செவ்வாய், 9-ல் சனி நின்று பார்க்கும் பலன்...

செவ்வாய் 8-ஆமிடத் தில் நின்று தனது நான்காம் பார்வையால் 11-ஆமிடத் தையும், சனி 9-ல் நின்று தனது மூன்றாம் பார்வை யால் 11-ஆம் இடத்தையும் நோக்குகிறார்கள்.

11-ஆமிடப் பார்வைப் பலன்கள்

Advertisment

மூத்த சகோதரருடன் எப்போதும் சொத்துச் சண்டை வரும். வீடு, மனை வாங்கப் போட்டுள்ள திட்டங்கள் சற்று குளறுபடியாகும். ஆராய்ச்சிக் கல்வியை முடித்துப் பட்டம் வாங்குவதற்குள் பெரும் கஷ்டம் வரும். பதவி சம்பந்தமாக வழக்கு தொடுத் தால், அது அடுத்த ஜென்மத் திலும் முடியுமா என்பது கேள்விக்குறிதான். உணவகம் நடத்துகிறவர்கள், இடவசதிக் குறைபாடு, வேலையாட்கள் தொல்லை, வீண் வதந்தி இவற்றால் அவ்வப்போது நெருடலை சந்திப்பார்கள்.

11-ஆமிடம் லாப ஸ்தானம். இவ்விரு பாவர்களும் சேர்ந்து லாபத்தை, "வரும்; ஆனா வராது' என்ற நிலைக்குக் கொண்டுவந்துவிடுவர்.

பரிகாரங்கள்

Advertisment

அதிக எதிர்பார்ப்புகள் கூடாது.

பைரவருக்கு எலுமிச்சையில் நல்லெண்ணெய் ஊற்றி, 22 மிளகை கருநீலநிறத் துணியில் பொட்டலம் கட்டி. கருநீலத் திரிபோட்டு தீபமேற்றவும்.

திருநள்ளாறு சனீஸ்வரரையும், தர்ப்பாரண்யேஸ் வரரையும் நன்கு வழிபடவும்.

பைரவருக்கு முந்திரி வைத்து வணங்கவும்.

பழனி முருகரை வணங்கி, சித்தரையும் வணங்கிவரவும்.

சமையல் தொழிலாளிக்கு உதவவும்.

செவ்வாய் 8-லிருந்து தனது எட்டாம் பார்வையால் 3-ஆமிடத்தையும், சனி 9-லிருந்து தனது ஏழாம் பார்வையால் 3-ஆமிடத்தையும் நோக்குவர்.

3-ஆமிடப் பார்வைப் பலன்கள்

vv

3-ஆமிடம் வீரம், மனவுறுதியைக் குறிக்கும். ஒன்று, இந்த இருகிரகப் பார்வைகளும் சேர்ந்து ஜாதகரைக் கோழையாக்கிவிடக் கூடும். அல்லது செவ்வாயின் 8-ஆம் பார்வை, ஜாதகரை அதிக முட்டாள்தனமாக கோபப் படுத்த, சனி தனது பார்வைமூலம் அடி வாங்கிக் கொடுக்கவும் கூடும். இந்த இரு பார்வைகளும் சேர்ந்து அநியாயமாக வம்பு பேசுவது, கோள் சொல்லி சண்டை மூட்டிவிடுவது, இரண்டு பேருக்கிடையே யுத்தம் ஆரம்பிக்கச் செய்வது, மொட்டைக் கடுதாசி எழுதி நான்குபேர் வாழ்க் கையை நாசமாக்குவது போன்ற இன்னபிற ரகசிய வேலைகளை ஜாதகரைச் செய்ய வைக்கும். செவ்வாயின் எட்டாம் பார்வை 3-ஆம் வீட்டில் பரவுவதால், எதிரிகளை சற்றே கிலி ஏற்படுத்தச் செய்யும்.

பரிகாரங்கள்

ஜாதகரைச் சுற்றியுள்ளவர்கள், தங்களது குலதெய்வம், இஷ்டதெய்வத்தை நன்கு வேண்டிக்கொள்ளவும். அப்போதுதான் இதுபோன்ற ஆட்களிடமிருந்து தப்பிக்க முடியும்.

இத்தகைய அமைப்புடைய ஜாதகர்களை ஒரு தெருவில் பார்த்தால், அடுத்த தெருவழியாக ஓடிவிடுவது நல்லது.

எந்த லக்னாமாயினும் செவ்வாய் 9-லும் சனி 10-லும் அமர்ந்த பலன்...

செவ்வாய் 9-ல் நின்றும், சனி 10-ல் நின்றும் 12-ஆமிடம், 4-ஆமிடத்தைக் காண்பர்.

செவ்வாய் 9-ல் இருந்து தனது நான்காம் பார்வையால் 12-ஆமிடத்தைப் பார்ப்பார். சனி 10-ல் நின்று தனது மூன்றாம் பார்வை யால் 12-ஆமிடத்தைக் காண்பார்.

12-ஆமிடப் பார்வைப் பலன்கள்

12-ஆமிடம் என்பது விரய ஸ்தானம்.

வெளிநாட்டுப் பயணங்கள் எளிதாகக் கைகூடி வராது. வெளிமாநிலப் பயணங்களும் காலை வாரும். பக்கத்து ஊருக்குப் போவ தற்கே பத்து முறை அல்லாட வேண்டி யிருக்கும். "கூரை ஏறி கோழி பிடிக்க முடியா தவன் வானம் ஏறி வைகுந்தம் போன' கதைதான். கோவில் குளம் பார்க்க நினைத் தாலும், வெளிநாட்டில் போய் நாலு காசு சம்பாதிக்கலாம் என நினைத்தாலும் ஒன்றும் சரிவராது. பயணம் என்று சொன்னாலே செவ்வாயும் சனியும் கட்டை யைப் போட்டுவிடுவார்கள். விரயமும் ஆகாது. அதுசரி; நாலு இடத்துக்குப் போய் நானாவிதமாகப் பார்த்தால்தானே செல வென்ற ஒன்று ஆகும். அல்லது வெளிநாடு, வெளியூர் போய் நாலு காசு சம்பாதித் தால் அதைக்கொண்டு பெருமைக்காக வாவது செலவு செய்யலாம். இங்குதான் எதற்கும் வழியில்லையே! செலவு என்ற ஒரு அயிட்டம் வாழ்க்கையில் கிடையவே கிடையாது. இரு பாவரின் பார்வை சிலசமயம் வேண்டாத செலவுகளைக் கொடுத்துவிடும். சுபர்கள் 12-ஆமிடத்தைப் பார்த்து, 12-ஆம் அதிபதியும் நன்கு அமைந்தால் நிலைமை சுமாராக அமையும்.

பரிகாரங்கள்

தொழில் விஷயமாக வெளிநாடு செல்லவிரும்பினால், ஞாயிற்றுக்கிழ மைகளில் பைரவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, முந்திரி இனிப்பு படைத்து, அகலில் நெய்விட்டு, மஞ்சள் துணியில் 21 மிளகைப் பொட்டலம் கட்டி, மஞ்சள் திரிபோட்டு தீபமேற்றவும்.

உள்ளூரிலுள்ள தெய்வத்தை முதலில் நன்கு வணங்கவும்.

ஜாதகத்தில் 12-ஆமிடம் சுப சம்பந்தம் பெற்றால் மட்டுமே வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்கவும். இல்லாவிடில் வெளிநாடு போய் வெகு சிரமம்ப்படவேண்டி வந்து விடும். சிவபெருமானை வணங்கவும்.

செவ்வாய் 9-லிருந்து தனது 8-ஆம் பார்வையாலும், சனி 10-ஆம் இடத்திலிருந்து தனது 7-ஆம் பார்வையாலும் 4-ஆம் வீட்டைக் காண்கிறார்கள்.

4-ஆமிடப் பார்வைப் பலன்கள்

4-ஆமிடம் எனும் தாய் ஸ்தானத்தை, இருபாவர்களும் ஒருசேர நோக்குவதால், தாயின் உடல்நிலை சீராக இராது. ஒன்று எங்காவது அடிபட்டுக்கொள்வார். அல்லது நோயின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும். தொடக்கக் கல்வியை நல்லபடியாக முடிப்பது சற்று சந்தேகம்தான்.

4-ஆமிடம் சுகத்தைக் குறிக்கும். எனவே இவர்களுக்கே எப்போதும் நோய்த் தாக்கமும் அவ்வப்போது காயம் ஏற்படுவதும் நடக்கும்.

வாகனத்தில் போகும்போது, வாகனம் அங்கங்கே நெளிந்துவிடும். தரையில் சிந்தியுள்ள எண்ணெய் வழுக்கி விழுந்து விடுவார்கள். இது அவ்வபோது நடக்கும். அடுத்தவர் மனை, வீடு ஆகியவற்றை ஆட்டையைப் போட ஆசை ஆசையாக வரும். இவர்களது பூர்வீக சொத்தை விற்பது சம்பந்தமாக உடன் பிறந்தோருடனும், தாயுடனும் சண்டை போடுவார்கள். பள்ளி, கல்லூரிக்கு அனுப்பினால் அங்கு சிலர் வாத்தியாரை அடித்துவிட்டு வந்துவிடுவர். நான்காம் வீட்டை செவ்வாய் தனது 8-ஆம் பார்வையால் பார்க்கும்போது, 4-ஆமிடம் சம்பந்தமான காரகங்களையும், காரகர் களையும் ரத்தம் சிந்த வைத்துவிடும்.

பரிகாரங்கள்

பைரவருக்கு திங்கட்கிழமைதோறும் அகலில் நெய்விட்டு, 20 மிளகை சந்தனநிறத் துணியில் பொட்டலம் கட்டி, தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றவும்.

சுசீந்திரம் சென்று தாணுமாலய சுவாமியை தரிசனம் செய்யவும்.

கடல், நீர் சார்ந்த இடங்களிலுள்ள முருகரை வணங்கவும்.

அடிக்கடி வரும் கோபம் குறைய, திருத்துறைப்பூண்டி அருகே இடும்பவனம் எனும் தலத்திலுள்ள சத்குணநாதர், மங்கள நாயகியை வணங்கவும்.

அடுத்தவர்களை மூர்க்கமாகத் தாக்கு வதைத் தவிர்க்கவும்.

செவ்வாய், சனி இருவரும் 4, 12-ஆம் இடங்களைப் பார்ப்பதால், 4-ஆமிட காரகங்களான தாய், வீடு, மனை, வாகனம், கல்வி, சொத்து போன்றவை கைநழுவ நேரிடும்.

எந்த லக்னாமாயினும் செவ்வாய் 10-லும் சனி 11-லும் இருக்கும் பலன்...

செவ்வாய் 10-லிருந்தும், சனி 11-லிருந்தும் லக்னத்தையும் 5-ஆமிடத்தையும் அவதானிப் பார்கள்.

செவ்வாய் 10-லிருந்து தனது நான்காம் பார்வையாலும், சனி 11-லிருந்து தனது மூன்றாம் பார்வையாலும் லக்னத்தை கவனிப்பர்.

லக்ன பார்வைப் பலன்

லக்னத்தை இரு பாவர்களும் ஒரே நேரத்தில் பார்வையிடும்போது, ஏதோ ஒன்றில்லாத இன்னொரு காரணத் தால், ஜாதகருக்கு கௌரவம் என்பதே இல்லாமல் போய்விடும். "பஹந்ங் ச்ர்ழ் ஏழ்ஹய்ற்ங்க்' எனும் நிலையில் இருப்பர். "எடுப்பார் கைப்பிள்ளை'போல், ஒரு நிராதரவான நிலையில் இருப்பர். இவர்களின் யோசனை களை யாரும் செவிமடுக்க மாட்டார்கள். என்ன சொன்னாலும் அது புறக்கணிக்கப்படும். "உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடு' என்ற சொற்கள் இவர்களை எப்போதும் சுற்றி நிற்கும். சுகம், பெருமை எதுவும் கிடைக்காது.

இந்த உலகத்தில் நாம் பிறந்ததே தண்டம் என்ற எண்ணத்திற்குத் தள்ளப்படுவர்.

இவர்கள் என்ன முயற்சித்தாலும் அது நடக்காது.

பரிகாரங்கள்

உங்கள் ஊரிலுள்ள சிவனையும் அம்பாளையும் நன்கு வணங்கவும்.

அப்படியே காலபைரவரையும் வணங்கவும்.

உங்களால் முடிந்த அதிகபட்ச உழவாரப் பணி செய்யவும்.

குளங்களை, ஏரி, வாய்க்கால்களை சுத்தம் செய்யவும்.

நீங்கள் பணம் செலவழித்து பரிகாரம் செய்ய அவ்வளவாக இயலாது. இறைவன் நீங்கள் எவ்வளவு செலவுசெய்து பரிகாரம் செய்கிறீர்கள் என்பதைக் குறித்துக்கொள்ள மாட்டார். எவ்வளவு மனத்தூய்மையுடன், நிறையுள்ளமாக கோவிலையும் குளத் தையும் சுத்தம் செய்கிறீர்களோ- அதுவே அவருக்கு பெருவிருப்பமான செயல். அதுவே போதும்.

உங்கள் லக்னாதிபதி ஓரளவு நல்ல நிலையில் இருப்பினும் வாழ்க்கை சுமாராக ஓடிவிடும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 94449 61845